கொரானா தேசியம் மருத்துவம்

அக்டோபா்-நவம்பா் மாதங்களில் கொரோனா 3வது அலை உச்சம் அடையும்- எச்சரிக்கும் விஞ்ஞானிகள் குழு

இந்தியாவில் கொரோனா 3வது அலை அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் உச்சம் பெறலாம், தினசரி பாதிப்புகள் 2 லட்சம் வரை இருக்கலாம் என ஒன்றிய அரசுக்கு ஆலோசனை வழங்கும் விஞ்ஞானிகள் குழு எச்சரித்துள்ளது. இந்தியாவில் கொரோனா 2வது அலையின் பாதிப்பு தற்போது படிப்படியாக குறைய ஆரம்பித்துள்ளது. பல்வேறு மாநிலங்களிலும் விதிக்கப்பட்டிருந்த கடுமையான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, மக்கள் மீண்டும் இயல்பு நிலையை நோக்கி நகர்ந்து வருகிறனர். இந்தியாவில் கொரோனா தொற்றால் இதுவரை 3,06,19,932 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மேலும் வாசிக்க …..

உலகம் கொரானா தேசியம்

ஊழல் குற்றச்சாட்டால் இந்தியாவிடமிருந்து கோவாக்சின் வாங்கும் ஒப்பந்தத்தை ரத்து செய்த பிரேசில் அரசு

இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனத்திடமிருந்து கோவாக்சின் தடுப்பூசி வாங்குவதற்கு போடப்பட்ட ஒப்பந்ததை தற்காலிகமாக ரத்து செய்வதாக பிரேசில் அரசு அறிவித்துள்ளது. இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசிக்கு கடந்த பிப்ரவரி மாதம் பிரேசில் அரசு அனுமதி வழங்கியது. அதன்படி,பாரத் பயோடெக் நிறுவனத்திடமிருந்து முதற்கட்டமாக 4 லட்சம் கோவாக்சின் தடுப்பூசிகள் இறக்குமதி செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்டது. மொத்தம் 2 கோடி அளவிற்கு தடுப்பூசிகளை வாங்கவும் பிரேசில் அரசு முடிவு செய்தது. ஆனால்,பிரேசிலில் கொரோனா இறப்பு எண்ணிக்கை 500,000ஐ மேலும் வாசிக்க …..

கல்வி கொரானா தமிழ்நாடு

12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் முறை- தமிழ்நாடு அரசு அறிவிப்பு

தமிழ்நாட்டில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான மதிப்பெண் கணக்கிடும் முறையை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “கொரோனா பெருந்தொற்றின் காரணமாக 2020-2021 ஆம் கல்வியாண்டில் நடக்கவிருந்த 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ஏற்கெனவே ரத்து செய்யப்பட்டுள்ளன. மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் முறையை முடிவு செய்வதற்காக பள்ளிக் கல்வித் துறை முதன்மை செயலர் தலைமையில் உயர் கல்வித் துறை மேலும் வாசிக்க …..

கொரானா தமிழ்நாடு பயணம்

சென்னை புறநகர் ரயிலில் பொதுமக்கள் பயணிக்க அனுமதி- தெற்கு ரயில்வே

சென்னை புறநகர் ரயிலில் 25-06-2021 முதல் பொதுமக்கள் பயணிக்கலாம் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. கொரோனா பொதுமுடக்கம் காரணமாக சென்னை புறநகர் ரயில்களில் பொதுமக்கள் பயணிக்க அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இதுவரை அத்தியாவசிய பணியாளர்கள், மத்திய, மாநில அரசு ஊழியர்கள் மட்டுமே ரயிலில் பயணித்து வந்தனர். இந்நிலையில், நாளை (25-06-2021) முதல் கட்டுப்பாடுகளுடன் பொதுமக்கள் பயணம் செய்ய அனுமதி வழங்கப்படுள்ளது. பெண்கள், 12 வயதிற்குட்பட்ட குழந்தைகள் அனைத்து நேரத்திலும் பயணிக்கலாம் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதேபோல் ஆண் மேலும் வாசிக்க …..

கொரானா சமூகம் தமிழ்நாடு திமுக

மாற்றுத்திறனாளிகள் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள உதவி எண்கள் வெளியீடு- தமிழ்நாடு அரசு

மாற்றுத்திறனாளிகள் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள 18004250111 மற்றும் 97007 99993 என்ற உதவி எண்களை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. இதுகுறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை மாநகராட்சி சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் முன்னுரிமை வழங்கும் வகையில் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, வரிசையில் காத்திருக்காமல், தகுந்த பாதுகாப்பு வழிமுறைகளுடன் விரைந்து தடுப்பூசி செலுத்தப்படுகிறது. மாற்றுத்திறனாளிகள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள 18004250111 என்ற உதவி எண் மற்றும் 97007 மேலும் வாசிக்க …..

