அதிமுக அரசியல் சமூகம் தமிழ்நாடு பெண்கள்

பாலியல் வழக்கில் கைதாகிய அதிமுக நிர்வாகி மற்றும் அதிமுக அமைச்சரை சுற்றி சுழலும் சர்ச்சை

தமிழகத்தையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் அதிமுக நிர்வாகி உட்பட 3 பேரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள் உள்பட பல பெண்களை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து, அவர்களை ஆபாசமாக படம் எடுத்து மிரட்டிய சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த 2019 பிப்ரவரி 24 ஆம் தேதி, பொள்ளாச்சியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் மேலும் வாசிக்க …..

சட்டம் தமிழ்நாடு

103 கிலோ தங்கம் மாயம்; சிபிஐ மீது திருட்டு வழக்கு பதிவு செய்த சிபிசிஐடி

சிபிஐ வசம் இருந்த 103 கிலோ தங்கம் மாயமான வழக்கில் சிபிசிஐடி காவல்துறையினர், சிபிஐ மீது திருட்டு வழக்கு பதிவு செய்துள்ளனர். சென்னை பாரிமுனையில் செயல்படும் சுரானா கார்பரேஷன் லிமிடெட் தங்க ஏற்றுமதி, இறக்குமதி நிறுவனத்தில் கடந்த 2012 ஆம் ஆண்டு சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். இந்த சோதனையின்போது, 400.47 கிலோ தங்கத்தை சிபிஐ அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். சட்ட விரோதமாக தங்கத்தை இறக்குமதி செய்ததாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் வழக்குப்பதிவு செய்த சிபிஐ அதிகாரிகள் மேலும் வாசிக்க …..

உயர் நீதிமன்றம் சட்டம் தமிழ்நாடு

சிபிஐ வசம் இருந்த 103 கிலோ தங்கம் மாயம்.. சிபிசிஐடி விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு

சென்னை தனியார் நிறுவனத்தில் சிபிஐ பறிமுதல் செய்த 400 கிலோ தங்கத்தில் 103 கிலோ தங்கம் மாயமாகியுள்ளது குறித்து சிபிசிஐடி விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது. தங்கத்தை இறக்குமதி செய்யும் சுரானா கார்பரேஷன் லிமிடெட் எனும் நிறுவனம் சென்னை என்எஸ்சி போஸ் சாலையில் உள்ளது. இந்த நிறுவனத்திற்கு இந்திய தாதுக்கள் மற்றும் உலோக வர்த்தக கழகத்தின் அதிகாரிகள் சாதகமாக செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து சிபிஐ 2012 ஆம் ஆண்டு வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி மேலும் வாசிக்க …..

அரசியல் உச்ச நீதிமன்றம் சட்டம் தமிழ்நாடு

பேரறிவாளனுக்கு மீண்டும் பரோல் நீட்டிப்பு; உச்சநீதிமன்றம் உத்தரவு

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கு சிறைக்கைதி பேரறிவாளனுக்கு அளிக்கப்பட்ட பரோலை மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர் கடந்த 30 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர். இதில் பேரறிவாளனை விடுவிக்க வலியுறுத்தி அவரது தாயார் அற்புதம்மாள் பல ஆண்டுகளாக போராடி வருகிறார். ஜோலார்பேட்டையைச் சேர்ந்த பேரறிவாளன் தற்போது சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பேரறிவாளனை விடுதலை செய்ய பல்வேறு அரசியல் கட்சிகள், மேலும் வாசிக்க …..

அரசியல் உச்ச நீதிமன்றம் சட்டம் தமிழ்நாடு

பேரறிவாளன் விடுதலைக்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லை; உச்சநீதிமன்றத்தில் சிபிஐ மனு

பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் எங்களுக்கு தொடர்பு இல்லை, இதுகுறித்து ஆளுநர் தான் முடிவெடுக்க வேண்டுமென சிபிஐ உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்ட ஏழு பேர் சுமார் 30 ஆண்டுகளாக சிறைத்தண்டனை அனுபவித்து வருகின்றனர். இவர்களை விடுதலை செய்யக்கோரி பல அரசியல் கட்சிகளும், இயக்கங்களும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இதில் முக்கியமாக, பேரறிவாளனை விடுவிக்க வலியுறுத்தி அவரது தாயார் அற்புதம்மாள் பல ஆண்டுகளாக போராடி வருகிறார். மேலும் வாசிக்க …..

