தேசியம் தொழில்கள் வணிகம்

தொழில் நிறுவனங்கள் புதிய வங்கி தொடங்க அனுமதிப்பது மோசமான யோசனை- ரகுராம் ராஜன்

பெரு நிறுவனங்களும், தொழில் நிறுவனங்களும் புதிதாக வங்கிகள் தொடங்க அனுமதிக்கலாம் என்று ரிசர்வ் வங்கி நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளது மோசமான யோசனை என ரகுராம் ராஜன் கூறியுள்ளார். கடந்த வாரம் தனியார் வங்கிகளின் உரிமையாளர்கள், பங்குதாரர்கள் ஆகியோருக்கான நெறிமுறைகளை மறு ஆய்வு செய்வதற்காக பி.கே.மொஹந்தி தலைமையில் அமைக்கப்பட்ட குழு தனது பரிந்துரைகளை வழங்கியது. அதில் வங்கிகள் ஒழுங்குமுறை சட்டத்தில் உரிய திருத்தங்களை செய்த பிறகு பெருநிறுவனங்களும், தொழில் நிறுவனங்களும் வங்கிகள் தொடங்க நடவடிக்கை எடுக்கலாம் என நிபுணர் மேலும் வாசிக்க …..

கல்வி சமூகம் தமிழ்நாடு தெலுங்கானா

தமிழக மருத்துவப் படிப்பு தரவரிசைப் பட்டியலில் முறைகேடு சர்ச்சை

தமிழக அரசு வெளியிட்டுள்ள மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியலில், தெலுங்கானாவை சேர்ந்த 34 பேர் இடம் பெற்றுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் மருத்துவ கலந்தாய்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பிற மாநில தரவரிசை பட்டியலில் இடம்பெற்றுள்ள மாணவர்களின் பெயர்கள் தமிழக அரசின் தரவரிசைப் பட்டியலிலும் இடம் பெற்றிருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% உள் ஒதுக்கீடு இந்த ஆண்டு அமல்படுத்தப்படும் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்ட நிலையில், முதலாமாண்டு மேலும் வாசிக்க …..

கட்சிகள் கல்வி சமூகம் திமுக தேசியம் பாஜக

சமூக நீதியை, இடஒதுக்கீட்டை ஒழித்துக்கட்ட பாடுபடும் பாஜக அரசு- தலைவர்கள் கண்டனம்

மத்திய அரசின் 11 மருத்துவ கல்லூரிகளில் தனி நுழைவுத் தேர்வு நடத்த அனுமதித்துள்ளதால் நீட் தேர்வு முறையை ரத்து செய்ய வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், கல்வியாளர்களும் வலியுறுத்தியுள்ளனர். இது தொடர்பாக ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், நாடு முழுவதும் ஒரே மாதிரியான நுழைவுத் தேர்வு எனக் கூறி நீட்டைத் திணித்து விட்டு, மத்திய அரசின் மருத்துவக் கல்லூரிகளில் மட்டும் தனி நுழைவுத் தேர்வுக்கு மத்திய பாஜக அரசு அனுமதி மேலும் வாசிக்க …..

கட்சிகள் கல்வி சமூகம் தேசியம் பாஜக

மத்திய அரசின் கல்வி நிறுவனங்களுக்கு மட்டும் தனி நுழைவுத் தேர்வு- வலுக்கும் கண்டனங்கள்

மத்திய பாஜக அரசு, மத்திய அரசின் கல்வி நிறுவனங்களுக்கு மட்டும் ‘INI-CET’ எனும் தனி நுழைவுத் தேர்வை அறிவித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. எய்ம்ஸ், ஜிப்மர் உள்ளிட்ட 11 கல்லூரிகளுக்கு நாட்டின் சீர்மிகு கல்வி நிறுவனங்கள் என அந்தஸ்து அளித்து, இந்த கல்லூரிகளில் எம்.டி., எம்.எஸ் உள்ளிட்ட உயர் மருத்துவப் படிப்புகளில் சேர ‘INI-CET’ எனும் பெயரில் தனி நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது இந்நிலையில் மருத்துவ முதுநிலைப் படிப்புகளுக்கான நீட் தேர்விலிருந்து மாநிலங்களுக்கு மேலும் வாசிக்க …..

அரசியல் கட்சிகள் கல்வி சமூகம் திமுக தேசியம் பாஜக

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழைக் கற்பிக்க நிபந்தனையா.. மு.க.ஸ்டாலின் கண்டனம்

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் கற்பிக்க தடை போடுவதை கைவிட்டு, தமிழ் மொழியின் மீதுள்ள வெறுப்புணர்வை பாஜக அரசு கைவிட வேண்டும் என விமர்சித்துள்ளார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். இதுதொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஒரு வகுப்பில் 20 மாணவர்கள் விரும்பினால் மட்டுமே தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் பயிற்றுவிக்கப்படும் என்று மத்திய பாஜக அரசு, ‘தமிழுக்குத் தனியொரு விதி’ உருவாக்கி அறிவித்திருப்பதற்கு, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மேலும் வாசிக்க …..

