கொரானா சமூகம் தமிழ்நாடு மருத்துவம்

தமிழ்நாட்டில் 4வது மெகா தடுப்பூசி முகாம்- அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு

தமிழ்நாட்டில் 4வது மெகா தடுப்பூசி முகாம் அக்டோபர் 03 (ஞாயிற்றுக்கிழமை) நடத்தப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார். கொரோனாவை கட்டுப்படுத்த அதிவிரைவில் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் வகையில் மெகா தடுப்பூசி முகாம்களை தமிழ்நாடு அரசு நடத்தி வருகிறது. இதுவரை 3 மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. ஆனால் ஒன்றிய அரசிடமிருந்து போதிய தடுப்பூசி வராததால் 4வது மெகா தடுப்பூசி முகாம் நடத்த சாத்தியமில்லை என்று கூறப்பட்டது. இந்நிலையில் 4வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெறும் மேலும் வாசிக்க …..

அரசியல் ஆசியா உலகம் கொரானா தேசியம்

கொரோனா காலத்தில் தினசரி ரூ.1,002 கோடி வருமானம்- மோடி ஆட்சியில் அதானியின் அசுர வளர்ச்சி

ஆசிய பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி முதல் இடம் வகிக்கும் நிலையில், கவுதம் அதானியின் வருமானம் ஒரு நாளைக்கு ரூ.1,002 கோடியாக அதிகரித்து 2வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். கொரோனான வைரஸ் தாக்கத்தால் இந்தியாவில் கடந்த ஆண்டு கடும் பொருளாதார சரிவு ஏற்பட்டது. இந்த சரிவிலிருந்து இன்னும் மீள முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர். கொரோனா வைரஸ் தொற்று, ஊரடங்கு என தொடர் வருவாய் இழப்பு காரணமாக பல நிறுவனங்கள் மூடப்பட்டன. இதனால் லட்சக்கணக்கான மக்கள் வேலை இழந்து மேலும் வாசிக்க …..

கேரளா கொரானா தேசியம் மருத்துவம்

வெளவால்களில் நிபா வைரஸ் நோய் எதிர்ப்புத் திறன்- அமைச்சர் வீணா ஜார்ஜ்

நிபா வைரஸ் பாதிப்புக்கான நோய் எதிர்ப்புத் திறன், அதனைப் பரப்பும் வௌவால்களிடமே இருப்பது அவற்றின் மாதிரிகளின் ஆய்வு முடிவில் கண்டறியப்பட்டுள்ளதாக கேரள சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார். இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வரும் நிலையில், கேரளாவில் இன்னும் கொரோனா வைரஸ் தாக்கம் குறைந்தபாடில்லை. இந்தியாவில் அன்றாடம் பதிவாகும் கொரோனா பாதிப்பில் 50%க்கும் மேலான பாதிப்பு கேரள மாநிலத்தில் மட்டுமே பதிவாகிறது. இந்நிலையில் செப்டம்பர் தொடக்கத்தில் நிபா வைரஸ் பாதிப்பும் கேரளாவில் பரவத் மேலும் வாசிக்க …..

கல்வி கொரானா சமூகம் தமிழ்நாடு

1 முதல் 8 ஆம் வகுப்புகளுக்கான பள்ளிகள் திறப்பு- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

1 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவ மாணவிகளுக்கான வகுப்புகள், நவம்பர் 1 ஆம் தேதி முதல் நடத்த அனுமதிக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தமிழ்நாட்டில், கொரோனா நோய்த் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், 31.10.2021 காலை 6.00 மணி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனா நோய்த் தொற்று பரவலைத் தொடர்ந்து கண்காணித்து கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், அண்டை மாநிலங்களில் நோய்த் மேலும் வாசிக்க …..

கொரானா சமூகம் தமிழ்நாடு

அக்டோபரில் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும்- மருத்துவ வல்லுநர்கள் எச்சரிக்கை

அக்டோபரில் கொரோனா தொற்று அதிகரிக்கும் என வல்லுநர்கள் கணித்துள்ளதால் பொதுமக்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கைளை பின்பற்ற வேண்டும் என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் எச்சரித்துள்ளார். தமிழ்நாட்டில் கொரோனா பரவல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்ட நிலையில், பல்வேறு தளர்வுகளை அரசு அமல்படுத்தியதால், பொதுமக்களும் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பினர். திரையரங்குகள், கடற்கரைகள், மீன் மார்க்கெட்டுகள் ஆகியவை கட்டுப்பாடின்றி திறக்கப்பட்டதால் மக்களின் கூட்டம் பெருக்கெடுத்தது. ஆனால், இந்த இடங்களில் கொரோனா கட்டுப்பாட்டு வழிமுறைகளை மக்கள் கடைப்பிடிப்பதில்லை. குறைந்தபட்சம் முகக் கவசம் கூட அணிவதில்லை. மேலும் வாசிக்க …..

