தேர்தலில் வாக்களிக்கும் வகையில் அனைத்து நிறுவனங்களும் நாளை விடுமுறை அளிக்க வேண்டும் என்றும், தவறும் நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை  மேற்கொள்ளப்படும் என்று தொழிலாளர் ஆணையர் எச்சரித்துள்ளார்.
 
இதுகுறித்து தமிழக தொழிலாளர் ஆணையர் ஆர்.நந்தகோபால் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது: தமிழகத்தில் மக்களவை தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நாளை நடைபெறுகிறது.
 
இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவுரைகளின்படி தமிழ்நாடு முழுவதும் உள்ள தொழில் மற்றும் வணிக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், தோட்ட நிறுவனங்கள், கடைகள், தொழிற்சாலைகள், பொதுத்துறை நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களில் பணிபுரியும் அனைத்து தொழிலாளர்கள், தினக்கூலி, தற்காலிக தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்கள் ஆகியோருக்கு தேர்தல் நாளான 18ம் தேதி (நாளை) அவர்கள் வாக்களிக்கும் வகையில் ஏதுவாக ஊதியத்துடன் கூடிய ஒருநாள் விடுப்பு வழங்கப்பட வேண்டும்.
 
18ம் தேதி விடுமுறை அளிக்க தவறும் நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை  மேற்கொள்ளப்படும்.
 
இது குறித்து புகார் அளிக்க மாவட்ட அளவிலும், மாநில அளவிலும் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. மாநில கட்டுப்பாட்டு அறை சென்னையில் தொழிலாளர் ஆணையர் அலுவலகத்திலும், மாவட்ட அளவில் அந்தந்த மாவட்ட தொழிலாளர் நல அலுவலகங்களிலும் அமைக்கப்பட்டுள்ளது. விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் தொடர்பாக பொதுமக்கள், தொழிலாளர்கள் புகார் தெரிவிக்கலாம்.  
 
மாநில அளவிலான கட்டுப்பாட்டு அறை அலுவலர் பெயர் மற்றும் பதவி, செல்போன் எண்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, பொன்னுசுவாமி (மாநில அளவிலான ஒருங்கிணைப்பாளர்) 9600198875, 044-24321438,
விமலநாதன் (தொழிலாளர் துணை ஆணையர்) 8778270221,
புனிதவதி (தொழிலாளர் துணை ஆணையர்) 9786910097,
வெற்றிச்செல்வி (தொழிலாளர் உதவி ஆணையர்) 9840120925,
ஜெயலட்சுமி (தொழிலாளர் உதவி ஆணையர்) 9500171623,
ஜானகிராமன் (தொழிலாளர் உதவி ஆணையர்) 8610308192 ஆகியோருக்கு புகார் அளிக்கலாம். என அதில் கூறப்பட்டுள்ளது.