அரசியல் கட்சிகள் தேசியம் பாஜக

ஷாகீன்பாக்கில் துப்பாக்கிச்சூடு நடத்தியவர் பாஜகவில் இணைந்து சர்ச்சை

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக ஷாகீன்பாக்கில் நடந்த போராட்டத்தின்போது துப்பாக்கிச்சூடு நடத்திய கபில் குர்ஜாரை பாஜக தனது கட்சியில் இணைத்தது சர்ச்சையாகி உள்ளது. மத்திய பாஜக அரசு கடந்தாண்டு நிறைவேற்றிய குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு (சிஏஏ) எதிராக நாடு முழுவதும் கடும் போராட்டம் நடைபெற்றது. அதன் ஒருபகுதியாக டெல்லி ஷாகீன்பாக் பகுதியில் ஆயிரக்கணக்கான மக்கள் மூன்று மாதங்களுக்கு மேலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். அதேபோல் டெல்லியில் நடைபெற்ற ஜாமியா பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டம் மற்றும் புறநகர் மேலும் வாசிக்க …..

அரசியல் தேசியம் தொழில்நுட்பம் பாஜக

வலதுசாரி அமைப்புகளுக்கு ஆதரவாக ஃபேஸ்புக்- வால் ஸ்ட்ரீட் பகீர் குற்றச்சாட்டு

மத்திய பாஜக அரசின் ஆதரவு பெற்ற வலதுசாரி அமைப்புகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதை ஃபேஸ்புக் முற்றிலுமாகத் தவிர்த்துள்ளதாக வால் ஸ்ட்ரீட் ஜர்னல் மீண்டும் குற்றம் சாட்டியுள்ளது. இந்தியாவில் சிறுபான்மையினருக்கு எதிராக பஜ்ரங்தள் வன்முறைகளை தூண்டுகிறது என ஃபேஸ்புக்கின் உள் பாதுகாப்பு பிரிவினர் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர். ஆனால், பஜ்ரங்தள் தொடர்புடைய ஃபேஸ்புக் கணக்குகள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதற்கு பஜ்ரங்தள் மீதான ஃபேஸ்புக் நிறுவனத்தின் அச்சமே காரணம் என வால் ஸ்ட்ரீட் ஜர்னல் குற்றம்சாட்டியுள்ளது. மேலும் வாசிக்க …..

அரசியல் சட்டம் தேசியம் பாஜக

மேற்குவங்கத்தில் பாஜக தனது நாடகத்தை தொடங்கியுள்ளது- முதல்வர் மம்தா பானர்ஜி

மேற்குவங்கத்தில் பாஜக தனது நாடகத்தை அரங்கேற்றத் தொடங்கியுள்ளது, ஜே.பி.நட்டா பாதுகாப்பு வாகனத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது திட்டமிட்ட நாடகம் என முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார். மேற்கு வங்கத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தளுக்கான பிரச்சாரத்தை பாஜக இப்போதே துவங்கிவிட்டது. அங்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவைத் தொடர்ந்து தற்போது பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, பாஜக பொதுச்செயலாளர் விஜய் வர்க்கியா உள்ளிட்டோர் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். மேற்கு வங்க மாநிலம் டயமண்ட் ஹார்பர் மேலும் வாசிக்க …..

அரசியல் சட்டம் தேசியம் பாஜக

மேற்கு வங்க தலைமை செயலர், டிஜிபி நேரில் ஆஜராக மத்திய அரசு சம்மன்

பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவின் பாதுகாப்பு வாகனங்கள் தாக்கப்பட்ட சம்பவத்தையடுத்து, மேற்கு வங்கத் தலைமைச் செயலாளர், காவல் டிஜிபி ஆகியோர் வரும் 14 ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு மத்திய உள்துறை அமைச்சகம் சம்மன் அனுப்பியுள்ளது. மேற்கு வங்கத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக பாஜக தேசிய தலைவர்கள் தொடர்ந்து மேற்கு வங்க பயணம் மேற்கொண்டு வருகின்றனர். தற்போது மேற்கு வங்க மாநிலத்தில் பாஜக தேசிய செயலாளர் ஜேபி நட்டா, மேலும் வாசிக்க …..

அரசியல் இயற்கை கட்சிகள் தேசியம் பாஜக விவசாயம்

விவசாயிகள் கோரிக்கையை நிறைவேற்றாவிடில் ஆதரவு வாபஸ்; ஹரியானாவில் பாஜக ஆட்சிக்கு சிக்கல்

விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் ஹரியானாவில் பாஜக அரசுக்கு கொடுத்த ஆதரவை வாபஸ் பெறுவதாக ஜேஜேபி கட்சி திட்டவட்டமாக அறிவித்துள்ளது. ஹரியானாவில் தேசிய ஜனநாயக கூட்டணி (என்டிஏ) உறுப்பினராக உள்ளது ஜனநாயக் ஜனதா கட்சி (ஜேஜேபி). இதன் தலைவரான துஷ்யந்த் சவுதாலா அம்மாநிலத்தின் துணை முதல்வராக உள்ளார். விவசாயிகள் போராட்டத்தில் ஹரியானாவின் ஜாட் சமூகத்தினர் முக்கியப் பங்கு வகிக்கின்றனர். ஜேஜேபி, ஜாட் சமூகத்தினருக்கான கட்சி என்பதால், அவர்களது குறைந்தபட்ச நிர்ணய விலை (எம்எஸ்பி) மீதானக் கோரிக்கையில் ஆதரவளித்துள்ளது. இதுகுறித்து மேலும் வாசிக்க …..

