சமூகம் தேசியம் மருத்துவம்

மகாராஷ்டிரா மாநில அரசு மருத்துவமனையில் தீ விபத்து- 10 பச்சிளம் குழந்தைகள் பலி

மகாராஷ்டிரா மாநில அரசு மருத்துவமனை குழந்தைகள் சிகிச்சைப் பிரிவில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பச்சிளம் குழந்தைகள் உயிர் இழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் பந்த்ரா மாவட்டத்தில் 4 மாடி அரசு பொது மருத்துவமனை இயங்கி வருகிறது. குறைமாதத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கும், பிறக்கும் போதே ஏதாவது குறைபாடு உள்ள குழந்தைகளுக்கும் சிகிச்சை அளிப்பதற்கென இந்த மருத்துவமனையில் ஸ்பெஷல் வார்டு உள்ளது. இங்குள்ள குழந்தைகள் சிகிச்சைப்பிரிவில் பிறந்து சில நாட்கள் ஆனது முதல் மேலும் வாசிக்க …..

அரசியல் இயற்கை தேசியம் விவசாயம்

விவசாயிகள் போராட்ட பின்னணியில் பாகிஸ்தான், சீனா- சர்ச்சையில் மத்திய பாஜக அமைச்சர்

வேளாண் சட்டங்களை எதிர்த்து நடந்து வரும் விவசாயிகளின் போராட்ட பின்னணயில் பாகிஸ்தானும், சீனாவும் இருந்து கொண்டு தூண்டி விடுவதாக இந்திய நுகர்வோர் துறை அமைச்சர் வெளியிட்ட கருத்தால் சர்ச்சை வெடித்து உள்ளது. நாட்டின் முதுகெலும்பு எனக் கூறப்படும் விவசாயத்தையும் கார்ப்பரேட் வசம் தாரைவார்க்கும் வகையில் மத்திய பாஜக அரசு மேற்கொண்டுள்ள புதிய மூன்று வேளாண் சட்டங்களுக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி, தலைநகர் டெல்லியில் கடந்த 15 நாட்களாக தொடர் மேலும் வாசிக்க …..

சமூகம் தேசியம் பெண்கள்

பாலியல் குற்றங்களுக்கு மரண தண்டனை.. மகாராஷ்டிராவில் அமலாகும் ‘சக்தி சட்டம்’

மகாராஷ்டிரா மாநிலத்தில் ‘சக்தி சட்டம்’ என்ற பெயரில் புதிய சட்டத்திருத்த மசோதா கொண்டுவரப்பட்டு, பாலியல் குற்றங்களுக்கு மரண தண்டனை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. நாடு முழுவதும் பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை மற்றும் பாலியல் துன்புறுத்தல் சம்பவங்கள் அதிகரித்து வருவகின்றன. இதை தடுக்க கடுமையான சட்டங்கள் இயற்றப்பட வேண்டும் என்று கோரிக்கை தொடர்ந்து வலுத்து வருகிறது. இந்நிலையில் மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே தலைமையிலான மாநில அரசு, பாலியல் கொடுமைகளை தடுக்க சக்தி சட்டம் மேலும் வாசிக்க …..

அரசியல் இயற்கை தேசியம் விவசாயம்

மகாராஷ்டிரா எம்எல்சி தேர்தலில் மோசமான தோல்வியால் பாஜக அப்செட்

மகாராஷ்டிரா மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டமேலவை (Maharashtra Legislative Council) தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி படுதோல்வி அடைந்து உள்ளது. மகாராஷ்டிராவில் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தலைமையிலான மகா விகாஸ் அகாடி கூட்டணி அரசு ஆட்சி செய்கிறது. இதில், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இங்கு சமீபத்தில் சட்டப்பேரவை மேலவை தேர்தல் நடைபெற்றது. மொத்தமுள்ள 78 மேலவை இடங்களில், 66 இடங்கள் தேர்தல் மூலமும், 12 இடங்கள் ஆளுநர் நியமனம் மேலும் வாசிக்க …..

அரசியல் உச்ச நீதிமன்றம் சட்டம் தேசியம்

எனது பதிவுகளைத் திரும்பப் பெறவோ, மன்னிப்பு கேட்கவோ மாட்டேன்- நடிகர் குணால் கம்ரா

தனது கருத்துகளைத் திரும்பப் பெறவோ அல்லது மன்னிப்பு கேட்கவோ விரும்பவில்லை என உச்சநீதிமன்ற அவமதிப்பு தொடர்பாக நடிகர் குணால் கம்ரா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலம் ராய்காட் மாவட்டம் அலிபாக்கை சேர்ந்த கட்டிட உள்வடிவமைப்பாளர் நாயக்கை தற்கொலைக்கு தூண்டிய புகாரில் கைது செய்யப்பட்ட அர்னாப் கோஸ்வாமி உள்ளிட்ட 3 பேரும், 14 நாட்கள் காவலில் வைக்கப்பட்டனர். அதனைத்தொடர்ந்து இடைக்கால ஜாமீன் கேட்டு மும்பை உயர்நீதிமன்றம் மற்றும் அலிபாக் செசன்ஸ் நீதிமன்றத்தில் அர்னாப் கோஸ்வாமி உள்பட 3 பேரும் மேலும் வாசிக்க …..

