கேளிக்கை சினிமா

சிபிராஜ் நடிப்பில் ‘கபடதாரி’ ட்ரைலர் வெளியீடு

பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் சிபிராஜ்- நந்திதா ஸ்வேதா நடிப்பில் உருவாகி இருக்கும் படம் கபடதாரி. சஸ்பென்ஸ், எமோஷனல் திரில்லராக உருவாகும் கபடதாரி படத்தில் சிபிராஜுடன் இணைந்து நாசர், ஜெயபிரகாஷ், ஜே.சதிஷ் குமார், மயில்சாமி மற்றும் பல முக்கிய நடிகர்கள் நடித்துள்ளார்கள். கிரியேட்டிவ் என்டர்டெயின்மெண்ட் அண்ட் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் சார்பில், லலிதா தனஞ்செயன் படத்தைத் தயாரிக்கும் இப்படத்தின் கதையை எம்.ஹேமந்த் ராவ் எழுதியிருக்கிறார். திரைக்கதையையும் வசனங்களையும் இயக்குநர் மகேந்திரனின் மகன் ஜான் மகேந்திரனும், தனஞ்செயனும் எழுதியுள்ளார்கள். கபடதாரி படம் ஜனவரி மேலும் வாசிக்க …..

அரசியல் கேளிக்கை சினிமா தமிழ்நாடு

நான் ஒருபோதும் அரசியலுக்கு வரப்போவதில்லை- ரஜினி உறுதி

நான் அரசியலுக்கு வரவேண்டுமென்று கூறி என்னை யாரும் வேதனைக்கு உள்ளாக்க வேண்டாம்; நான் ஒருபோதும் அரசியலுக்கு வரப்போவதில்லை என்று நடிகர் ரஜினி திட்டவட்டமாகக் கூறியுள்ளார். நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டும் என்று வலியுறுத்தி, ரஜினியின் ரசிகர்கள் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் நடத்தினர். வழக்கம்போல், இந்த போராட்டம் குறித்தும், ரஜினி அரசியலுக்கு வருவது குறித்து மீண்டும் மறுபரிசீலனை செய்வார் என்றும் ஊடகங்களால் பரபரப்பான செய்தியாக்கப்பட்டது. இந்நிலையில், போராட்டம் நடத்தி முடிந்து ஒருநாள் கழித்து ரஜினி அறிக்கை மேலும் வாசிக்க …..

கேளிக்கை சினிமா

விக்ரம் நடிப்பில் ‘கோப்ரா’ படத்தின் டீஸர் வெளியீடு

நடிகர் விக்ரமின் ‘கோப்ரா’ படத்தின் டீஸர் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் படங்களுக்கு அடுத்ததாக விக்ரம் நடிக்கும் ‘கோப்ரா’ படத்தை இயக்கியுள்ளார் அஜய் ஞானமுத்து. தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மூன்று மொழிகளில் உருவாகும் இப்படத்தில் கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான் நடிகராக அறிமுகமாகிறார். இந்த படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக கேஜிஎஃப் புகழ் ஸ்ரீநிதி ஷெட்டி நடித்திருக்கிறார். இப்படத்தில் கே.எஸ்.ரவிக்குமார், ஆனந்த ராஜ், ரோபோ ஷங்கர், மியா ஜார்ஜ், மேலும் வாசிக்க …..

கேளிக்கை சினிமா தமிழ்நாடு

திரையரங்குகளில் 50% இருக்கைக்கு மட்டுமே அனுமதி; தமிழக அரசு திடீர் பல்டி

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவையடுத்து, திரையரங்குகளில் 100% இருக்கைகளை பயன்படுத்த அனுமதி அளித்ததை தமிழக அரசு திரும்ப பெற்றுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில், “கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுப்பதற்காக, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் 25.3.2020 முதல் ஊரடங்கு உத்தரவு பல்வேறு தளர்வுகளுடன் அமலில் இருந்து வருகிறது. தமிழ்நாடு அரசின் சிறப்பான செயல்பாட்டினாலும், பொதுமக்களின் ஒத்துழைப்பினாலும் நோய் தொற்று கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. கடந்த 4.1.2021 மேலும் வாசிக்க …..

கேளிக்கை கொரானா சினிமா தமிழ்நாடு

100% இருக்கைகளுக்கு அனுமதி: தமிழக அரசின் முடிவுக்கு உயர்நீதிமன்றம் தடை

திரையரங்குகளை 100% பார்வையாளர்கள் இருக்கைகளுடன் திறக்கலாம் என்ற தமிழக அரசின் முடிவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விஜய் நடித்த மாஸ்டர், சிம்பு நடித்த ஈஸ்வரன் திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியிடப்படுகின்றன. இந்த படங்கள் வெளியிடப்படுவதால் திரையரங்குகள் 100% பார்வையாளர்கள் இருக்கைகளுடன் இயங்க அனுமதிக்க வேண்டும் என திரைத்துறையினர் கோரிக்கை விடுத்தனர். இந்த கோரிக்கையை ஏற்று திரையரங்குகள் 100% இருக்கைகளுடன் செயல்பட அனுமதி அளித்தது தமிழக அரசு. ஆனால் தமிழக அரசின் முடிவுக்கு மேலும் வாசிக்க …..

