கிரிக்கெட் தேசியம் விளையாட்டு

பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி உடல்நிலை சீராக உள்ளது- மருத்துவமனை நிர்வாகம்

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (BCCI) தலைவர் சவுரவ் கங்குலி, நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பிசிசிஐ தலைவரும் முன்னாள் கேப்டனுமான சவுரவ் கங்குலி, தனது வீட்டில் டிரெட்மில்லில் பயிற்சி எடுத்துக் கொண்டிருந்தபோது, மாரடைப்பு ஏற்பட்டு சிகிச்சைக்காக கடந்த சனிக்கிழமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கொல்கத்தாவில் உள்ள உட்லேண்ட்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கங்குலிக்கு, இதயக் குழாய்களில் 3 இடங்களில் அடைப்பு ஏற்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டு, ஒரு அடைப்பில் ஸ்டண்ட் பொருத்தப்பட்டது. மேலும் முதன்மை இதய ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை முறை மேலும் வாசிக்க …..

இயற்கை கிரிக்கெட் தேசியம் விளையாட்டு விவசாயம்

விவசாயத்தில் இறங்கிய தோனி; துபாய்க்கு காய்கறி ஏற்றுமதி

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி, ராஞ்சியில் உள்ள தன் பண்ணைத் தோட்டத்தில் விளைவித்த காய்கறிகளை துபாய்க்கு ஏற்றுமதி செய்ய ஜார்க்கண்ட் அரசு முன்வந்துள்ளது. சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து கடந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதி தனது ஓய்வை அறிவித்தார் எம்.எஸ்.தோனி. அதன்பிறகு சொந்த ஊரான ராஞ்சியில் உள்ள தனது பண்ணை வீட்டில் விவசாயத்தில் ஈடுபட்டு வருகிறார். விவசாயத்தில் தொடர்ந்து கவனம் செலுத்தி வந்த எம்.எஸ்.தோனி ராஞ்சியில் உள்ள செம்போ கிராமத்தில் உள்ள தன் பண்ணை வீட்டில் மேலும் வாசிக்க …..

கிரிக்கெட் விளையாட்டு

தமிழக கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு ஹர்திக் பாண்டியா புகழாரம்

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய அணியில் உள்ள தமிழக கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு மூத்த வீரர் ஹர்திக் பாண்டியா புகழாரம் சூட்டி உள்ளார். ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி டி 20 போட்டிகளில் 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றுள்ளது. சிட்னியில் நடந்த இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்ற போதிலும் ஏற்கனவே இரு போட்டிகளில் இந்தியா வென்றுள்ளதால் தொடரைக் கைப்பற்றி உள்ளது. இந்த போட்டிகளில் குறிப்பிடத்தக்கது புதியதாக இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ள தமிழக மேலும் வாசிக்க …..

அரசியல் இயற்கை தேசியம் விளையாட்டு விவசாயம்

வேளாண் சட்டங்களை ரத்து செய்யாவிட்டால், கேல் ரத்னா விருதை திருப்பியளிப்பேன்- விஜேந்தர் சிங்

விவசாயிகளுக்கு ஆதரவாக வேளாண் சட்டங்களை ரத்து செய்யாவிட்டால், கேல் ரத்னா விருதை திருப்பியளிப்பேன் என்று குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங் அறிவித்துள்ளார். மத்திய பாஜக அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியின் புராரி மைதானத்திலும், டெல்லியின் அனைத்து எல்லைப் பகுதிகளிலும் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். கடுமையான குளிரையும் பொருட்படுத்தாமல் நெடுஞ்சாலைகளில் விவசாயிகள் தங்கள் போராட்டத்தை 11வது நாளாக தொடரந்து வருகின்றனர். பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்டி, வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்ற மேலும் வாசிக்க …..

கிரிக்கெட் விளையாட்டு

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டி- இந்திய அணி வெற்றி

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் 13 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3 வது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து, தொடக்க வீரர்களாக களமிறங்கிய தவான் 16 ரன்கள் மற்றும் ஷுப்மன் கில் 33 ரன்களில் ஆட்டமிழந்தனர். இதன்பிறகு களமிறங்கிய கேப்டன் விராட் கோலி அரைசதம் அடித்தார். இதன்மூலம் மொத்தமாக 242 ஒருநாள் போட்டியில் விளையாடி 12,000 ரன்களை மேலும் வாசிக்க …..

