கட்சிகள் சமூகம் தமிழ்நாடு திமுக தேசியம் வணிகம்

பெட்ரோல், டீசல் விலை உயர்வால் தவிக்கும் பொதுமக்கள்; தமிழகம் முழுவதும் திமுக ஆர்ப்பாட்டம்

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழகம் முழுவதும் இன்று (பிப்ரவரி 22) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்து வருகிறது. குறிப்பாக கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 75 ரூபாய் வரை சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டது. அதேபோல ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.92.59, டீசல் விலை ரூ.85.98 மேலும் வாசிக்க …..

அரசியல் கட்சிகள் காங்கிரஸ் தேசியம் தொழில்கள் பாஜக வணிகம் வர்த்தகம்

பெட்ரோல்,டீசல் விலை உயர்வு: பிரதமருக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடிதம்

பாஜக ஆட்சிக்கு வந்து 7 ஆண்டுகள் ஆன பின்னரும் பெட்ரோல்,டீசல் விலை உயர்வுக்கு முந்தைய அரசு மீது குறை கூறுவது வேதனையளிக்கிறது என காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். மோடி தலைமையிலான பாஜக ஆட்சியில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உள்ளிட்ட எரிபொருட்கள் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இதுகுறித்து பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில், “பாஜக மேலும் வாசிக்க …..

அரசியல் தமிழ்நாடு தேசியம் தொழில்கள் வணிகம் வர்த்தகம்

வரலாறு காணாத பெட்ரோல், டீசல் விலை உயர்வு; காங்கிரஸ் அரசே காரணம் என சொல்கிறார் மோடி

2013 ஆம் ஆண்டு பெட்ரோல், டீசல் விலை ரூ.7 வரை உயர்ந்ததற்கு அப்போதைய காங்கிரஸ் மத்திய அரசே காரணம் எனக் கூறிய நிர்மலா சீதாராமன், 2021 ஆம் ஆண்டு பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கும் அரசுக்கும் தொடர்பில்லை எனக் கூறிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு ஆட்சி அமைந்ததில் இருந்து சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை நிலவரங்களின் அடிப்படையில் இந்தியாவில் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலை மாற்றியமைக்கப்படுகிறது. மேலும் வாசிக்க …..

தமிழ்நாடு தேசியம் வணிகம்

11வது நாளாக தாறுமாறாக உயரும் பெட்ரோல், டீசல் விலை; தடுமாறும் பொதுமக்கள்

இந்தியாவில் கடந்த 11 நாட்களாக பெட்ரோல், டீசல் விலை தினசரி புது புது உச்சத்தை அடைந்து வருவது பொதுமக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் மாற்றியமைத்து வருகின்றன. பெட்ரோல் டீசல் விலை குறைவாக இருந்த சமயங்களில் மத்திய பாஜக அரசு கலால் வரியை அதிகரித்தது. இதனால் பெட்ரோல், டீசல் விலை பெரிய அளவில் குறையவில்லை. தற்போது கச்சா மேலும் வாசிக்க …..

சமூகம் தமிழ்நாடு தேசியம் வணிகம்

சாமானிய மக்களை கண்ணீர்விட வைக்கும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு

பட்ஜெட் அறிக்கையில் 1 கோடி இந்திய குடும்பங்களுக்குப் புதிதாக எல்பிஜி சமையல் எரிவாயு இணைப்பு கொடுக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட சில நாட்களில், அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் சமையல் எரிவாயுவின் விலையை உயர்த்தியுள்ளது. மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு ஆட்சி அமைத்தது முதல், இந்தியாவில் மாதந்தோறும் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி அமைக்கின்றன. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணையின் விலை, ரூபாய்க்கு நிகரான அமெரிக்க மேலும் வாசிக்க …..

சமூகம் தமிழ்நாடு தேசியம் வணிகம்

பெட்ரோல் லிட்டருக்கு ரூ.2.50; டீசல் ரூ.4 கூடுதல் செஸ் வரி- மத்திய பட்ஜெட்

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உச்சத்தை தொட்டு விட்ட நிலையில், அவற்றின் மீது கூடுதல் செஸ் வரி விதிக்கப்படுவதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரையில் தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களாகவே சென்னை உட்பட நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து விட்டது. சென்னையில் இன்று (ஜனவரி 01) ஒரு லிட்டர் பெட்ரோல் 88.82 ரூபாய்க்கும், ஒரு லிட்டர் டீசல் விலை 81.71 ரூபாய்க்கும் விற்பனை மேலும் வாசிக்க …..