அரசியல் சட்டம் தேசியம்

சிபிஐ மாநிலத்திற்குள் அனுமதியின்றி நுழையக் கூடாது; பஞ்சாப் அரசு அதிரடி

மாநிலத்திற்குள் விசாரணை நடத்த மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) அனுமதியின்றி நுழையக் கூடாது என அதிரடியாக அறிவித்தது பஞ்சாப் மாநில அரசு. மத்தியப் புலனாய்வுத் துறையின் அதிகார வரம்பு, டெல்லி சிறப்புக் காவல் நிறுவனச் சட்டத்தின் (Delhi Special Police Eshtablishment – DSPE 1946) மூலம் வரையறுக்கப்பட்டுள்ளது. இந்தச் சட்டம் மத்திய ஆட்சிப் பகுதிகளின் காவல்துறைக்கு இருக்கும் அதே அதிகாரங்களையும் பொறுப்புகளையும் சிபிஐக்கும் வழங்குகிறது. டெல்லியைத் தவிர, இந்தியாவின் எந்த மாநிலத்திலும் சிபிஐ, தனது அதிகாரத்தைப் மேலும் வாசிக்க …..

அரசியல் கேரளா தேசியம்

மேற்கு வங்கம், மகாராஷ்டிராவைத் தொடர்ந்து சிபிஐ விவகாரத்தில் கேரள அரசின் அதிரடி முடிவு

ராஜஸ்தான், மேற்கு வங்கம், மகாராஷ்டிராவைத் தொடர்ந்து, மாநிலத்திற்குள் விசாரணை நடத்த சிபிஐ அனுமதியின்றி நுழையக் கூடாது என அதிரடியாக அறிவித்தது கேரள அரசு. மத்திய புலனாய்வுத் துறைக்கு வழங்கப்படும் வழக்குகளை, நாட்டில் உள்ள எந்த மாநிலங்களுக்கும் சென்று தேவையான விசாரணை மேற்கொள்ள சிபிஐ அதிகாரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநில அரசுகளிடம் அனுமதி பெறாமலே விசாரணைக்காக மாநிலங்களுக்குள் செல்லலாம். ஆனால் சிபிஐக்கு வழங்கப்பட்டு வந்த இந்த பொது இசைவை கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ராஜஸ்தான், மேலும் வாசிக்க …..

அரசியல்

சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும்- உச்ச நீதிமன்றம்

நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை தொடர்பான வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும். மும்பை போலீசார் சேகரித்த அனைத்து ஆதாரங்களையும் சிபிஐ வசம் ஒப்படைக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் மும்பையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். எனினும், அது தற்கொலையா, கொலையா என்ற சர்ச்சை தொடர்ந்து வருகிறது. சுஷாந்த் சிங் மரணம் தொடர்பாக அவரது சொந்த மாநிலமான பீகாரில் அம்மாநில அரசு விசாரணை நடத்தி வருகிறது. சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொண்ட மேலும் வாசிக்க …..

கொரானா சமூகம் தேசியம் மருத்துவம்

இந்தியாவில் சமூக பரவல், மிக மோசமான நிலையில் உள்ளது.. எச்சரிக்கும் இந்திய மருத்துவ சங்கம்

இந்தியாவில் கொரோனா பாதிப்பு மிக மோசமான நிலையில் உள்ளது, ஸ்டேஜ் 3 பரவலுக்குள் நுழைந்துவிட்டோம், மேலும் சமூக பரவல் தொடங்கிவிட்டதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளது இந்திய மருத்துவ சங்கம். உலக நாடுகளில் கொரோனா பாதிப்பில் இந்தியா 3-வது இடத்தில் உள்ளது. இந்தியாவில் 10,86,476 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தம் 26,951 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். மகாராஷ்டிரா, தமிழகம், டெல்லி, கர்நாடகா மற்றும் குஜராத் மாநிலங்களில் கொரோனா பாதிப்பு மிக அதிகமாக உள்ளது. இந்த 5 மாநிலங்களில் மட்டுமே சுமார் மேலும் வாசிக்க …..

கேளிக்கை கொரானா சினிமா

அமிதாப், அபிஷேக் பச்சனைத் தொடர்ந்து ஐஸ்வர்யா ராய், மகள் ஆராத்யா மருத்துவமனையில் அனுமதி; ரசிகர்கள் பிரார்தனை

கொரோனா தொற்று சிகிச்சை பெறுவதற்காக நடிகை ஐஸ்வர்யா ராய், அவரது மகள் ஆராத்யா ஆகியோர் மும்பை நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்தியாவிலேயே மகாராஷ்டிராவில் தான் கொரோனா பாதிப்பு மிக மோசமாக உள்ளது. மகாராஷ்டிராவில் தற்போது ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 8 ஆயிரத்தை தாண்டியுள்ளது. குறிப்பாக மும்பையில் மட்டும் 2,80,000க்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மும்பையில் பிரபல பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், மேலும் வாசிக்க …..