உயர் நீதிமன்றம் சட்டம் தமிழ்நாடு தேசியம்

ஆர்டிஓ அலுவலகம் செல்லாமல் ஓட்டுநர் உரிமம் விதிமுறைக்கு எதிரான வழக்கு: உயர்நீதிமன்றம் உத்தரவு

அங்கீகரிக்கப்பட்ட ஓட்டுநர் பயிற்சிப் பள்ளியில் பயிற்சி பெற்றால், ஆர்டிஓ அலுவலகம் செல்லாமல் உரிமம் பெறலாம் என்ற ஒன்றிய அரசின் புதிய விதி திருத்தத்திற்கு எதிரான வழக்கில் ஒன்றிய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஓட்டுனர் உரிமம் பெற வேண்டுமென்றால், வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் (ஆர்டிஓ) தனியாக ஓட்டுனர் சோதனையில் பங்கேற்க வேண்டும். அதில் தேர்ச்சி பெற்றால் தான் ஓட்டுனர் உரிமம் வழங்கப்படும். இந்நிலையில், மோட்டார் வாகன திருத்தச் சட்டத்தில் ஒன்றிய சாலை போக்குவரத்து அமைச்சகம் மேலும் வாசிக்க …..

உயர் நீதிமன்றம் கல்வி சட்டம் தமிழ்நாடு

கட்டண நிலுவையால் ஆன்லைன் வகுப்பில் மாணவர்களை சேர்க்க மறுப்பதா.. உயர் நீதிமன்றம்

கடந்த ஆண்டு பள்ளிக் கட்டண நிலுவைத் தொகையைச் செலுத்தாத மாணவர்களை தனியார் பள்ளிகள் ஆன்லைன் வகுப்பில் சேர்த்துக் கொள்ள மறுப்பதாக எழுந்துள்ள புகார் குறித்து பதிலளிக்க வேண்டும் எனத் தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை, ராயப்பேட்டையைச் சேர்ந்த வழக்கறிஞர் மகேந்திரன் என்பவர் தொடர்ந்த வழக்கு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், “நடப்பு 2021-22 ஆம் மேலும் வாசிக்க …..

உயர் நீதிமன்றம் கல்வி சட்டம் தமிழ்நாடு

தமிழ்நாடு அரசு குழு அமைத்தது அதிகார வரம்பு மீறல்- ஒன்றிய அரசு கதறல்

நீட் தேர்வு பாதிப்பு குறித்து ஆராய ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் தமிழ்நாடு அரசு குழு அமைத்தது அதிகார வரம்பு மீறல் என்று ஒன்றிய அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது. நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்காக தமிழ்நாடு அரசு தீவிரமாக முயன்று வருகிறது. இதற்காக முன்னாள் நீதிபதி நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் 9 பேர் அடங்கிய உயர்மட்டக்குழுவை அமைத்து தமிழ்நாடு அரசு கடந்த ஜூன் மாதம் உத்தரவிட்டுள்ளது. நீட் தேர்வின் மேலும் வாசிக்க …..

சட்டம் தமிழ்நாடு தேசியம்

சமூக ஆர்வலர் ஸ்டேன் சுவாமி உயிரிழப்பு: போராளிகள் புதைக்கப்படவில்லை; விதைக்கப்படுகிறார்கள்

பழங்குடியினருக்காக குரல் கொடுத்தவரும், சமூக ஆர்வலருமான ஸ்டான் சுவாமி சிறையில் உடல்நலக் குறைவால் உயிரிழந்ததற்கு பல்வேறு கட்சியினரும் பாஜகவிற்கு எதிராக கண்டனம் தெரிவித்துள்ளனர். தமிழகத்தின் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த 83 வயதான பாதிரியார் ஸ்டேன் சுவாமி, மகாராஷ்டிரா எல்கர் பரிஷத் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு, கடந்த 2020 ஆம் ஆண்டு அக்டோபர் 8ஆம் தேதி தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) அதிகாரிகள் மூலம் உபா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். 2018 ஆம் ஆண்டு பீமா- கொரேகான் வன்முறையை மேலும் வாசிக்க …..

அரசியல் உயர் நீதிமன்றம் சட்டம் தமிழ்நாடு பெண்கள்

பாலியல் புகார்; முன்னாள் அதிமுக அமைச்சர் மணிகண்டனிடம் போலீஸ் காவலில் தீவிர விசாரணை

முன்னாள் அதிமுக அமைச்சர் மணிகண்டனை 2 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ள நிலையில், மணிகண்டனிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னாள்அதிமுக அமைச்சர் மணிகண்டன் மீது நடிகை சாந்தினி பாலியல் புகார் கொடுத்தார். அதில் தன்னை திருமணம் செய்துகொள்வதாக ஆசைகாட்டி நெருக்கமாக பழகி சென்னை பெசன்ட் நகரில் தனி வீட்டில் கணவன்-மனைவி போல் வாழ்ந்து வந்ததாகவும், கட்டாயப்படுத்தி 3 முறை கருக்கலைப்பு செய்ததாகவும் புகாரில் கூறி இருந்தார். அவரது மேலும் வாசிக்க …..

