ஐரோப்பா கல்வி சமூகம்

சூரியசக்தியால் இயங்கும் இஸ்திரி பெட்டி; ஸ்வீடன் நாட்டின் விருது பெற்ற தமிழக மாணவி

தமிழகத்தை சேர்ந்த 9ம் வகுப்பு மாணவிக்கு ஸ்வீடன் நாட்டின் குழந்தைகளுக்கான சூழலியல் அறக்கட்டளை சாா்பில் இளம் வயது கண்டுபிடிப்பாளா்களுக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலையைச் சோ்ந்த 9-ஆம் வகுப்பு மாணவி வினிஷா உமாசங்கா், சூரியசக்தி மூலம் இயங்கும் இஸ்திரி பெட்டியைக் கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளாா். இதுகுறித்து மாணவி வினிஷா பேசுகையில், எனக்கு 5 வயது இருக்கும் போது எனது தந்தை அறிவியல் களஞ்சிய புத்தகத்தை பரிசளித்தாா். அந்தப் புத்தக வாசிப்பின் மூலம் அறிவியல் மீதான ஆா்வம் எனக்கு நாள்தோறும் மேலும் வாசிக்க …..

அரசியல் சுற்றுச்சூழல் தேசியம்

இயற்கை வளங்களை சூறையாடுகிறதா மோடி அரசின் புதிய EIA 2020…

இந்தியா முழுவதும் மத்திய மோடி அரசின் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு அறிக்கை 2020 (Environmental Impact Assessment-EIA 2020) மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக ஒரு குறிப்பிட்ட இடத்தில் தனியார் நிறுவனம் அல்லது அரசு நிறுவனம் ஒரு திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்றால், மத்திய அரசிடம் அனுமதி வாங்க வேண்டும். இதற்காக மத்திய அரசிடம், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையை அந்த நிறுவனங்கள் அளிக்க வேண்டும். சுற்றுசூழல் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் 1996ல் கொண்டு வரப்பட்ட இந்த மேலும் வாசிக்க …..

இயற்கை சுற்றுச்சூழல்

வெட்டுக்கிளிகள் படையெடுப்பால் அவசர ஆலோசனையில் டெல்லி அரசு..

வட மாநிலங்களில் வெட்டுக்கிளிகளின் பாதிப்பு குறைந்து வந்த நிலையில், ஹரியானா மாநிலம் குருகிராமில் வெட்டுக்கிளிகள் சூழ்ந்து காணப்பட்டதால் டெல்லி அரசு அவசர கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளது. ஹரியானா மாநிலம் குருகிராமில் பெரும் திரளாக வெட்டுக்கிளிகள் படையெடுத்துள்ளன. குருகிராம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் வான்வெளியிலும், தெருக்களிலும், சாலைகளிலும் ஏராளமான வெட்டுக்கிளிகள் கூட்டம் கூட்டமாக காணப்பட்டுள்ளன. கூட்டம் கூட்டமாக படையெடுத்த வெட்டுக்கிளிகளால் மக்கள் வீடுகளுக்கு உள்ளேயே முடங்கியுள்ளனர். குருகிராமில் உள்ள உயரமான அடுக்குமாடிக் குடியிருப்புகளை சுற்றியும் வெட்டுக்கிளிகள் அராஜகம் செய்து மேலும் வாசிக்க …..

அரசியல் இயற்கை கருத்துக்கள் சுற்றுச்சூழல்

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக திமுக போராட்டம் அறிவிப்பு

ஹைட்ரோ கார்பன் திட்டம் தொடர்பான மத்திய அரசின் புதிய அறிவிப்பிற்கு எதிராக திமுக சார்பில் ஜனவரி 28ஆம் தேதி டெல்டா மாவட்டங்களில் போராட்டம் நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. குடியுரிமைச் சட்டத் திருத்தம், தேசிய குடிமக்கள் பதிவேடு என மத்திய அரசு முன்னெடுக்கும் திட்டங்களுக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அரசியல் கட்சிகள், அமைப்புகள், மாணவர்கள், இளைஞர்கள், வணிகர்கள் என பலத் தரப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாட்டிலும் பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. தற்போது ஹைட்ரோ கார்பன் ஆய்வுக்கு மேலும் வாசிக்க …..