கேளிக்கை சினிமா

ஒளிப்பரப்புத்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டிற்குள் வந்தது OTT தளங்கள்

இணையதளத்தில் பதிவேற்றப்படும் செய்திகள், நிகழ்ச்சிகள், நெட்ஃப்ளிக்ஸ் போன்ற பட ஊடகங்கள் அனைத்தையும் மத்திய அரசின் தகவல் ஒளிப்பரப்புத்துறை அமைச்சகத்தின் கீழ் கொண்டு வந்து மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. கொரோனா காலத்தில் ஓடிடியில் திரைப்படங்கள் வெளியிடுவது அதிகரித்துள்ளது. திரையரங்குகளில் வெளியிடப்படும் திரைப்படங்கள் தணிக்கை செய்யப்படுகிறது. ஆனால், ஓடிடி தளங்களில் வெளியிடப்படும் திரைப்படத்திற்கு தணிக்கை அவசியம் இல்லை என்ற நிலை உள்ளது. குறிப்பாக நெட்ஃப்ளிக்ஸ், அமேசான், ஜி5, ஹாட்ஸ்டார் உள்ளிட்ட ஓடிடி தளங்களில் வெப் சீரிஸ் அதிகமாக வெளியிடப்படுகிறது. மேலும் வாசிக்க …..

அரசியல் சட்டம் தேசியம்

சிபிஐ மாநிலத்திற்குள் அனுமதியின்றி நுழையக் கூடாது; பஞ்சாப் அரசு அதிரடி

மாநிலத்திற்குள் விசாரணை நடத்த மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) அனுமதியின்றி நுழையக் கூடாது என அதிரடியாக அறிவித்தது பஞ்சாப் மாநில அரசு. மத்தியப் புலனாய்வுத் துறையின் அதிகார வரம்பு, டெல்லி சிறப்புக் காவல் நிறுவனச் சட்டத்தின் (Delhi Special Police Eshtablishment – DSPE 1946) மூலம் வரையறுக்கப்பட்டுள்ளது. இந்தச் சட்டம் மத்திய ஆட்சிப் பகுதிகளின் காவல்துறைக்கு இருக்கும் அதே அதிகாரங்களையும் பொறுப்புகளையும் சிபிஐக்கும் வழங்குகிறது. டெல்லியைத் தவிர, இந்தியாவின் எந்த மாநிலத்திலும் சிபிஐ, தனது அதிகாரத்தைப் மேலும் வாசிக்க …..

கல்வி சமூகம்

கல்லூரிகளில் விடுதிகளை திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள்- யுஜிசி அறிவிப்பு

பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் விடுதிகளை திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) வெளியிட்டுள்ளது. மத்திய அரசு அக்டோபர் 15க்கு பிறகு பள்ளி கல்லூரிகளை திறப்பது குறித்து மாநிலஅரசுகள் முடிவு செய்து கொள்ளலாம் என அறிவித்திருந்தது. எனினும் கொரோனா அச்சம் காரணாக பல மாநிலங்களில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் இன்னமும் திறக்கப்படவில்லை. தமிழகத்தில் நவம்பர் 16 முதல் பள்ளி, கல்லூரிகளை திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் விடுதிகளை திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள், நிபந்தனைகள் ஆகியவற்றை மேலும் வாசிக்க …..

அரசியல் கேரளா தேசியம்

மேற்கு வங்கம், மகாராஷ்டிராவைத் தொடர்ந்து சிபிஐ விவகாரத்தில் கேரள அரசின் அதிரடி முடிவு

ராஜஸ்தான், மேற்கு வங்கம், மகாராஷ்டிராவைத் தொடர்ந்து, மாநிலத்திற்குள் விசாரணை நடத்த சிபிஐ அனுமதியின்றி நுழையக் கூடாது என அதிரடியாக அறிவித்தது கேரள அரசு. மத்திய புலனாய்வுத் துறைக்கு வழங்கப்படும் வழக்குகளை, நாட்டில் உள்ள எந்த மாநிலங்களுக்கும் சென்று தேவையான விசாரணை மேற்கொள்ள சிபிஐ அதிகாரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநில அரசுகளிடம் அனுமதி பெறாமலே விசாரணைக்காக மாநிலங்களுக்குள் செல்லலாம். ஆனால் சிபிஐக்கு வழங்கப்பட்டு வந்த இந்த பொது இசைவை கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ராஜஸ்தான், மேலும் வாசிக்க …..

அரசியல் தேசியம் வணிகம்

அரசின் 6 விமான நிலையங்கள் 50 ஆண்டுகளுக்கு குத்தகை: அதானி ஒப்பந்தம்

மங்களூரு விமான நிலையத்திற்குப் பிறகு, முன்னாள் பிரதமர் சவுத்ரி சரண் சிங் பெயரிடப்பட்ட லக்னோ சர்வதேச விமான நிலையத்தை அதானி குழுமத்திற்கு 50 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு ஒப்படைத்துள்ளது இந்திய விமான நிலைய ஆணையம் (Airports Authority of India). மத்திய அரசு பிப்ரவரி 2019ல் இந்தியாவின் 6 முக்கிய விமான நிலையத்தைத் தனியார்மயமாக்கத் திட்டமிட்டது. இதன்படி லக்னோ, அகமதாபாத், திருவனந்தபுரம், ஜெய்ப்பூர், மங்களூரு மற்றும் குவகாத்தி விமான நிலையங்களைக் குத்தகை விடுவதற்கான பணிகளைத் துவங்கியது. திருவனந்தபுரம் விமான மேலும் வாசிக்க …..