சட்டம் தேசியம்

ஒன்றிய அரசு- ட்விட்டர் இடையே வெடித்தது மோதல்; ட்விட்டர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு

ட்விட்டர் இந்தியா நிறுவனம் மீது டெல்லி சைபர் க்ரைம் காவல்துறை போக்ஸோ மற்றும் ஐடி சட்டத்தின் கீழ் வழக்கு தொடர்ந்துள்ளது. இது ட்விட்டர் இந்தியா மீது பாயும் 4வது வழக்காகும். இந்தியாவில் சமூக வலைத்தளங்களுக்கும் ஓடிடி தளங்களுக்கும் ஒன்றிய பாஜக அரசு கடந்த பிப்ரவரி மாதம் புதிய சட்டங்களை கொண்டு வந்தது. இந்த சட்டங்களை ட்விட்டர் நிறுவனம் ஏற்றுக் கொள்ள மறுத்ததால், இந்தியாவில் ட்விட்டர் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டிருந்த சட்டப் பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டிருப்பதாக ஒன்றிய பாஜக அரசு மேலும் வாசிக்க …..

சட்டம் தமிழ்நாடு

தமிழ்நாடு காவல்துறையின் புதிய டிஜிபியாக சைலேந்திரபாபு ஐபிஎஸ் பதவியேற்பு

தமிழ்நாடு காவல்துறையின் 30வது சட்டம் – ஒழுங்கு டிஜிபியாக சைலேந்திர பாபு நியமிக்கப்பட்டு, இதற்கான உத்தரவை தமிழக தலைமை செயலாளர் இறையன்பு பிறப்பித்திருந்தார். இந்நிலையில், இன்று (30-06-2021) சைலேந்திர பாபு முறைப்படி பதவியேற்றுக் கொண்டார். தமிழ்நாடு காவல்துறையில் சிபிசிஐடி, சிறைத்துறை, லஞ்ச ஒழிப்புத்துறை, தீயணைப்புத் துறை, சீருடைப் பணியாளர் தேர்வாணையம் என பல டிஜிபிக்கள் பதவியில் இருந்தாலும் அனைத்திற்கும் தலையாயப் பதவி சட்டம்- ஒழுங்கு டிஜிபி அல்லது காவல்துறை தலைமை இயக்குநர் பதவி. இதை ஹெட் ஆஃப் மேலும் வாசிக்க …..

உச்ச நீதிமன்றம் சட்டம் தமிழ்நாடு தேசியம்

ஜூலை 31க்குள் ‘ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம்’- உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை திட்டத்தை அனைத்து மாநிலங்களும் ஜூலை 31 ஆம் தேதிக்குள் அமல்படுத்த வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு விதமான ரேஷன் கார்டுகள் நடைமுறையில் உள்ளன. இவற்றை மாற்றி ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை என்ற புதிய திட்டத்தை ஒன்றிய பாஜக அரசு அறிமுகப்படுத்தியது. தொடக்கத்தில் தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்கள் இத்திட்டத்தை எதிர்த்தன. இருப்பினும், ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை மேலும் வாசிக்க …..

கல்வி சட்டம் சமூகம் தமிழ்நாடு பெண்கள்

பாலியல் புகாரில் சிக்கிய PSBB பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மீது குண்டர் சட்டத்தில் வழக்குபதிவு

பாலியல் குற்றச்சாட்டில் கைதாகி சிறையில் உள்ள சென்னை பத்ம சேஷாத்ரி பால பவன் பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மீது குண்டர் சட்டத்தில் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை கே.கே.நகர் பத்ம சேஷாத்ரி பால பவன் (PSBB) என்ற தனியார் பள்ளியில் பணியாற்றிய வணிகவியல் ஆசிரியரான ராஜகோபாலன் வரதாச்சாரி, பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து ஆபாசமாக நடந்து கொண்டதாக புகார் எழுந்தது. மாணவிகள் கொடுத்த பாலியல் புகாரில், போக்சோ உள்ளிட்ட சட்ட பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, மேலும் வாசிக்க …..

அரசியல் சட்டம் தமிழ்நாடு திமுக

PSBB பள்ளி முன்னாள் மாணவர் கிஷோர் கே.சாமி மீது பாய்ந்தது குண்டர் சட்டம்!

சமூக வலைதளங்களில் தலைவர்கள், பெண் பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறு கருத்துக்கள் பரப்பிய முன்னாள் PSBB பள்ளி மாணவர் கிஷோர் கே.சாமி மீது குண்டாஸ் சட்டம் பாய்ந்துள்ளது. திமுக எதிர்ப்பாளராக தன்னை சமூக வலைதளப்பக்கங்களில் முன்னிறுத்திக் கொண்டவர் முன்னாள் PSBB பள்ளி மாணவரான கிஷோர் கே.சுவாமி. திமுக குறித்தும் மறைந்த முன்னாள் முதல்வர்கள் அண்ணா, கலைஞர் கருணாநிதி மற்றும் தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்தும் கடுமையான விமர்சனங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தவர் கிஷோர் கே.சுவாமி. திமுகவை ஆதரிப்பவர்களையும் மேலும் வாசிக்க …..