அதிமுக அரசியல் கேளிக்கை சினிமா தமிழ்நாடு

எம்ஜிஆர் காலத்தில் நிகழ்ந்த அதிரடிகளும் தான தர்மங்களும்..

இன்று (17.10.2021) காலையில் சுமார் ஏழரை மணி அளவில் காரை ஓட்டிக்கொண்டு சூளைமேடு தாண்டி ஹாரிங்டன் ரோடு தரைப்பாலம் நோக்கி செல்லும் பாதையில்.. திரைப்படத்தில் எம்.ஜி.ஆர் பாடிய சோகப் பாட்டு தரைப்பாலம் நுழையும்முன் பந்தல் கட்டிய ஸ்பீக்கரில் காது கிழியும் படி கேட்டது.. உரைப்பார் அழுவார் துடிப்பார் அழுவார் யார் யாரோ நான் யார் நீ யார் நீ யார் நாலும் தெரிந்தவர் யார் யார்.. பாட்டு வந்த திசையை நோக்கி யாரும் இறந்து விட்டார்களா என்று மேலும் வாசிக்க …..

சமூகம் சினிமா தேசியம்

நடிகர் ஷாருக்கான் மகனுக்கு 14 நாட்கள் நீதிமன்றக் காவல்; மீண்டும் ஜாமின் மறுப்பு

சொகுசு கப்பலில் போதைப் பொருள் பயன்படுத்திய வழக்கில் கைதான நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கானுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், அவரது ஜாமின் மனு மறுக்கப்பட்டுள்ளது. மும்பையில் இருந்து கோவா சென்ற சொகுசு கப்பலில் போதைப்பொருள் விருந்து நிகழ்ச்சி நடப்பதாக தேசிய போதைப்பொருள் தடுப்புப் பிரிவினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து அவர்கள் நடத்திய அதிரடி சோதனையில் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் உள்பட 16 பேர் கைது மேலும் வாசிக்க …..

கேளிக்கை சட்டம் சினிமா தேசியம்

போதைப் பொருள் விவகாரத்தில் ஆர்யன் கானுக்கு ஜாமின் மறுப்பு; அக்டோபர் 07 வரை காவல்

சொகுசு கப்பல் போதைப்பொருள் விருந்து விவகாரத்தில் சிக்கியுள்ள ஆர்யன் கானை வருகிற 7 ஆம் தேதி வரை காவலில் எடுத்து விசாரணை நடத்த என்சிபிக்கு மும்பை நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. மும்பையில் இருந்து கோவாவுக்கு அக்டோபர் 02 ஆம் தேதி சென்ற சொகுசு கப்பலில் தடை செய்யப்பட்ட போதை பொருட்களுடன் விருந்து நடக்க இருப்பதாக போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து 20-க்கும் மேற்பட்ட போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் சுற்றுலா பயணிகள் போல அந்த கப்பலில் மேலும் வாசிக்க …..

கலாச்சாரம் சமூகம் சினிமா தேசியம்

சொகுசு கப்பலில் போதை பொருள் பார்ட்டி; ஷாருக்கான் மகன் உள்பட பாலிவுட் பிரபலங்கள் கைது!

மும்பையில் சொகுசு கப்பலில் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் (Narcotics Control Bureau) நடத்திய சோதனையில் பல கோடி மதிப்புள்ள போதை பொருள் சிக்கிய நிலையில், பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் உள்பட 13 பாலிவுட் பிரபலங்களை கைது செய்துள்ளனர். மும்பை உள்ளிட்ட இந்தியாவின் பல பெரு நகரங்களில் சொகுசு கப்பல்களை வைத்திருக்கும் நிறுவனங்கள் அடிக்கடி பணக்காரர்களுக்காக பல்வேறு வகையான கடல் பயண சுற்றுலாக்களை நடத்துவது உண்டு. சில தனியார் அமைப்புகளும், சொகுசு கப்பல்களை மேலும் வாசிக்க …..

அரசியல் சினிமா தேசியம் பாஜக

விளம்பர தூதராக நடிகை கங்கனா ரனாத் நியமனம்- முதல்வர் யோகி ஆதித்யநாத்

உத்தரப் பிரதேச யோகி ஆதித்யநாத் அரசின் ‘ஒரு மாவட்டம் ஒரு தயாரிப்பு’ திட்டத்தின் விளம்பர தூதராக நடிகை கங்கனா ரனாத் நியமிக்கப்பட்டுள்ளார். உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் ‘ஒரு மாவட்டம் ஒரு தயாரிப்பு’ (One district one product- ODOP) என்கிற திட்டத்தை ஏற்படுத்தி உள்ளார் யோகி ஆதித்யநாத். இந்நிலையில் மாநில அரசின் ‘ஒரு மாவட்டம் ஒரு தயாரிப்பு’ திட்டத்தினை மக்களிடம் கொண்டு மேலும் வாசிக்க …..

அரசியல் சினிமா தமிழ்நாடு வாக்கு & தேர்தல்

உள்ளாட்சி தேர்தலில் நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கம்..

9 மாவட்டங்களில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கம் போட்டியிடும் என்று நடிகர் விஜய் மக்கள் இயக்க மாநில பொதுசெயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் ஊராட்சி ஒன்றியத்திற்கான உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் 6 மற்றும் 9 ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உள்ளாட்சி தேர்தலுக்கான மேலும் வாசிக்க …..

கேளிக்கை சினிமா தமிழ்நாடு

தந்தை, தாய் உள்ளிட்ட 11 பேர் மீது வழக்கு: சர்ச்சையில் நடிகர் விஜய்

தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர், தாய் ஷோபா உள்ளிட்ட தனது மக்கள் இயக்க நிர்வாகிகள், தனது பெயரைப் பயன்படுத்தி கூட்டங்களை நடத்த தடை விதிக்கக் கோரி, நடிகர் விஜய் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. நடிகர் விஜய் அரசியலுக்கு வர வேண்டுமென அவரது ரசிகர்கள் வலியுறுத்தி வந்த நிலையில், கடந்த ஆண்டு ரசிகர்களை சந்தித்து விஜய் ஆலோசனை நடத்தினார். இதனையடுத்து, அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் கட்சியைப் பதிவு மேலும் வாசிக்க …..

உயர் நீதிமன்றம் கேளிக்கை சட்டம் சினிமா தமிழ்நாடு

நுழைவு வரியை செலுத்திவிட்டார் நடிகர் விஜய்: உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு

ரோல்ஸ் ராய்ஸ் காருக்கான நுழைவு வரியை நடிகர் விஜய் செலுத்தி விட்டதாக தமிழ்நாடு அரசு தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் விஜய் கடந்த 2012 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் இருந்து ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் சொகுசு காரை இறக்குமதி செய்தார். இந்த காரை பதிவு செய்ய வட்டார போக்குவரத்து அலுவலகத்தை அணுகிய போது, வாகனத்திற்கு நுழைவு வரி செலுத்த அறிவுறுத்தப்பட்டது. இதனையடுத்து, காரை இறக்குமதி செய்த போது இறக்குமதி வரி செலுத்தியுள்ள நிலையில், நுழைவு வரி மேலும் வாசிக்க …..

அரசியல் சினிமா தமிழ்நாடு

கவிஞர் புலமைப்பித்தன் மறைவு; அரசியல் தலைவர்கள் அஞ்சலி

அதிமுகவின் முன்னாள் அவைத் தலைவரும் கவிஞருமான புலமைப்பித்தன் சென்னையில் உடல்நலக் குறைவால் காலமானார். மறைந்த எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவுக்கும் மிக நெருங்கிய நண்பர்களில் ஒருவரான புலமைப்பித்தன், தமிழக அரசின் முன்னாள் சட்ட மேலவைத் துணைத் தலைவராகவும், அரசவைக் கவிஞராகவும், அதிமுக அவைத் தலைவராகவும் பல்வேறு பதவிகளை வகித்தவர். சமீபத்தில் வயது முதிர்வின் காரணமாக உடல்நலம் குன்றியிருந்த கவிஞர் புலமைப்பித்தன், சென்னை அடையாறு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சைப் பலனின்றி செப்டம்பர் 08 காலை உயிரிழந்தார். மேலும் வாசிக்க …..

அரசியல் கேளிக்கை சினிமா தமிழ்நாடு திமுக

சமூகநீதி நாள்: முதல்வர் ஸ்டாலினுக்கு நடிகர் சத்யராஜ் நன்றி

தந்தை பெரியாரின் பிறந்த நாளை சமூக நீதி நாளாக அறிவித்த தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நடிகர் சத்யராஜ் நன்றி தெரிவித்துள்ளார். பெரியாரின் பிறந்த நாளான செப்டம்பர் 17ம் தேதி தமிழகத்தில் சமூக நீதி நாளாகக் கொண்டாடப்படும் எனவும், தலைமைச் செயலகம் தொடங்கி அனைத்து அரசு அலுவலகங்களிலும் அன்றைய தினத்தில் உறுதிமொழி எடுக்கப்படும் எனவும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியிட்டிருந்தார். முதல்வரின் இந்த அறிவிப்புக்கு பல்வேறு தரப்பினரும் நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டு வருகின்றனர். அந்தவகையில், மேலும் வாசிக்க …..