உச்ச நீதிமன்றம் சட்டம் தேசியம் விவசாயம்

விவசாயிகள் பிரச்சனையை தீர்க்க தேசிய அளவில் குழு- உச்சநீதிமன்றம் ஆலோசனை

விவசாயிகள் பிரச்சினை விரைவில் தேசிய பிரச்சினையாக மாறும் என்பதால், பிரச்சனையை தீர்க்க தேசிய அளவில் குழு அமைக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் ஆலோசனை தெரிவித்துள்ளது. மத்திய பாஜக அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி, கடந்த 21 நாட்களாக டெல்லியில் அமைதியான முறையில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் டெல்லி எல்லையில் போராடி வரும் விவசாயிகளை அப்புறப்படுத்தக் கோரி, டெல்லியைச் சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவர் ரிஷாப் சர்மா உட்பட பல்வேறு மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் மேலும் வாசிக்க …..

அரசியல் இயற்கை தேசியம் விவசாயம்

வேறு அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதை நிறுத்துங்கள்- மத்திய அரசுக்கு எச்சரிக்கை

மத்திய அரசு, வேறு அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதை நிறுத்த வேண்டும் என டெல்லியில் போராடி வரும் விவசாய அமைப்புகள் மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். மத்திய பாஜக அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் அனைவரும் டெல்லியில் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டம் இன்று 21வது நாளை எட்டியுள்ளது. மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த ஒரு பலனும் இல்லை. வேளாண் சட்டத்தை முழுவதுமாக திரும்ப பெறும் வரையில் போராட்டம் மேலும் வாசிக்க …..

அரசியல் இயற்கை தேசியம் விவசாயம்

மோடி ஆட்சிக்காலம் முடியும் வரை போராடத் தயார்- விவசாயிகள் உறுதி

மத்திய அரசு வேளாண் சட்டங்களை திரும்பப் பெற, மோடி ஆட்சிக் காலம் முடியும் வரை போராடத்தை தொடரவும் தயார் என்று விவசாய சங்கங்கள் எச்சரித்துள்ளனர். மத்திய பாஜக அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து, டெல்லியில் 20 நாட்களைக் கடந்து விவசாயிகளின் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் விவசாயிகள், டிராக்டர் உள்ளிட்ட வாகனங்களில் டெல்லியை நோக்கி பல்லாயிரக்கணக்கில் திரண்டு வந்து கொண்டே இருக்கின்றனர். மத்திய அரசும் பேச்சுவார்த்தைகளை நடத்தி, விவசாய மேலும் வாசிக்க …..

அரசியல் இயற்கை தேசியம் விவசாயம்

தேவைப்பட்டால் தனது ஆன்மாவையும் விற்பார் கெஜ்ரிவால்; பஞ்சாப் முதல்வர் ஆவேசம்

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தனக்கு தேவைப்படும் போது தனது ஆன்மாவையும் விற்பார் என பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் விமரிசித்து உள்ளார். மத்திய பாஜக அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களை எதிர்த்து, டெல்லியில் விவசாயிகள் கடந்த 20 நாட்களாக கடும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனையொட்டி டெல்லியில் வெளி மாநிலப் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் நடத்திய பேச்சு வார்த்தையில் மத்திய அரசு அவர்கள் கோரிக்கையை ஏற்காமல் உள்ளது. இந்நிலையில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மேலும் வாசிக்க …..

அரசியல் இயற்கை உச்ச நீதிமன்றம் சட்டம் தேசியம் விவசாயம்

டெல்லியில் போராடும் விவசாயிகளை அப்புறப்படுத்தக்கோரி வழக்கு.. உச்சநீதிமன்றம் விசாரணை

வேளாண் சட்டங்களை திரும்பப்பெறக் கோரி டெல்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகளை அப்புறப்படுத்தக்கோரிய மனு மீதான விசாரணை டிசம்பர் 16 ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரிக்கப்பட உள்ளது. மத்திய பாஜக அரசு கொண்டுவந்துள்ள 3 வேளாண் சட்டங்களும், விவசாயிகளை கார்ப்பரேட்டுகளுக்கு அடிமையாக்கி விடுவதாக கூறி, இந்த சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி, தலைநகர் டெல்லியிலும், மாநில எல்லைகளிலும் கடும் குளிர், பனியையும் பொருட்படுத்தாது, லட்சக்கணக்கான விவசாயிகள் 19 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், டெல்லியில் விவசாயிகளின் போராட்டத்தை நடத்த மேலும் வாசிக்க …..

