கொரானா தேசியம்

தடுப்பூசி விலையை உயர்த்தி ஒன்றிய மோடி அரசு ஒப்பந்தம்; கோவிஷீல்டு ரூ.215, கோவாக்சின் ரூ.225

இந்தியாவில் தற்போது ரூ.150க்கு வாங்கப்பட்டு வரும் கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசிகளை முறையே ரூ.215, ரூ.225 என்ற அதிக விலைக்கு கொள்முதல் செய்ய ஒன்றிய பாஜக அரசு புதிய ஒப்பந்தம் செய்துள்ளது. இந்தியாவில் சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டு, பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் ஆகிய தடுப்பூசிகளை ஒன்றிய அரசு நேரடியாக கொள்முதல் செய்து மக்களுக்கு செலுத்தி வருகிறது. முதலில் முன்களப் பணியாளர்கள், 45-60 வயதுக்கும் மேற்பட்டவர்கள் என தடுப்பூசி போடப்பட்டது. இதற்காக, மருந்து நிறுவனங்களுடன் 50% தடுப்பூசியை ஒன்றிய மேலும் வாசிக்க …..

கொரானா சமூகம் தேசியம் மருத்துவம்

இந்தியாவில் டெல்டா பிளஸ் கொரோனா 3வது அலையை ஏற்படுத்தும்- எச்சரிக்கும் நிபுணர்கள்

இந்தியா உள்பட 9 நாடுகளில் டெல்டா பிளஸ் கொரோனா வைரஸ் பரவியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்திருந்த நிலையில், இந்தியாவில் டெல்டா பிளஸ் கொரோனா 6 மாவட்டங்களில் 22 பேருக்கு கண்டறியப்பட்டுள்ளது. சீனாவில் 2019 ஆம் ஆண்டு இறுதியில் தோன்றிய கொரோனா வைரஸ் தொடர்ந்து உருமாறி வருகிறது. அந்த வகையில் இந்தியாவில் உருமாறிய கொரோனா வைரஸ்கள் கண்டுபிடிக்கப்பட்டன. முதலில் இந்தியாவில் கண்டறியப்பட்ட B.1.617.1 வைரஸுக்கு காப்பா என்றும், B.1.617.2 வைரசுக்கு டெல்டா என்றும் உலக சுகாதார நிறுவனத்தால் பெயர் மேலும் வாசிக்க …..

அரசியல் சமூகம் தேசியம் மருத்துவம்

தாடியை வளர்த்தது போதும்; நாட்டின் வளர்ச்சியை முன்னேற்றுங்க: பிரதமருக்கு டீ கடைக்காரர் கடிதம்

பிரதமர் மோடிக்கு 100 ரூபாய் மணி ஆர்டரில் அனுப்பி, பிரதமர் மோடி தனது தாடியை ஷேவ் செய்துகொண்டு, அவர் நாட்டின் வளர்ச்சியை வளர்க்க வேண்டிக் கொள்கிறேன் என மகாராஷ்டிரா டீ கடைக்காரர் கடிதம் எழுதியுள்ளார். கொரோனா தொற்று காரணமாக கடந்த ஓராண்டுக்கும் மேலாக நாடு முழுவதும் பல்வேறு நிலைகளில் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனால் தொழில்கள் முடங்கி, வேலையின்மை வரலாறு காணாத அளவில் அதிகரித்தது. கொரோனா தொற்றாலும், அதைக் கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட ஊரடங்காலும் கோடிக்கணக்கான மக்கள் வறுமைக்கு மேலும் வாசிக்க …..

கொரானா சமூகம் தேசியம் மருத்துவம்

ஜூன் 21 ஆம் தேதி முதல் மாநிலங்களுக்கு இலவச தடுப்பூசி- பிரதமர் மோடி

ஒன்றிய அரசு ஜூன் 21 ஆம் தேதி முதல் மாநிலங்களுக்கு இலவசமாக தடுப்பூசி வழங்கும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா தொற்றின் 2வது அலை மக்களை கடுமையாக பாதித்து வருகிறது. நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்து வருகின்றனர். தடுப்பூசி மற்றும் முழு ஊரடங்கு நடவடிக்கை தீவிரமானதையடுத்து கொரோனா வைரஸ் தொற்று பரவல் தற்போது சீராக குறைந்து வருகிறது. மக்களுக்கு தடுப்பூசி செலுத்துவதில் மாநில அரசுகள் தீவிர கவனம் செலுத்தி வருகின்றன. ஆனால் ஒன்றிய அரசு போதுமான மேலும் வாசிக்க …..

கொரானா சமூகம் தமிழ்நாடு திமுக மருத்துவம்

ஒன்றிய அரசு கருப்பு பூஞ்சை நோய்க்கு போதிய மருந்து வழங்கவில்லை- கனிமொழி எம்பி குற்றச்சாட்டு

கருப்பு பூஞ்சை நோய்க்கு சிகிச்சை அளிக்க தேவையான மருந்துகளை ஒன்றிய அரசு தமிழ்நாட்டிற்கு வழங்கவில்லை என்று திமுக எம்.பி. கனிமொழி குற்றம்சாட்டி உள்ளார். தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சூழலில் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதா ஜீவன், மாவட்ட ஆட்சியர் டாக்டர் செந்தில்ராஜ் ஆகியோர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கொரோனா, கருப்பு பூஞ்சை நோய்க்குச் சிகிச்சை மேலும் வாசிக்க …..

