கல்வி சமூகம் தமிழ்நாடு தேசியம்

அஞ்சலக தேர்வை தமிழிலும் எழுதலாம்; மத்திய அரசு பல்டி

அஞ்சலக கணக்கர் தேர்வு எழுதும் மொழி பட்டியலில் ஆங்கிலம், இந்தி மொழிகள் மட்டுமே இடம்பெற்றதற்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், தற்போது அஞ்சல் அலுவலக தேர்வுகளை தமிழிலும் எழுதலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. அஞ்சல் துறையில் உள்ள கணக்கர் (Accountant) வேலைக்கான தேர்வுகள் வருகிற பிப்ரவரி 14 ஆம் தேதி நடத்தப்பட உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பில் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகள் மட்டும் இடம் பெற்றிருந்தது. மத்திய அரசின் இந்த அறிவிப்பு தமிழக மக்களிடையே மேலும் வாசிக்க …..

கல்வி சமூகம் தமிழ்நாடு பெண்கள்

எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தில் மருத்துவ மாணவி தற்கொலையால் பரபரப்பு

காட்டாங்கொளத்தூரில் இயங்கிவரும் எஸ்ஆர்எம் கல்லூரி விடுதியில் தங்கி இருந்த மருத்துவ மாணவி தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை புறநகர் காட்டாங்கொளத்தூரில் அமைந்துள்ளது எஸ்ஆர்எம் பல்கலைக்கழகம். இதன் நிறுவனர் பாரிவேந்தர் நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார். எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தில் ஆண்டுதோறும் பலர் தற்கொலை செய்துகொள்வதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வருகிறது. 2019-20 ஆம் கல்வியாண்டில் மட்டும் எஸ்ஆர்எம் கல்வி நிறுவனத்தில் 4 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். 2 மாதங்களில் 3 தற்கொலை சம்பவங்கள் நடந்தேறிய சம்பவங்கள் மேலும் வாசிக்க …..

கல்வி சமூகம் தமிழ்நாடு

ஜனவரி 19 முதல் பள்ளிகள் திறப்பு உறுதி- தமிழக அரசு

தமிழகத்தில் ஜனவரி 19 ஆம் தேதி முதல் 10, 12 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படும்; அனைத்து மாணவர்களுக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வைட்டமின் மாத்திரைகள் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் 2020 மார்ச் 25 ஆம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிலையங்களும் மூடப்பட்டன. அதனையடுத்து ஆன்லைன் மூலம் மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில், தமிழகத்தில் பள்ளிகளை திறக்க பெற்றோர்கள், மாணவர்களுடன் மேலும் வாசிக்க …..

உயர் நீதிமன்றம் கல்வி சட்டம் சமூகம் தமிழ்நாடு

மருத்துவ படிப்பில் 7.5% இடஒதுக்கீட்டிற்கு தடைகோரிய வழக்கு- உயர்நீதிமன்றம் அதிரடி

மருத்துவ படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% இடஒதுக்கீடுக்கு தடை கோரிய வழக்கில், இடைக்கால உத்தரவு பிறப்பிக்க மறுப்பு தெரிவித்து, தமிழக அரசு 15 நாட்களில் பதில் மனுத் தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது சென்னை உயர்நீதிமன்றம். தமிழகத்தில் மருத்துவ படிப்புகளில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு சட்டம் இயற்றியது. இந்த சட்டத்தை எதிர்த்து தனியார் பள்ளி மாணவர்கள் சிலரும், அரசுப் பள்ளி மாணவர்களைப் போல, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் மேலும் வாசிக்க …..

கல்வி சமூகம் தேசியம்

கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் நீட்டிப்பு- UGC

உயர் கல்வி மாணவர்கள் தேசிய கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் ஜனவரி 20 ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக பல்கலைக்கழக மானியக்குழு (UGC) அறிவித்துள்ளது. இதுகுறித்து பல்கலைக்கழக மானியக்குழு விடுத்துள்ள அறிவிப்பில், முதுகலை பயிலும் மாணவிகளுக்கான கல்வி உதவித்தொகை, பல்கலைக்கழக அளவில் முதன்மை மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை, வட கிழக்கு மாநிலங்களுக்கான இஷான் உதய் சிறப்பு உதவித்தொகை மற்றும் முதுகலை பயிலும் SC, ST மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை ஆகிய 4 கல்வி மேலும் வாசிக்க …..