அரசியல் இயற்கை தேசியம் விவசாயம்

சுங்கச்சாவடிகளை ஆக்கிரமித்த விவசாயிகள்; நாளை உண்ணாவிரதப் போராட்டம்

நாடு முழுவதும் உள்ள முக்கிய சுங்கச்சாவடிகளை முற்றுகையிட்டுள்ள விவசாயிகள், வாகன ஓட்டிகளிடம் இருந்து பணம் வசூலிக்கப்படுவதை தடுத்து நிறுத்தி, வாகனங்களை இலவசமாக அனுப்பி வைத்துள்ளனர். இந்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி மாநில எல்லையில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் தங்கள் போராட்டத்தை தீவிரப்படுத்த போவதாக அறிவித்திருந்தனர். அதன்படி இன்று (டிசம்பர் 13)நாட்டிலுள்ள அனைத்து சுங்கச்சாவடிகளையும் முடக்கப்படும் என்றும், டெல்லி-ஜெய்ப்பூர் நெடுஞ்சாலையை முடக்கப்படும் என்றும் திட்டமிடப்பட்டது. இதன் ஒரு பகுதியாக மேலும் வாசிக்க …..

அரசியல் இயற்கை தேசியம் விவசாயம்

நான் முதலில் விவசாயி மகன்; விவசாயிகளுக்காக பதவியை துறந்த பஞ்சாப் டிஐஜி

நான் விவசாயி மகன் எனக் கூறி, விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து பஞ்சாப் மாநில சிறைத்துறை டிஐஜி தனது பதவியை ராஜினாமா செய்வதாக மாநில உள்துறை செயலாளருக்கு கடிதம் எழுதி உள்ளார். மத்திய பாஜக அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களை எதிர்த்து, டெல்லியில் 18 நாட்களாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். கடுமையான குளிரையும் பொருட்படுத்தாது போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக பல்வேறு துறை சார்ந்த பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், அதிகாரிகள், முதலமைச்சர்கள் என பலரும் மேலும் வாசிக்க …..

அரசியல் இயற்கை தேசியம் விவசாயம்

தீவிரமடையும் டெல்லி முற்றுகை; டிராக்டர் அணிவகுப்பில் கிளம்பிய பஞ்சாப் விவசாயிகள்

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள 1,000 கிராமங்களில் இருந்து சுமார் டிராக்டர் உட்பட 1,500 க்கும் மேற்பட்ட வாகனங்களுடன் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் டெல்லியை முற்றுகையிட அணிவகுத்துள்ளனர். மத்திய வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள், டெல்லி எல்லையில் கடந்த 18 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதுதொடர்பாக விவசாய சங்கங்களுடன் மத்திய அரசு பலகட்டப் பேச்சுவார்த்தைகள் நடத்தியும் உடன்பாடு எட்டப்படவில்லை. தங்கள் கோரிக்கையை நிறைவேற்றாத காரணத்தால் டெல்லியின் எல்லைகள் முற்றுகை, சுங்கச்சாவடி முற்றுகை, தேசிய மேலும் வாசிக்க …..

அரசியல் இயற்கை கட்சிகள் தேசியம் பாஜக விவசாயம்

விவசாயிகள் கோரிக்கையை நிறைவேற்றாவிடில் ஆதரவு வாபஸ்; ஹரியானாவில் பாஜக ஆட்சிக்கு சிக்கல்

விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் ஹரியானாவில் பாஜக அரசுக்கு கொடுத்த ஆதரவை வாபஸ் பெறுவதாக ஜேஜேபி கட்சி திட்டவட்டமாக அறிவித்துள்ளது. ஹரியானாவில் தேசிய ஜனநாயக கூட்டணி (என்டிஏ) உறுப்பினராக உள்ளது ஜனநாயக் ஜனதா கட்சி (ஜேஜேபி). இதன் தலைவரான துஷ்யந்த் சவுதாலா அம்மாநிலத்தின் துணை முதல்வராக உள்ளார். விவசாயிகள் போராட்டத்தில் ஹரியானாவின் ஜாட் சமூகத்தினர் முக்கியப் பங்கு வகிக்கின்றனர். ஜேஜேபி, ஜாட் சமூகத்தினருக்கான கட்சி என்பதால், அவர்களது குறைந்தபட்ச நிர்ணய விலை (எம்எஸ்பி) மீதானக் கோரிக்கையில் ஆதரவளித்துள்ளது. இதுகுறித்து மேலும் வாசிக்க …..

அரசியல் இயற்கை தேசியம் விவசாயம்

வேளாண் சட்டம்: நாடு தழுவிய வேலை நிறுத்தத்திற்கு விவசாய சங்கங்கள் அழைப்பு

மத்திய அரசின் வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி டிசம்பர் 8ஆம் தேதி நாடு தழுவிய வேலை நிறுத்தத்திற்கு விவசாய சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன. மத்திய பாஜக அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக தலைநகர் டெல்லியில் லட்சக்கணக்கான விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். டெல்லியை சுற்றி உள் நுழைய- வெளியே செல்ல உள்ள அனைத்து வழிகளும் விவசாயிகளால் முடக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மத்திய அரசுடனான 2 கட்ட பேச்சுவார்த்தையில் உறுதியான முடிவுகள் எட்டப்படாத நிலை நிலவி வருகிறது. தொடர்ந்து மேலும் வாசிக்க …..