அரசியல் கட்சிகள் சமூகம் தமிழ்நாடு பாஜக பெண்கள்

பாஜகவில் பாலியல் தொல்லை; பாஜக மகளிர் அணி செயலாளர் பகீர் புகார்

விழுப்புரத்தில் பாஜக மாவட்ட தலைவர் மீது பாலியல் புகார் அளித்த மகளிர் அணி செயலாளர் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிப்புரத்தை சேர்ந்த காயத்ரி பாஜக மாவட்ட மகளிரணி செயலாளராக உள்ளார். இவரை பாஜக மாவட்ட தலைவர் கலிவரதன் மகளிரணி பொதுச்செயலாளர் பதவி வாங்கி தருவதாக ஆசைகாட்டி பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், 5 லட்ச ரூபாய் பணம் வாங்கிக் கொண்டு, கொலை மிரட்டல் விடுப்பதாகவும் பாஜக மாநில தலைவர் எல்.முருகனிடம் புகார் அளித்துள்ளார். மேலும் வாசிக்க …..

அரசியல் தேசியம் பாஜக

டெல்லி விவசாயிகள் உடனான பேச்சுவார்த்தை தோல்வியால் பாஜக கலக்கம்

மத்திய அரசுடனான பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்ததை அடுத்து போராட்டம் தொடரும் என்று விவசாயிகள் அறிவித்து உள்ளனர். மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் மத்திய பாஜக அரசின் பல்வேறு இடர்பாடுகளையும் தாண்டி 6 வது நாளாக தொடர்ந்து கொண்டிருக்கிறது. கொரோனா அச்சுறுத்தலுக்கு இடையில் கடும் குளிரையும், பணியையும் பொருட்படுத்தாமல் லட்சக்கணக்கான விவசாயிகள் சாலைகளில் சமைத்து உண்டு, உறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இன்று (டிசம்பர் 01) மேலும் வாசிக்க …..

அரசியல் உலகம் தேசியம் பாஜக

டெல்லி விவசாயிகள் போராட்டம்; ஆதரவு கரம் கொடுக்கும் கனடா பிரதமர்

உரிமைகளுக்காக போராடும் இந்திய விவசாயிகளின் போராட்டத்திற்கு கனடா எப்போதும் ஆதரவளிக்கும் என்று அந்நாட்டு பிரதமர் ஜஸ்டீன் ட்ரூடோ தெரிவித்துள்ளார். மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் டெல்லியில் தொடர் போராட்டம் வருகின்றனர். போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவரும் முயற்சியாக விவசாய குழுக்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளது மத்திய அரசு. ஆனால், நிரந்தர உறுதியான தீர்வு கோரி, அமித்ஷா கூறிய பேச்சுவார்த்தை அழைப்பை விவசாய குழுக்கள் நிராகரித்துவிட்டன. இந்நிலையில் விவசாயிகளின் இந்த போராட்டம் சர்வதேச அளவில் பல மேலும் வாசிக்க …..

அரசியல் தமிழ்நாடு திமுக தேசியம் பாஜக

பொதிகை மூலம் சமஸ்கிருதம் திணிப்பு… வலுக்கும் எதிர்ப்புகள்

பொதிகை தொலைக்காட்சி உள்ளிட்ட அனைத்து தூர்தர்ஷன் சேனல்களிலும் சமஸ்கிருத செய்தி ஒளிபரப்பாக உள்ளதற்கு கடும் கண்டனங்கள் எழுந்து உள்ளன. அகில இந்திய அளவில் அனைத்து மாநில மொழிகளிலும் தூர்தர்ஷன் சேவை அளிக்கப்படுகிறது. மத்திய அரசின் தகவல் ஒளிபரப்புத் துறையின் கீழ் இயங்கும் பிரசார் பாரதி இந்த சேவைகளை நடத்தி வருகிறது. இந்நிலையில் மத்திய பிரசார் பாரதி புதிய உத்தரவு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “ஒவ்வொரு நாளும் காலை 7.15 மணி முதல் 7.30 மணி வரை டெல்லி மேலும் வாசிக்க …..

அரசியல் சமூகம் தேசியம் பாஜக வாழ்வியல்

மோடி வருகைக்காக வாரணாசி குடிசை வாசிகள் விரட்டி அடிப்பு

பிரதமர் மோடியின் வருகையையொட்டி மீண்டும் வாரணாசி குடிசை வாசிகள் விரட்டி அடிக்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பிரதமர் மோடி உத்தரப்பிரதேசத்தில் உள்ள தனது சொந்த தொகுதியான வாரணாசிக்கு நவம்பர் 30 ஆம் தேதி தேவ் தீபாவளி பண்டிகைக்காக 8 மாதங்களுக்கு பிறகு செல்கிறார். முன்னதாக பிரதமர் மோடியின் தொகுதியான வாரணாசியில் கடந்த பிப்ரவரி மாதம் தீனதயாள் உபத்யாய் சிலை திறப்பு நடந்த போது மோடி வாரணாசிக்கு சென்றிருந்தார். அப்போது வாரணாசியில் உள்ள குடிசைவாசிகள் அங்கிருந்து விரட்டி அடிக்கப்பட்டனர். அத்துடன் மேலும் வாசிக்க …..