அரசியல் கல்வி சமூகம் தமிழ்நாடு

திமுக ஆட்சியில் மாணவர்களின் கல்விக் கடன் ரத்து- மு.க.ஸ்டாலின்

திமுக ஆட்சிக்கு வந்தால் மாணவர்களின் கல்விக் கடன் ரத்து செய்யப்படும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார். ஈரோடு மாவட்டம் வெள்ளோடு பகுதியில், இன்று திமுக சார்பில் நடைபெற்று வரும் மக்கள் கிராம சபைக் கூட்டத்தைத் துவக்கி வைத்து பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மக்களின் குறைகளைக் கேட்பதற்கான கூட்டம் தான் கிராமசபைக் கூட்டம். அதற்காகத்தான் இந்தக் கூட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறோம். இந்த கிராமசபை கூட்டம் என்பது வருடத்திற்கு 4 முறை நடைபெற வேண்டும். காந்தி ஜெயந்தி, மேலும் வாசிக்க …..

கல்வி சமூகம் தமிழ்நாடு மருத்துவம்

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான 2 ஆம் கட்ட கலந்தாய்வு ஜனவரி 4ல் தொடக்கம்

தமிழகத்தில் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கான 2 ஆம் கட்ட கலந்தாய்வு நாளை (ஜனவரி 4) தொடங்குகிறது. தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டுக்கான எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கு கலந்தாய்வு சென்னை நேரு விளையாட்டரங்கில் நவம்பர் 18 ஆம் தேதி தொடங்கியது. சிறப்பு பிரிவு, பொது பிரிவு, இடஒதுக்கீடு பிரிவு கலந்தாய்வு டிசம்பர் 10 ஆம் தேதி வரை நடந்தது. அதேபோல் டிசம்பர் 10 ஆம் தேதி முதல் தனியார் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டு மேலும் வாசிக்க …..

கல்வி சமூகம் தேசியம்

சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகள் மே 4 முதல் தொடங்கும்- அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்

சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் 2021 மே 4 ஆம் தேதி முதல் ஜூன் 10 ஆம் தேதி வரை நடத்தப்பட்டு, ஜூலை 15 ஆம் தேதிக்குள் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவித்துள்ளார். கொரோனா வைரஸ் பரவல் காரணமாக சிபிஎஸ்இ 10,12 ஆம் வகுப்பு மாணவர்கள் நடப்பு கல்வி ஆண்டில் பள்ளிக்குச் செல்லாமல், காணொலி மூலமே பாடங்களைக் கற்றுக்கொண்டு வருகின்றனர். கடந்த மாதம் அக்டோபர் 15 ஆம் தேதிக்குப்பின் சில மேலும் வாசிக்க …..

அரசியல் கல்வி சமூகம் தமிழ்நாடு

காயலான் கடையில் போடப்பட்ட தமிழக அரசின் விலையில்லா பாடப்புத்தகங்கள்

மயிலாடுதுறை அருகே பழைய பொருட்கள் வாங்கும் காயலான் கடையில், பண்டல் பண்டலாக தமிழக அரசின் விலையில்லா பாடப் புத்தகங்கள் விற்பனைக்கு வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசு சார்பில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணாக்கர்களுக்கு இலவசமாக விலையில்லா பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டு வருகிறது. நடப்பாண்டில், கொரோனா தொற்று காரணமாக கல்வி நிறுவனங்கள் இதுவரை திறக்கப்படாத நிலையில், மாணவர்களுக்கு புத்தகங்களை வழங்க அரசு உத்தரவிட்டிருந்தது. ஆனால், பல மாவட்டங்களில் பாடப் புத்தகங்களை முறையாக மேலும் வாசிக்க …..

அரசியல் கல்வி சமூகம் தமிழ்நாடு

கல்வி தொலைக்காட்சியில் காவி உடையில் திருவள்ளுவர்; சர்ச்சையில் கல்வித்துறை

தமிழக அரசின் கல்வி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பாடத்தில் காவி உடையில் திருவள்ளுவரின் உருவப்படம் இடம்பெற்றது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. கல்வித்துறையில் மாணவர்களின் பாடத்திட்டங்கள் குறித்து தொடர்ந்து சர்ச்சைகள் எழுந்து வருகின்றன. முன்னதாக பாரதியாரின் உடையில் காவி சாயம் பூசப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக தமிழக அரசு கல்வி தொலைக்காட்சி மூலம் வகுப்புகள் நடத்தி வருகிறது. அந்த கல்வி தொலைக்காட்சியில் மாணவர்களுக்கு காட்டப்பட்ட திருவள்ளுவரின் உடை முழுவதும் காவி மேலும் வாசிக்க …..