சமூகம் தமிழ்நாடு திமுக பெண்கள்

பெண் காவலர்களை சாலை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டாம்- முதலமைச்சர் முக ஸ்டாலின்

சாலை பாதுகாப்பு பணிகளில் பெண் காவலர்களை ஈடுபடுத்த வேண்டாம் என தமிழ்நாடு காவல்துறை டிஜிபி திரிபாதி உத்தரவு பிறப்பித்துள்ளார். தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு, காவல்துறையில் பல்வேறு புதிய உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார். குறிப்பாக காவல்துறையினருக்கு கொரோனா சிறப்பு நிவாரண நிதி, வேலை நேரம் இரண்டு ஷிப்டுகளாக பிரிப்பு உள்ளிட்ட முக்கிய அறிவிப்புகளை டிஜிபி திரிபாதி கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியிட்டுள்ளார். மேலும் கொரோனா ஊரடங்கு நேரத்தில் பெண் காவலர்கள் மேலும் வாசிக்க …..

அறிவியல் கொரானா சமூகம் தேசியம் மருத்துவம்

அலோபதி மருத்துவர்கள் கடவுளின் தூதுவர்கள்: பாபா ராம்தேவ் திடீர் பல்டி

அலோபதி மருத்துவர்கள் கடவுளின் தூதுவர்கள், உண்மையில் மருத்துவர்கள் பூமிக்குக் கிடைத்த ஆசீர்வாதம் என்று திடீரென பல்டியடித்துள்ளார் பதஞ்சலி நிறுவனர் பாபா ராம்தேவ். பதஞ்சலி நிறுவனரான பாபா ராம்தேவ், பாஜக ஆதரவாளராக தன்னை முன்னிறுத்தி வருகிறார். அதேபோல் பதஞ்சலி நிறுவனத்தை பாஜக அரசு அதிகளவில் விளம்பரப்படுத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது. கொரோனா முதல் அலையின் போது உலகமே தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதில் தீவிரமாக இயங்கி வந்த வேளையில், கொரோனா வைரஸை எதிர்க்கும் எனக் கூறி கொரோனியல் என்ற மருந்தை அறிமுகம் மேலும் வாசிக்க …..

அரசியல் சமூகம் தேசியம் மருத்துவம்

தாடியை வளர்த்தது போதும்; நாட்டின் வளர்ச்சியை முன்னேற்றுங்க: பிரதமருக்கு டீ கடைக்காரர் கடிதம்

பிரதமர் மோடிக்கு 100 ரூபாய் மணி ஆர்டரில் அனுப்பி, பிரதமர் மோடி தனது தாடியை ஷேவ் செய்துகொண்டு, அவர் நாட்டின் வளர்ச்சியை வளர்க்க வேண்டிக் கொள்கிறேன் என மகாராஷ்டிரா டீ கடைக்காரர் கடிதம் எழுதியுள்ளார். கொரோனா தொற்று காரணமாக கடந்த ஓராண்டுக்கும் மேலாக நாடு முழுவதும் பல்வேறு நிலைகளில் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனால் தொழில்கள் முடங்கி, வேலையின்மை வரலாறு காணாத அளவில் அதிகரித்தது. கொரோனா தொற்றாலும், அதைக் கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட ஊரடங்காலும் கோடிக்கணக்கான மக்கள் வறுமைக்கு மேலும் வாசிக்க …..

கொரானா சமூகம் தேசியம் மருத்துவம்

ஜூன் 21 ஆம் தேதி முதல் மாநிலங்களுக்கு இலவச தடுப்பூசி- பிரதமர் மோடி

ஒன்றிய அரசு ஜூன் 21 ஆம் தேதி முதல் மாநிலங்களுக்கு இலவசமாக தடுப்பூசி வழங்கும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா தொற்றின் 2வது அலை மக்களை கடுமையாக பாதித்து வருகிறது. நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்து வருகின்றனர். தடுப்பூசி மற்றும் முழு ஊரடங்கு நடவடிக்கை தீவிரமானதையடுத்து கொரோனா வைரஸ் தொற்று பரவல் தற்போது சீராக குறைந்து வருகிறது. மக்களுக்கு தடுப்பூசி செலுத்துவதில் மாநில அரசுகள் தீவிர கவனம் செலுத்தி வருகின்றன. ஆனால் ஒன்றிய அரசு போதுமான மேலும் வாசிக்க …..

கொரானா சமூகம் தமிழ்நாடு திமுக மருத்துவம்

ஒன்றிய அரசு கருப்பு பூஞ்சை நோய்க்கு போதிய மருந்து வழங்கவில்லை- கனிமொழி எம்பி குற்றச்சாட்டு

கருப்பு பூஞ்சை நோய்க்கு சிகிச்சை அளிக்க தேவையான மருந்துகளை ஒன்றிய அரசு தமிழ்நாட்டிற்கு வழங்கவில்லை என்று திமுக எம்.பி. கனிமொழி குற்றம்சாட்டி உள்ளார். தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சூழலில் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதா ஜீவன், மாவட்ட ஆட்சியர் டாக்டர் செந்தில்ராஜ் ஆகியோர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கொரோனா, கருப்பு பூஞ்சை நோய்க்குச் சிகிச்சை மேலும் வாசிக்க …..