கிரிக்கெட் விளையாட்டு

ஆஸ்திரேலிய தொடரில் இடம் கிடைக்காதது ஏமாற்றமே; சூர்யகுமார் யாதவ்

ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணியில் இடம் கிடைக்காதது ஏமாற்றமே என மும்பை இந்தியன்ஸ் வீரர் சூர்யகுமார் யாதவ் வருத்தம் தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணி 3 ஒருநாள் போட்டி, மூன்று 20 ஓவர் போட்டி மற்றும் 4 டெஸ்டில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியா சென்றுள்ளது. ஒருநாள் தொடர் வருகிற 27 ஆம் தேதி தொடங்குகிறது. ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணியில் சூர்யகுமார் யாதவ் இடம் பெறுவார் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது. ஏனென்றால் ஐபிஎல் போட்டியில் அவர் அதிரடியான ஆட்டத்தை மேலும் வாசிக்க …..

கிரிக்கெட் விளையாட்டு

ஐபிஎல் 2020: ரூ.4000 கோடி வருமானம் ஈட்டிய பிசிசிஐ

அமீரக நாட்டில் நடத்தப்பட்ட ஐபிஎல் 2020 தொடரின் மூலம், பிசிசிஐ அமைப்பிற்கு ரூ.4000 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக அந்த அமைப்பின் பொருளாளர் அருண் துமால் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கடுமையான கொரோனா கட்டுப்பாடுகள் இருந்ததால் 2020 ஐபிஎல் தொடர் கடும் சிக்கல்களுக்கும் கடும் கட்டுப்பாடுகளுக்கும் இடையே ஐக்கிய அமீரகத்தில் நடந்து முடிந்துள்ளது. ஐபிஎல் போட்டிகள் செப்டம்பர் 19 முதல் நவம்பர் 10 வரை துபாய், அபுதாபி மற்றும் ஷார்ஜாவில் நடைபெற்றன. இந்நிலையில் இந்திய கிரிக்கெட் வாரிய பொருளாளர் அருண் மேலும் வாசிக்க …..

கேளிக்கை சினிமா விளையாட்டு

வெப் சீரிஸில் நடிகையாக அறிமுகமாகிறார் பிரபல டென்னிஸ் வீராங்கனை

பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸா முதன்முறையாக ஒரு வெப் சீரிஸில் நடிகையாக அறிமுகமாகவுள்ளார். 2020 ஜனவரி மாதம் வெளியான ‘எம்டிவி நிஷேத்’ தொடர், நோய், பாலியல், கருக்கலைப்பு போன்ற விஷயங்களில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டு நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் தற்போது இந்தத் தொடரின் அடுத்த பகுதி ‘எம்டிவி நிஷேத் அலோன் டூகெதர்’ என்ற தலைப்பில் உருவாகி உள்ளது. காசநோய் குறித்த விழிப்புணர்வு இந்தத் தொடரின் மையமாக இருக்கும் என்று தயாரிப்பாளர்கள் கூறியுள்ளனர். மேலும், மேலும் வாசிக்க …..

கிரிக்கெட் விளையாட்டு

ஐபிஎல் 2020: 5வது முறையாக ஐபிஎல் கோப்பையைக் கைப்பற்றியது மும்பை இந்தியன்ஸ் அணி

ஐபிஎல் 2020 இறுதிப்போட்டியில், டெல்லி கேபிடல்ஸ் அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி, 5வது முறையாக ஐபிஎல் கோப்பையைக் கைப்பற்றியது மும்பை இந்தியன்ஸ் அணி. கடந்த மார்ச் மாதம் துவங்கி, மே மாதம் நடந்து முடிந்திருக்க வேண்டிய ஐபிஎல் 2020 தொடர், கொரோனா பரவல் காரணமாக, ஆண்டின் கடைசிப் பகுதியில் ஐக்கிய அரபு அமீரக நாட்டில் நடைபெற்று முடிந்துள்ளது. ரசிகர்கள் இல்லாமல், தனிமைப்படுத்தல் உள்ளிட்ட பல்வேறு புதிய விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகளுடன் ஐபிஎல் தொடரை அமீரகத்தில் நடத்துவதற்கு மேலும் வாசிக்க …..

கிரிக்கெட் விளையாட்டு

பிரபல சிஎஸ்கே வீரர் ஓய்வு அறிவிப்பு.. அதிர்ச்சியில் ரசிகர்கள்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரரான பிரபல கிரிக்கெட் வீரர் ஷேன் வாட்சன் அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளிலும் இருந்து ஓய்வுபெற இருப்பதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. ஆஸ்திரேலிய அணி வீரரான ஷேன் வாட்சன் (வயது 39) 59 சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 3,731 ரன்கள் குவித்துள்ளார். 75 விக்கெட்டுகளையும் அவர் வீழ்த்தியுள்ளார். மேலும் 199 ஒருநாள், 56 டி20 போட்டிகளில் விளையாடியவர். கடந்த 2016 மார்ச் மாதம் இந்தியாவில் நடைபெற்ற டி20 உலகக் மேலும் வாசிக்க …..