அரசியல் சட்டம் தேசியம்

சிபிஐ மாநிலத்திற்குள் அனுமதியின்றி நுழையக் கூடாது; பஞ்சாப் அரசு அதிரடி

மாநிலத்திற்குள் விசாரணை நடத்த மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) அனுமதியின்றி நுழையக் கூடாது என அதிரடியாக அறிவித்தது பஞ்சாப் மாநில அரசு. மத்தியப் புலனாய்வுத் துறையின் அதிகார வரம்பு, டெல்லி சிறப்புக் காவல் நிறுவனச் சட்டத்தின் (Delhi Special Police Eshtablishment – DSPE 1946) மூலம் வரையறுக்கப்பட்டுள்ளது. இந்தச் சட்டம் மத்திய ஆட்சிப் பகுதிகளின் காவல்துறைக்கு இருக்கும் அதே அதிகாரங்களையும் பொறுப்புகளையும் சிபிஐக்கும் வழங்குகிறது. டெல்லியைத் தவிர, இந்தியாவின் எந்த மாநிலத்திலும் சிபிஐ, தனது அதிகாரத்தைப் மேலும் வாசிக்க …..

அரசியல் கேரளா தேசியம்

மேற்கு வங்கம், மகாராஷ்டிராவைத் தொடர்ந்து சிபிஐ விவகாரத்தில் கேரள அரசின் அதிரடி முடிவு

ராஜஸ்தான், மேற்கு வங்கம், மகாராஷ்டிராவைத் தொடர்ந்து, மாநிலத்திற்குள் விசாரணை நடத்த சிபிஐ அனுமதியின்றி நுழையக் கூடாது என அதிரடியாக அறிவித்தது கேரள அரசு. மத்திய புலனாய்வுத் துறைக்கு வழங்கப்படும் வழக்குகளை, நாட்டில் உள்ள எந்த மாநிலங்களுக்கும் சென்று தேவையான விசாரணை மேற்கொள்ள சிபிஐ அதிகாரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநில அரசுகளிடம் அனுமதி பெறாமலே விசாரணைக்காக மாநிலங்களுக்குள் செல்லலாம். ஆனால் சிபிஐக்கு வழங்கப்பட்டு வந்த இந்த பொது இசைவை கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ராஜஸ்தான், மேலும் வாசிக்க …..

சமூகம்

சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் கொலை வழக்கு; சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல்

சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் இரட்டைக் கொலை வழக்கில் தடயங்களை மறைக்க போலீசார் முயற்சி செய்துள்ளதாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. சாத்தான்குளம் வியாபாரிகளான ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகிய 2 பேரும் சாத்தான்குளம் போலீசாரால் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டு சிறையின் அடைக்கப்பட்ட பின்னர் 2 பேரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின்பேரில், விசாரணை நடத்திய சிபிசிஐடி போலீசார், இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உள்பட 10 போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்தனர். மேலும் வாசிக்க …..

அரசியல்

சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும்- உச்ச நீதிமன்றம்

நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை தொடர்பான வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும். மும்பை போலீசார் சேகரித்த அனைத்து ஆதாரங்களையும் சிபிஐ வசம் ஒப்படைக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் மும்பையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். எனினும், அது தற்கொலையா, கொலையா என்ற சர்ச்சை தொடர்ந்து வருகிறது. சுஷாந்த் சிங் மரணம் தொடர்பாக அவரது சொந்த மாநிலமான பீகாரில் அம்மாநில அரசு விசாரணை நடத்தி வருகிறது. சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொண்ட மேலும் வாசிக்க …..

அரசியல் தமிழ்நாடு

சாத்தான்குளம் இரட்டைக் கொலை; சிபிஐக்கு மாற்ற மத்திய அரசு அனுமதி..

சாத்தான்குளம் ஜெயராஜ்- பென்னிக்ஸ் இரட்டைக் கொலை வழக்கை சிபிஐ ஏற்று நடத்துவதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கி இருப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. துாத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தந்தை மகன் இருவரும் காவல் துறையினர் மற்றும் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் என்ற அமைப்பை சேர்ந்த சிலரால் கொடூரமான முறையில் வார்த்தைகளில் விவரிக்க முடியாத அளவிற்கு தாக்கப்பட்டு இறந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கை தாமான முன் வந்து விசாரித்து வரும் மேலும் வாசிக்க …..