கேரளா கொரானா தமிழ்நாடு

நிபா வைரஸ் குறித்து அச்சப்பட தேவையில்லை: சுகாதாரத்துறை ராதாகிருஷ்ணன்

கேரளாவில் நிபா வைரஸ் பரவி வரும் நிலையில், தமிழ்நாட்டில் நிபா வைரஸ் குறித்து மக்கள் அச்சப்படவேண்டாம் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். கேரள மாநிலத்தில் பக்ரீத் மற்றும் ஓணம் பண்டிகைகளுக்குப் பின்னர், கொரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. கடந்த சில நாட்களாக 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு அங்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருகிறது. இந்த சூழலில் கேரளாவில் தற்போது நிபா வைரஸ் பாதிப்பும் கண்டறியப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் கோழிக்கோட்டில் கோழிக்கோடு மேலும் வாசிக்க …..

கொரானா சமூகம் தமிழ்நாடு தேசியம் மகராஷ்டிரா

இந்துக்களுக்கு எதிரானது அல்ல, கொரோனாவுக்கு தான் எதிரானது: முதல்வர் உத்தவ் தாக்கரே பதிலடி

விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு கட்டுப்பாடு விதித்துள்ள மஹாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே, தனது அரசு இந்துக்களுக்கு எதிரானது அல்ல, கொரோனாவுக்கு தான் எதிரானது என்று பதிலடி கொடுத்துள்ளார். இந்தியாவில் குறைந்து வந்த கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்கத் துவங்கியுள்ளது. இதனால் அடுத்தடுத்து நாட்களில் வரும் விழாக்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் என ஒன்றிய அரசு, மாநில அரசுகளுக்குக் கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளது. இதனையடுத்து தமிழ்நாடு, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல மாநிலங்களில் விழாக்களுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு பாஜகவினர் மேலும் வாசிக்க …..

கொரானா தமிழ்நாடு

பொது இடங்களில் விநாயகர் சிலை வழிபாடு, ஊர்வலம் நடத்தத் தடை: தமிழ்நாடு அரசு

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பொது இடங்களில் சிலைகள் வைத்து வழிபடவும், சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று நீர்நிலைகளில் கரைப்பதற்கும் அனுமதி இல்லை என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பாகத் தமிழ்நாடு அரசு இன்று (ஆகஸ்ட் 30) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “தமிழ்நாட்டில் தற்போது வரும் பண்டிகைக் காலங்களில் கொரோனா நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்த அதிகளவில் மக்கள் கூடுவதைத் தவிர்ப்பது போன்ற தேவையான கட்டுப்பாடுகளைத் தொடர்ந்து அமல்படுத்த ஒன்றிய உள்துறை அமைச்சகம் மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாலும், தற்போது அண்டை மாநிலமான மேலும் வாசிக்க …..

கேளிக்கை கொரானா சினிமா தமிழ்நாடு

கொரோனா தடுப்பூசியால் நடிகர் விவேக் மரணமா… மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

நடிகர் விவேக் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதால் மரணமடைந்ததாக எழுந்த புகாரை தேசிய மனித உரிமை ஆணையம் விசாரணைக்கு ஏற்றுள்ளது தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் நடிகர் விவேக் (வயது 58). இவருக்கு கடந்த ஏப்ரல் 16 ஆம் தேதி திடீர் மாரடைப்பு ஏற்பட்டு, சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு விவேக்கிற்கு ஆஞ்சியோகிராம் உள்ளிட்ட தீவிர சிகிச்சையளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி ஏப்ரல் மாதம் 17 மேலும் வாசிக்க …..

கொரானா சமூகம் தேசியம்

இனி வாட்ஸ்அப்பில் கொரோனா தடுப்பூசி சான்றிதழ்: ஒன்றிய சுகாதாரத்துறை

கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்கள் அதற்குரிய சான்றிதழை சில வினாடிகளில் வாட்ஸ்அப் மூலம் பெறும் வசதியை ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிமுகம் செய்துள்ளது. கொரோனா 3வது அலையை தடுக்க நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது. இந்தியாவில் இதுவரை 50.68 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 55.91 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதற்கு முன் கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்கள், பதிவு செய்த செல்போன் எண்ணுக்கு ஒரு லிங்க் அனுப்பப்படும். மேலும் வாசிக்க …..