கேளிக்கை சினிமா

நடிகர் விஜய்யின் மாஸ்டர் சாதனையை முறியடித்த ‘கேஜிஎப்-2’

கேஜிஎப் 2 டீசர் 10 மணிநேரத்தில் 2 மில்லியன் லைக்குகளை பெற்று உலக அளவில் புதிய சாதனைப் படைத்ததுடன், விஜய்யின் மாஸ்டர் பட டீசர் செய்திருந்த சாதனையையும் முறியடித்துள்ளது. இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் கேஜிஎப். இதில் நடிகர் யாஷ் கதாநாயகனாக நடித்திருந்தார். இந்தியளவில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இப்படம், நடிகர் யாஷுக்கு பரவலான ரசிகர்களை உருவாக்கித் தந்தது. தற்போது கேஜிஎப் படத்தின் இரண்டாம் மேலும் வாசிக்க …..

கேளிக்கை சினிமா தமிழ்நாடு

100% திரையரங்குகள் செயல்பட அனுமதித்தது தற்கொலைக்கு சமம்- மருத்துவர்கள்

புதிய கொரோனா திரிபு தொற்று பரவிவரும் நிலையில் திரையரங்குகள் 100% இருக்கைகளுடன் செயல்பட அனுமதித்திருப்பது தற்கொலைக்கு சமம் என மருத்துவர்கள் அச்சம் தெரிவித்து உள்ளனர். கொரோனா தொற்று பரவுவதன் காரணமாக தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் 24 ஆம் தேதியில் இருந்து திரையரங்குகள், கடற்கரை, நீச்சல் குளம், படப்பிடிப்புகள் என அனைத்து விதமான கேளிக்கைகளுக்கும் விதிக்கப்பட்டிருந்த தடை நவம்பர் மாதம் வரை நீடித்தது. இதனையடுத்து கொரோனா பரவல் குறைந்ததை அடுத்து நவம்பர் 10 ஆம் தேதி கடுமையான மேலும் வாசிக்க …..

கேளிக்கை சினிமா தமிழ்நாடு

திரையரங்குகளில் 100% இருக்கைகளுக்கு அனுமதி- தமிழக அரசு

தமிழகத்தில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் 100% இருக்கைக்கு அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கினால் கடந்த மார்ச் மாதம் முதல் திரையரங்குகள் மூடப்பட்டன. இதனால் திரையரங்க உரிமையாளர்கள் கடுமையான நஷ்டத்தை எதிர்கொண்டனர். அத்துடன் ஏராளமான திரையரங்க ஊழியர்களும் தங்களது வாழ்வாதாரத்தை இழந்தனர். அதன்பின்னர், மத்திய அரசு அக்டோபர் 15 ஆம் தேதி முதல் 50% பார்வையாளர்களுடன் திரையரங்குகளை திறக்கலாம் என அனுமதியளித்தது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக தமிழக மேலும் வாசிக்க …..

கேளிக்கை சினிமா

தாதாசாகேப் பால்கே விருதுகள் 2020: அஜித், தனுஷ், ஜோதிகா தேர்வு

நடிகர் அஜித், தனுஷ் மற்றும் நடிகை ஜோதிகா ஆகியோர் 2020 ஆம் ஆண்டிற்கான தென்னிந்திய திரையுலகின் தாதாசாகேப் பால்கே விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட திரையுலகின் சிறந்த, திறமையான கலைஞர்களை கவுரவிக்கும் வகையில் தாதாசாகேப் பால்கே தென்னிந்திய சினிமா விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்நிலையில், 2020 ஆம் ஆண்டுக்கான தாதாசாகேப் பால்கே தென்னிந்திய சினிமா விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த வருடத்திற்கான தாதாசாகேப் பால்கே விருதுக்கு நடிகர் அஜித்குமார், தனுஷ், ஜோதிகா ஆகியோர் தென்னிந்திய மேலும் வாசிக்க …..

கேளிக்கை சினிமா

விஜய் சேதுபதி நடிப்பில் ‘முகிழ்’ வெப் திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீடு

நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘முகிழ்’ வெப் திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் விஜய் சேதுபதி. இவரது நடிப்பில் கடைசியாக வெளியான படம் க/பெ.ரணசிங்கம். இப்படம் கொரோனா லாக்டவுன் காரணமாக ஜீ5 ஓடிடி தலத்தில் வெளியானது. ஆனால் இப்படத்திற்கு போதுமான வரவேற்பு இல்லை. தற்போது நடிகர் விஜய்யுடன் இணைந்து விஜய் சேதுபதி நடித்த மாஸ்டர் படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 13 மேலும் வாசிக்க …..