கொரானா தமிழ்நாடு

சிங்கங்களுக்கு கொரோனா தொற்று; வண்டலூர் உயிரியல் பூங்காவில் முதல்வர் திடீர் ஆய்வு

வண்டலூர் உயிரியல் பூங்காவில் சிங்கங்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (6-06-2021) நேரில் ஆய்வு செய்தார். வண்டலுார் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் உள்ள 11 சிங்கங்களில் 9 சிங்கங்களுக்கு கொரோனா தொற்று இருப்பது ஜூன் 3 ஆம் தேதி உறுதியானது. அதில், ‘நீலா’ என்ற பெண் சிங்கம் 3 ஆம் தேதி உயிரிழந்தது. மேலும் 2 சிங்கங்களின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. இதனையடுத்து, கொரோனா தொற்று உறுதியான சிங்கங்கள் தனிமைப்படுத்தப்பட்டு, மேலும் வாசிக்க …..

கொரானா சமூகம் தேசியம்

தடுப்பூசி சான்றிதழில் நீக்கப்பட்ட பிரதமர் மோடி படம்- முதல்வர் மம்தா அதிரடி

மேற்கு வங்கத்தில் கொரோனா தடுப்பூசி சான்றிதழில் இடம்பெற்றிருந்த பிரதமர் மோடியின் படம் நீக்கப்பட்டு, எச்சரிக்கையாக இருங்கள், பாதுகாப்பாக இருங்கள் என்ற வாசகங்கள் பெங்காலி மற்றும் ஆங்கிலத்தில் இடம் பெற்றுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் இண்டாவது அலை தீவிரமடைந்ததை அடுத்து பொதுமக்களுக்குத் தடுப்பூசிகள் வேகமாகச் செலுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவில் கோவாக்சின், கோவிஷீட்டு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. மேலும் ஸ்புட்னிக் வி தடுப்பூசிக்கு ஒன்றிய அரசு அனுமதி அளித்துள்ளது. ஆனால், ஒன்றிய அரசு தடுப்பூசி திட்டத்தைச் சரியாக நடைமுறைப்படுத்தாததால், தற்போது மேலும் வாசிக்க …..

உயர் நீதிமன்றம் கொரானா சட்டம் சமூகம் தேசியம் மருத்துவம்

மத்தியப் பிரதேசத்தில் 3,000 அரசு ஜுனியர் மருத்துவர்கள் திடீர் ராஜினாமா!

மத்தியப் பிரதேசத்தில் 3000 அரசு ஜுனியர் மருத்துவர்கள் திடீரென தங்களது வேலையை ராஜினாமா செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா தொற்றிலிருந்து மக்களைக் காப்பாற்ற நாடு முழுவதும் மருத்துவர்கள் தங்களின் உயிரையும் பொருட்படுத்தாமல் பணியாற்றி வருகிறார்கள். இந்தியாவில் கொரோனா வைரஸ் 2வது அலையில் மட்டும் 646 மருத்துவர்கள் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். மேலும் கொரோனா வைரஸ் பரவ துவங்கியதிலிருந்து மருத்துவர்களுக்கும், செவிலியர்களுக்கும் பன்மடங்கு பணிச்சுமை அதிகரித்துள்ளது. இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மாநில அரசுகள் மருத்துவர்களுக்காக மேலும் வாசிக்க …..

கொரானா தமிழ்நாடு

வண்டலூர் பூங்காவில் பெண் சிங்கம் கொரோனாவிற்கு பலி; மேலும் 9 சிங்கங்களுக்கு கொரோனா தொற்று

வண்டலூர் உயிரியல் பூங்காவில் கொரோனா தொற்றால் நீலா என்ற பெண் சிங்கம் உயிரிழந்துள்ளவும், மேலும் 9 சிங்கங்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் வண்டலூர் உயிரியல் பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது. உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ் தொற்று, சீனாவில் விலங்குகளிடமிருந்து தான் மனிதர்களுக்குப் பரவியதாக கூறப்படுகிறது. கடந்த வருடம் தொற்று பரவ தொடங்கியபோது, வைரஸ் தாக்கத்துக்கு உள்ளானவை சீனாவின் ஹாங்காங் நகரில் இருந்த 2 வளர்ப்பு நாய்கள். தற்போது வரை கொரோனா தொற்று மேலும் வாசிக்க …..

அரசியல் கொரானா தமிழ்நாடு தேசியம்

கோவின் இணையதளத்தில் தமிழ்மொழி புறக்கணிப்பு; வலுக்கும் கண்டனக் குரல்கள்

கொரோனா தடுப்பூசி பதிவு செய்யும் கோவின் இணையதளத்தில் மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்பட பல மொழிகள் இடம்பெற்றுள்ள நிலையில், அதில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டிருப்பது சர்ச்சையாகி உள்ளது. ஒன்றிய பாஜக அரசு அமைந்தது முதல் இந்தி மற்றும் சமஸ்கிருதத்தை திணிப்பதிலும், செம்மொழி அங்கீகாரம் பெற்ற தமிழ் மொழியை ஒவ்வொரு சமயங்களிலும் புறக்கணிப்பதையே குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறது. தற்போது இந்தியாவில் கொரோனா பெருந்தொற்றின் 2வது அலை பரவல் குறையத் தொடக்கி உள்ளது. கொரோனா பரவலை தடுக்க மேலும் வாசிக்க …..