2022 ஆம் ஆண்டிற்கான தேசிய விளையாட்டு விருதுகள் பட்டியலில் தமிழகத்தைச் சேர்ந்த சரத் கமலுக்கு கேல் ரத்னா விருதும், தமிழக செஸ் விளையாட்டு வீரர் பிரக்ஞானந்தா, இளவேனில் வாலறிவன் உட்பட 25 பேருக்கு அர்ஜூனா விருதும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்கும் வீரர், வீராங்கனைகளுக்கு ஆண்டுதோறும் கேல் ரத்னா, அர்ஜூனா விருது வழங்கி ஒன்றிய அரசு கவுரவித்து வருகிறது. அதன்படி 2022 ஆம் ஆண்டிற்கான தேசிய விளையாட்டு விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன

ஒன்றிய அரசின் இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ள தேசிய விளையாட்டு விருதுகள் பட்டியலில், தமிழக டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமலுக்கு மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும், தமிழகத்தைச் சேர்ந்த செஸ் வீரர் பிரக்ஞானந்தா, வில்வித்தை வீராங்கனை இளவேனில் வாலறிவன் ஆகியோருக்கு அர்ஜூனா விருது வழங்கப்பட உள்ளது.

அதேபோல் சீமா புனியா ( தடகளம்), எல்தோஸ் பால் (தடகளம்), அவினாஷ் முகுந்த் சேபிள் (தடகளம்), லக்ஷ்யா சென் (பேட்மிண்டன்), பிரணாய் (பேட்மிண்டன்), அமித் (குத்துச்சண்டை), நிகத் ஜரீன் (குத்துச்சண்டை), பக்தி பிரதீப் குல்கர்னி (செஸ்), டீப் கிரேஸ் எக்கா (ஹாக்கி), சுஷிலா தேவி (ஜூடோ), சாக்ஷி குமாரி (கபடி),

நயன் மோனி சைகியா, சாகர் கைலாஸ் ஓவல்கர் (மல்லகாம்ப்), ஓம்பிரகாஷ் மிதர்வா, ஸ்ரீஜா அகுலா (டேபிள் டென்னிஸ்), விகாஸ் தாக்கூர் (பளு தூக்குதல்), அன்ஷு (மல்யுத்தம்), சரிதா (மல்யுத்தம்), பர்வீன், மானசி கிரிஷ்சந்திரா ஜோஷி, தருண் தில்லான், ஸ்வப்னில் சஞ்சய் பாட்டீல், ஜெர்லின் அனிகா ஆகியோருக்கு அர்ஜுனா விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

துரோணாச்சார்யா விருது ஜிவன்ஜோத் சிங் தேஜா (வில்வித்தை), முகமது அலி கமர் (குத்துச்சண்டை), சுமா சித்தார்த் ஷிரூர் (பாரா ஷூட்டிங்), சுஜீத் மான் (மல்யுத்தம்) ஆகியோருக்கு வழங்கப்பட உள்ளது.

தயான் சந்த் விருது அஸ்வினி அக்குஜி (தடகளம் ) தரம்வீர் சிங் (ஹாக்கி) சுரேஷ் (கபடி) நீர் பகதூர் குராங்க்(பாரா தடகளம்), மற்றும் வாழ்நாள் சாதனைக்கான விருது ஜஹகர்லாத் (கிரிக்கெட்) விமல் பிரபுல்லா கோஷ் (கால்பந்து) ராஜ்சிங் (மல்யுத்தம்) உள்ளிட்டோருக்கு அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த விருதுகளை குடியரசுத் தலைவர் மாளிகையில் வரும் 30 ஆம் தேதி நடக்கவுள்ள விழாவில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு வழங்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் விருதுகள் பெற உள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.