உலகம் தேசியம் வணிகம் வர்த்தகம்

பங்குச்சந்தை முறைகேடு; முகேஷ் அம்பானிக்கு ரூ.15 கோடி அபராதம்

இந்திய பங்குச்சந்தைகள் ஒழுங்குமுறை வாரியம், பங்குச்சந்தை முறைகேடு செய்ததாக தொழில் அதிபர் முகே‌‌ஷ் அம்பானிக்கு ரூ.15 கோடி அபராதம் விதித்துள்ளது. செபி எனப்படும் இந்திய பங்குச்சந்தைகள் ஒழுங்குமுறை வாரியம் பங்கு வர்த்தகத்தில் நடைபெறும் மோசடிகளை கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருகிறது. கடந்த 2007 ஆம் ஆண்டு ரிலையன்ஸ் இன்ஸ்ட்ரீஸ் நிறுவனம் ரிலையன்ஸ் பெட்ரோலியம் நிறுவனத்தின் 4.1% பங்குகளை, பங்குவர்த்தகத்தை பாதிக்கும் வகையில் அது வீழ்ச்சி அடைந்த நேரத்தில் வாங்கி, விற்பனை செய்திருந்தது செபி விசாரணையில் கண்டறியப்பட்டது. இதனையடுத்து, மேலும் வாசிக்க …..

உலகம் வணிகம் வர்த்தகம்

ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரர் இடத்தை இழந்தார் முகேஷ் அம்பானி

2020 ஆம் ஆண்டின் கடைசி நாளில் சீனாவின் ஜாங் ஷான்ஷான் என்பவரால் ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரர் என்ற இடத்தை இழந்து, உலக டாப் 10 பணக்காரர்கள் பட்டியலில் இருந்து வெளியேற்றப்பட்டார் முகேஷ் அம்பானி. உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 2020 ஆம் ஆண்டு மிகப்பெரிய மாற்றங்கள் எதிர்கொண்ட நிலையில், சில நாட்களுக்கு முன்பு, முகேஷ் அம்பானி நிறுவனத்தின் பங்குகளின் விலை தொடர் வீழ்ச்சி கண்டது. இதனால் 11வது இடத்திற்குத் தள்ளப்பட்டு உள்ள முகேஷ் அம்பானி 2020 ஆம் ஆண்டின் மேலும் வாசிக்க …..

சமூகம் தேசியம் வணிகம்

இந்தியாவில் புகழ் பெற்ற நாசிக் ஒயினுக்கு புவிசார் குறியீடு

இந்தியாவில் ஒயின் தயாரிப்பில் புகழ் பெற்ற நாசிக் நகரில் தயாராகும் ஒயின் புவிசார் குறியீடு பெற்று, நாசிக் சமவெளி ஒயின் எனப் பெயரிடப்பட்டுள்ளது. நாசிக் நகரம் சர்வதேச அளவில் ஒயின் தயாரிப்புக்கு மிகவும் புகழ் பெற்றதாகும். உலக அளவில் புகழ் பெற்ற இந்த நாசிக் ஒயின் பிரிட்டன், அமெரிக்கா, மற்றும் கனடா ஆகிய நாடுகளில் மிக அதிக அளவில் விற்பனை ஆகிறது. தற்போது மத்திய அரசு இந்த நாசிக் ஒயினுக்கு மேலும் ஒரு சிறப்பை அளித்துள்ளது. நாசிக் மேலும் வாசிக்க …..

தேசியம் தொழில்கள் வணிகம் வேலைவாய்ப்புகள்

தவறுக்கு மன்னிப்பு கோரி, ஐபோன் இந்திய நிறுவனத்தின் துணைத் தலைவரை நீக்கிய விஸ்ட்ரான்

ஊழியர்களுக்கு 8 மாதங்களாக சம்பளம் கொடுக்காததால் ஐபோன் உற்பத்தித் தொழிற்சாலை அடித்து நொறுக்கப்பட்ட விவகாரத்தில், விஸ்ட்ரான் நிறுவனம், ஐபோன் நிறுவனத்தின் இந்திய துணைத் தலைவரை பணி நீக்கம் செய்து உத்தரவிட்டு உள்ளது. கர்நாடக மாநிலம் கோலார் பகுதியில் இயங்கும் ஐபோன் தொழிற்சாலையை தைவான் நாட்டைச் சார்ந்த விஸ்ட்ரான் நிறுவனம் நடத்தி வருகிறது. இந்த நிறுவனத்தில் பணியாற்றி வரும் தொழிலாளர்களுக்கு கடந்த 8 மாதங்களாக சம்பளம் வழங்கவில்லை. இதுதொடர்பாக தொழிற்சங்கங்கள் மூலம் பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும், ஊதியம் மேலும் வாசிக்க …..