உயர் நீதிமன்றம் சட்டம் சமூகம்

ஆன்லைன் சூதாட்ட வழக்கில் விராட் கோலி, கங்குலி, பிரகாஷ்ராஜ், தமன்னா, ராணா ஆகியோர்க்கு நீதிமன்றம் நோட்டீஸ்

ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என தொடரப்பட்ட வழக்கில், விளையாட்டு வீரர்கள் விராட் கோலி, கங்குலி மற்றும் பிரபலங்கள் பிரகாஷ்ராஜ், தமன்னா, ராணா டகுபதி, சுதீப் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் வழங்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. சமீப காலமாக தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டு அதிக நபர்களால் விளையாடப்பட்டு வருகிறது. இதில் பணத்தை இழந்து சிலர் தற்கொலை செய்து கொண்ட சம்பவங்களும் அரங்கேறி வருகின்றது. இதுவரை 13 பேர் இந்த ஆன்லைன் சூதாட்டத்தால் தற்கொலை செய்துள்ளனர். மேலும் வாசிக்க …..

கேளிக்கை சினிமா

பிரகாஷ்ராஜை தமிழ் படங்களில் நடிக்க விடமாட்டோம் என பிரபல தயாரிப்பாளர் கண்டனம்

தமிழக மாணவர்களுக்கு எதிராக சர்ச்சை கருத்து கூறியதாக எழுந்த கண்டனத்திற்கு நடிகர் பிரகாஷ் ராஜ் விளக்கம் அளித்துள்ளார். சினிமாவை தொடர்ந்து தற்போது நேரடி அரசியலில் இறங்கியுள்ள நடிகர் பிரகாஷ் ராஜ், மக்களவை தேர்தலில் பெங்களூரு மத்திய தொகுதியில் போட்டியிட்டார். தற்போது ஆம் ஆத்மி கட்சிக்காக டெல்லியில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். டெல்லியில் ஆம் ஆத்மி வேட்பாளர்களுக்காக பிரச்சாரம் செய்த நடிகர் பிரகாஷ் ராஜ், டெல்லி மாணவர்களின் உரிமையை தமிழக மாணவர்கள் தட்டிப் பறிப்பதாக பிரகாஷ் கூறியதாக செய்திகள் மேலும் வாசிக்க …..

அரசியல் கேளிக்கை சினிமா வாக்கு & தேர்தல்

‘நாட்டை உலுக்கும் ரபேல் பேர ஊழல்’ புத்தகம் தடைக்கு பிரகாஷ்ராஜ் கண்டனம்

எழுத்தாளர் எஸ்.விஜயன் எழுதிய ரஃபேல் ஊழல் குறித்த “நாட்டை உலுக்கும் ரபேல் பேர ஊழல்” புத்தகம் நேற்று சென்னையில் இந்து என்.ராம் அவர்களால் வெளியிட இருந்த நிலையில் திடீரென இந்த புத்தகத்திற்கு தமிழக தேர்தல் ஆணையம் தடை விதித்தது. இதனையடுத்து பறக்கும் படை அதிகாரிகள் புத்தகத்தை பறிமுதல் செய்தனர். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுகுறித்து நடிகர் பிரகாஷ்ராஜ், ரஃபேல் ஊழல் குறித்த புத்தகங்களுக்கு தடை விதிக்கும் தேர்தல் ஆணையம், பிரதமர் மோடி குறித்த திரைப்படமான பி.எம்.நரேந்திரமோடி மேலும் வாசிக்க …..

அரசியல் கர்நாடகா கேளிக்கை

மக்களவைத் தேர்தலில் பெங்களூரு மத்திய தொகுதியில் களமிறங்கும் நடிகர் பிரகாஷ்ராஜ்

அரசியலுக்குள் வரும் முக்கிய நடிகராக பிரகாஷ்ராஜ் இருக்கிறார். ஏற்கெனவே நடிகர் கமல்ஹாசன், ரஜினிகாந்த் ஆகியோர் அரசியல் கட்சி தொடங்கி அரசியலில் ஈடுபட போவதாக கூறினர். ஆனால் இதுவரை தேர்தலில் போட்டியிடுவதாக எந்தவித அறிவிப்பும் இல்லாமல் படத்தில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் தற்போது நடிகர் பிரகாஷ்ராஜ் 2019ல் நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் பெங்களூரு மத்திய தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார். நடிகர் பிரகாஷ்ராஜ் பாஜவுக்கு எதிராகவும், தீவிர இந்துத்துவாவுக்கு எதிராகவும், பிரதமர் மோடிக்கு எதிராகவும் தனது மேலும் வாசிக்க …..

அரசியல் கருத்துக்கள் கேளிக்கை

தன்னாட்சி அமைப்புகளுக்கு அச்சுறுத்தலாக மாறியுள்ளது பாஜக என நடிகர் பிரகாஷ்ராஜ் காட்டம்

தொடர்ந்து பாஜகவை விமர்சித்து வரும் நடிகர் பிரகாஷ் ராஜ், தற்போது ஆளுநர் உர்ஜித் படேலின் பதவி விலகல் குறித்து கருத்து தெரிவித்து பாஜகவை தாக்கியுள்ளார். ரிசர்வ் வங்கிக்கு அரசுடன் முரண்பாடுகள் தொடர்ந்த நிலையில் அதன் ஆளுநர் உர்ஜித் படேல் தனது பதவியை ராஜினாமா செய்தார். சொந்த காரணங்களுக்காக ராஜினாமா முடிவை எடுத்ததாக ஆளுநர் உர்ஜித் படேல் தெரிவித்துள்ளார். உர்ஜித் படேல் ராஜினாமா நாடு முழுவதும் விவாதத்தை கிளப்பியுள்ளது. நிரவ் மோடி விவகாரம், பொதுத் துறை வங்கிகளை முறைப்படுத்தும் மேலும் வாசிக்க …..

கேளிக்கை

பிரகாஷ் ராஜின் ஆசை – கலைஞர் கருணாநிதி

மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி மீது மிகுந்த பற்றுக் கொண்டவர் நடிகர் பிரகாஷ் ராஜ். இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான இருவர் திரைப்படத்தில், நடிகர் பிரகாஷ்ராஜ் கருணாநிதி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்நிலையில், திமுக தலைவராக இருந்த கலைஞரின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக எடுக்கப்பட்டால், தான் கருணாநிதியாக நடிக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, “கருணாநிதி, பல நூற்றாண்டுகளுக்கான தலைவர், இன்னும் பல ஆண்டுகளுக்கு அவரைப் போன்ற ஒரு அரசியலில் ஆளுமையுடைய, பன்முகத் தன்மை கொண்ட மேலும் வாசிக்க …..