நடிகர் சரத்குமார் மற்றும் சசிக்குமார் நடிப்பில் உருவாகி வரும் நாநா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இயக்குனர்கள் கே எஸ் ரவிக்குமார், மணிரத்னம், கே பாலசந்தர், பாலு மகேந்திரா, பாலா, பாரதிராஜா உள்ளிட்டவர்களுடன் இணைந்து பல ஹிட் படங்களை கொடுத்தவர் நடிகர் சரத்குமார்.

சினிமாவைத் தொடர்ந்து அரசியலிலும் கால் பதித்தார். 2007ம் ஆண்டு அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியை தொடங்கினார். அரசியலில் நுழைந்த பிறகு ஒரு சில படங்களில் நடித்து வந்த சரத்குமார், அதன் பின்னர் அரசியலில் முழு கவனம் செலுத்தி வந்தார். இந்நிலையில், மீண்டும் சினிமாவிற்கு ரிஎண்ட்ரி ஆகிறார்.

விஜய் ஆண்டனி நடித்த சலீம் திரைப்படத்தை இயக்கிய நிர்மல் குமார் இயக்கத்தில் ஆக்‌ஷன் த்ரில்லர் பாணியில் உருவாகி வரும் படம் ‘நாநா’. இப்படத்தில் சசிகுமாருடன் இணைந்து சரத்குமார் மற்றும் பாரதிராஜா ஆகியோரும் நடித்து வருகின்றனர். இப்படத்தை கல்பதரு பிக்சர்ஸ் சார்பில் பிகே ராம் மோகன் தயாரித்து வருகிறார்.

இந்நிலையில், இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானதை தொடர்ந்து மோஷன் போஸ்டரும் தற்போது வெளியாகியுள்ளது. இப்படத்தில் நடிகர் சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். ஹர்ஷவர்தன் ராமேஸ்வர் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

மேலும் சசிக்குமார் நடிப்பில் நாடோடிகள் 2, கென்னடி கிளப், கொம்பு வச்ச சிங்கம்டா, எனை நோக்கி பாயும் தோட்டா உள்ளிட்ட திரைப்படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன.