கொரானா சமூகம் தமிழ்நாடு பயணம்

ஊரடங்கு அச்சத்தால் சொந்த ஊர் பயணம்; நிரம்பி வழியும் ரயில் நிலையங்கள்

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்ததை தொடர்ந்து இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் முழு ஊரடங்கு வந்து விடுமோ என்ற அச்சத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் கூட்டம் கூட்டமாக சொந்த ஊர் செல்ல படையெடுப்பதால் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் நிரம்பி வழிகிறது. நாட்டில் கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிரா முதல் இடத்திலும், தமிழகம் 4வது இடத்திலும் உள்ளது. தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 11 ஆயிரத்தை எட்டியுள்ளது. ஒருநாள் கொரொனா மரணங்கள் எண்ணிக்கை 44 ஆக அதிகரித்துள்ளது. இதனையடுத்து மேலும் வாசிக்க …..

சமூகம் தமிழ்நாடு தேசியம் பயணம்

முதல்வர் பழனிசாமி சென்ற விமானத்தில், அழுததால் இறக்கிவிடப்பட்ட 4 மாத குழந்தை, தாய்

தமிழக முதல்வர் பழனிசாமி சென்னையில் இருந்து டெல்லி சென்ற விமானத்தில், 4 மாத குழந்தை அழுதது இடையூறாக இருப்பதாகக் கூறி, தாயும், குழந்தையும் இறங்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டது சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் இருந்து நேற்று (ஜனவரி 18) மதியம் 12 மணிக்கு டெல்லி செல்லும் விஸ்டாரா விமானத்தில் தமிழக முதல்வர் பயணித்தார். 94 பயணிகளுடன் சென்னையில் இருந்து டெல்லி புறப்பட இருந்த விஸ்டாரா விமானத்தில், டெல்லியை சோ்ந்த லட்சுமிதேவி (வயது 30) என்ற பெண், மேலும் வாசிக்க …..

சமூகம் தமிழ்நாடு பயணம்

பொங்கல் பண்டிகை: தமிழகத்தில் 16,221 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

ஜனவரி 14 ஆம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பொது மக்களின் வசதிக்காக, 16,221 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையிலிருந்து 11, 12, 13 ஆகிய தேதிகளில் இயக்கப்படும் 10,228 பேருந்துகளில் 11ஆம் தேதி 2,226 பேருந்துகளும், 12ஆம் தேதி 4,000 பேருந்துகளும், 13ஆம் தேதி 4,002 பேருந்துகளும் பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்படுகின்றன. மேலும், பல்வேறு மாவட்டங்களிலிருந்து 5,993 பேருந்துகள் என ஆக மொத்தம் 16,221 பேருந்துகள் மேலும் வாசிக்க …..

சமூகம் தமிழ்நாடு பயணம்

சென்னை புறநகர் ரயிலில் நாளை முதல் பொதுமக்கள் பயணிக்க அனுமதி- தெற்கு ரயில்வே

சென்னை புறநகர் ரயிலில் நாளை (டிசம்பர் 23) முதல் பொதுமக்கள் அனைவரும் பயணிக்க அனுமதி வழங்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக சென்னை புறநகர் ரயில் சேவை முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. கொரோனா வைரஸ் தொற்று கட்டுக்குள் வர படிப்படியாக தளர்வுகள் அளிக்கப்பட்டது. முதலில் அத்தியாவசிய பணியாளர்களுக்காக குறைந்த அளவில் சென்னை புறநகர் ரயில் சேவை மீண்டும் தொடங்கப்பட்டது. புறநகர் ரயில் சேவை முடக்கத்தால் வேலைக்கு செல்லும் சென்னைவாசிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். ஆனால் சேவை மேலும் வாசிக்க …..

சமூகம் தமிழ்நாடு பயணம்

தனியார்மயமான ஊட்டி- மேட்டுப்பாளையம் மலை ரயில்… வலுக்கும் எதிர்ப்புகள்

ஊட்டி- மேட்டுப்பாளையம் சிறப்பு மலை ரயில் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டு, ரூ.475 என இருந்த பயணக் கட்டணம், ரூ.3000 என பன்மடங்கு உயர்த்தப்பட்டுள்ளதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். கோவை மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டி மலைப் பாதையில், நீராவி இன்ஜின் மூலம் மீட்டர் கேஜ் ரயில் இயக்கப்படுகிறது. 1908ம் ஆண்டு பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் இந்த ரயில் சேவை துவங்கப்பட்டது. இந்த ரயில் ஊட்டியின் மலை அழகு அனைத்தையும் சுற்றுலா பயணிகள் ரசிக்கும் வண்ணம் சுமார் 46 கி.மீ மேலும் வாசிக்க …..

சமூகம் தமிழ்நாடு பயணம்

சென்னை போக்குவரத்துக்கு காவல்துறையின் வினோத அறிவிப்பால் வெடிக்கும் சர்ச்சை

ஹெல்மெட் அணியாவிட்டால் பெட்ரோல் இல்லை என்ற பதாகையை வைக்க வேண்டும் என்று பெட்ரோல் பங்குகளுக்கு சென்னை போக்குவரத்து காவல்துறை உத்தரவு பிறப்பித்து உள்ளது. தமிழகத்தில் ஹெல்மெட் குறித்த பலவேறு விழிப்புணர்வுகளை அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் தொடர்ந்து ஹெல்மெட் இன்றி சாலைகளில் வலம் வருவோரின் எண்ணிக்கை குறையவே இல்லை. இந்நிலையில், ஹெல்மெட் மற்றும் கார் சீட் பெல்ட் அணியாவிட்டால் பெட்ரோல், டீசல் இல்லை என்ற வாசகம் அடங்கிய பதாகையை பெட்ரோல் பங்குகளில் காட்சிப்படுத்த வேண்டும் என்று மேலும் வாசிக்க …..

சமூகம் பயணம் ரயில்வே துறை

புறநகர் மின்சார ரயிலில் பயணம் செய்ய மேலும் சில தளர்வுகள்- தெற்கு ரயில்வே

அத்தியாவசிய பணியில் உள்ள தனியார் நிறுவன ஊழியர்கள், கல்வி நிலையங்களில் பணியாற்றுபவர்கள், ஊடக ஊழியர்களும் மின்சார ரயிலில் பயணம் செய்ய அனுமதி வழங்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது. சென்னையில், கடந்த மாதம் 5 ஆம் தேதி முதல் புறநகர் ரயில் சேவை இன்றியமையாச் சேவைப் பணியாளர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு மட்டுமே இயக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது, கொரோனா தொற்று நடவடிக்கையாக நிறுத்தப்பட்ட புறநகர் ரயில் சேவை கடந்த அக்டோபர் 5 ஆம் தேதி முதல் மேலும் வாசிக்க …..

தேசியம் பயணம் வேலைவாய்ப்புகள்

சம்பளம் கொடுக்காமல் ஒரே நாளில் 48 விமானிகள் நீக்கம்… மோடி அரசு அதிரடி

கொரோனா காரணமாக விமான போக்குவரத்து துறை பெரிதும் பாதிக்கப்பட்டதாகக் கூறி, ஏர் இந்தியா 48 விமானிகளை ஒரே நாளில் வேலையை விட்டு நீக்கியுள்ளது. உலகமே கொரோனா பிடியில் சிக்கித் தவிக்கும் நிலையில், சிறு, குறு தொழில்கள் முதல் பெரு நிறுவனங்கள் வரை அனைத்து தரப்பும் கடும் பாதிப்பை சந்தித்து வருகின்றன. இதில் குறிப்பாக விமான போக்குவரத்து துறையும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஏர் இந்தியா நிறுவனம் பெரிய அளவில் இழப்புகளைச் சந்தித்து வருவதால், சம்பளம் கொடுக்கும் நிலையில் நிறுவனம் மேலும் வாசிக்க …..

அமெரிக்கா உலகம் தொழில்நுட்பம் பயணம்

மோடி பறக்க ரூ.2000 கோடியில் அமெரிக்காவில் ரெடியான ஏர் இந்தியா ஒன் விமானம்

இந்தியா தனது புதிய விமானம் (ஏர் இந்தியா ஒன்) போயிங் 777-300ER விமானங்களை செப்டம்பர் 2020ல் பெறப்போகிறது. இது பிரதமர், ஜனாதிபதி மற்றும் இந்தியாவின் துணைத் தலைவர் உள்ளிட்ட விவிஐபிகள் பயன்பாட்டிற்கு உதவும். 200 மில்லியன் டாலருக்கும் மேல் கொள்முதல் செய்யப்படும் ஏர் இந்தியா ஒன் போயிங் 777-300ER புதிய விமானத்தில் மிகவும் மேம்பட்ட அதிநவீன தொழில்நுட்பங்கள், இராணுவ பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் மறுசீரமைக்கப்பட்ட கேபின் ஆகிய வசதிகளை கொண்டிருக்கும். இதில் பெரிய விமான அகச்சிவப்பு எதிர் மேலும் வாசிக்க …..

தமிழ்நாடு பயணம்

இ-பாஸ் வழங்க கெடுபிடி காட்டும் அரசு.. இவர்களுக்கு மட்டும் தாராளம்..

சமீப நாட்களாக சென்னையில் தினமும் 1000க்கும் அதிகமானோர் கொரோனா வைரஸ் காரணமாகப் பாதிக்கப்பட்டு, புதிய உச்சத்தை எட்டி வருகிறது. இந்த சூழலில் சென்னையைத் தமிழ்நாட்டிலிருந்து தனிமைப்படுத்த திட்டமிட்டு, அது தொடர்பான ஆலோசனைகளை மாநகராட்சி அதிகாரிகள், ஐஏஎஸ் அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். இது தொடர்பான ஆலோசனைகள் ஒருபுறம் நடந்து வரும் சூழலில் இப்போதைய நேரத்தில் அதிகளவில் போலீஸ், சுகாதாரத் துறை அதிகாரிகள், ஐஏஎஸ் அதிகாரிகள் வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவதால், மக்களைக் கட்டுப்படுத்துவதில் சில சிரமங்கள் உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. எனினும் மேலும் வாசிக்க …..