தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் 3000க்கும் மேற்பட்டபாடல்கள் பாடி உள்ள பாடகர் கார்த்திக் மீது #MeToo-வில் சில மாதங்களுக்கு முன்பு பாலியல் புகார் கூறப்பட்டது. வெளிநாட்டு தமிழ் பாடகி கூறிய புகாரை கடந்த அக்டோபர் மாதம் தனது ட்விட்டரில் பாடகி சின்மயி வெளியிட்டார் .
இதற்கு தற்போது தனது டுவிட்டர் பக்கத்தில் கார்த்திக் விளக்கம் அளித்துள்ளார். அதில் புல்வாமா தீவிரவாத தாக்குதலில் வீரமரணம் அடைந்த வீரர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த அனுதாபம் தெரிவித்துள்ளார்.
மேலும், தனது மீதான பாலியல் புகாருக்கும் விளக்கம் அளித்துள்ளார். அதில் எனக்கு எதிராக ட்விட்டரில் பல புகார்கள் எழுந்தன. என் மனசாட்சிக்கு உண்மையாக நான் இதுவரை யாருக்கும் தொந்தரவு கொடுத்தது இல்லை. யாரும் பாதுகாப்பில்லாமல் உணரும்படி நான் நடந்து கொண்டது இல்லை. என் செயல்களால் யாருடைய மனதாவது புண்பட்டிருந்தால் தயவு செய்து என்னை நேரடியாக தொடர்பு கொள்ளவும்.
நான் மீ டூ இயக்கத்தை முழுமையாக ஆதரிக்கிறேன். யார் புகாரிலாவது உண்மை இருந்தால் நான் மன்னிப்பு கேட்க தயாராக உள்ளேன் அல்லது சட்ட நடவடிக்கையை எதிர்கொள்ளவும் தயாராக உள்ளேன் என்று விளக்கமளித்துள்ளார் கார்த்திக்.