அதிமுக அரசியல் தமிழ்நாடு

எஸ்.பி.வேலுமணி மீது ரூ.811 கோடி ஊழல்: 2வது நாளாக தொடரும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது ரூ.811 கோடி ஊழல் செய்துள்ளதாக வழக்குப்பதிவு செய்துள்ள லஞ்ச ஒழிப்புத்துறை, வேலுமணி மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களுக்கு சொந்தமான 52 இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர். அதிமுக ஆட்சியில் எஸ்.பி.வேலுமணி கடந்த 2013-16 ஆம் ஆண்டு வரை நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சட்டம், நீீதிமன்றங்கள் துறை அமைச்சராகவும், அதன் பின்னர் மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்தவுடன் 2016 முதல் 2021 வரை நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு மேலும் வாசிக்க …..

அதிமுக அரசியல் தமிழ்நாடு

முன்னாள் அதிமுக அமைச்சர் வீட்டிற்கு இலவசமாக 1.5 டன் ஸ்வீட்; ஆவின் ஊழல் மோசடி!

கடந்த அதிமுக ஆட்சியில் முன்னாள் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வீட்டிற்கு 1.5 டன் ஸ்வீட் ஆவினில் இருந்து இலவசமாக அனுப்பப்பட்டுள்ளதாக பால் வளத்துறை அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார். சேலம் ஆவின் பால் விற்பனை மையங்களில் பால் வளத்துறை அமைச்சர் நாசர் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அதிகாலை முதல் 10க்கும் மேற்பட்ட இடங்களில் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் நாசர், ஆவின் முகவர்கள் மற்றும் வாடிக்கையாளர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நாசர், மேலும் வாசிக்க …..

அதிமுக அரசியல் சமூகம் தமிழ்நாடு பெண்கள்

பாலியல் வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் கைது; ஜூலை 2 வரை நீதிமன்றக் காவல்

பாலியல் தொடர்பான வழக்கில் தலைமறைவான அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனை காவல்துறை கைது செய்த நிலையில், மணிகண்டனுக்கு ஜூலை 2 வரை நீதிமன்றக் காவல் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகை சாந்தினி அளித்த பாலியல் புகாரின் அடிப்படையில் அடையார் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மணிகண்டன் மீது 6 பிரிவின்கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தியநிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் மேலும் வாசிக்க …..

அதிமுக அரசியல் இலங்கை கருத்துக்கள் காங்கிரஸ் தமிழ்நாடு திமுக பாஜக

கொல்லம் வேலுப்பிள்ளை மகனின் ஆறாத ஆறு தவறுகள்

நேற்று அந்த நாம் தமிழர் கட்சியின் ஆதரவாளர் மிகவும் கொதி நிலையில் இருந்தார் காரணம் வேலுப்பிள்ளை பிரபாகரன் வேர் என்பது தமிழ்நாட்டில் அல்ல ஆனால் மலையாள மண்ணின் டிஎன்ஏ என அடியேன் சொன்னதால்.. கோபம் தலைக்கேறி மயிலாப்பூருக்கு வந்து பிரித்து விடுவேன் என்றார்..ஓகே பிரித்து கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டு ஸ்மைலி இமோஜி இட்டேன்.. அவர் தன் நிலை மறந்து ஒருமையில் மோசமாக போட்ட பின்னூட்டத்தை எல்லாம் நீக்கிவிட்டேன்.. காரணம் இதுவரை அவர் மிகவும் கண்ணியமாக பேசி வருபவர் மேலும் வாசிக்க …..

அதிமுக உயர் நீதிமன்றம் சட்டம் சமூகம் தமிழ்நாடு பெண்கள்

அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் முன்ஜாமின் மனு தள்ளுபடி- உயர்நீதிமன்றம்

நடிகை சாந்தினியை பாலியல் வன்கொடுமை செய்து ஏமாற்றியதாக பதிவான வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. அதிமுக ஆட்சியில் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக இருந்த மணிகண்டன், தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறியதால் கடந்த ஐந்து ஆண்டுகளாக ஒரே வீட்டில் கணவன், மனைவியாக வாழ்ந்ததாகவும், அந்த காலகட்டத்தில் 3 முறை கருவுற்ற போது, தன்னை கட்டாயப்படுத்தி கருவைக் கலைக்கச் செய்ததுடன், தற்போது திருமணம் செய்ய மறுப்பதுடன், மேலும் வாசிக்க …..

அதிமுக அரசியல் தமிழ்நாடு பாமக

எடப்பாடி பழனிசாமி சிறைக்குச் செல்லும் நாள் வெகுதொலைவில் இல்லை- புகழேந்தி ஆவேசம்

எடப்பாடி பழனிசாமி சிறைக்குச் செல்லும் நாள் வெகுதொலைவில் இல்லை, அதிமுகவின் அழிவு பழனிசாமியால் தொடங்கிவிட்டது என அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட புகழேந்தி விமர்சித்துள்ளார். பாட்டாளி மக்கள் கட்சியை விமர்சித்த அதிமுகவின் செய்தித் தொடர்பாளர் புகழேந்தி அக்கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக ஓ.பன்னீர்ச்செல்வம்- எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அதிரடியாக அறிவித்துள்ளனர். சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்று போட்டியிட்ட 23 இடங்களில் 5 இடங்களில் வென்றது பாமக. இந்நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தை நாங்கள் ஒரு பொருட்டாக மதிப்பது இல்லை. மேலும் வாசிக்க …..

அதிமுக அரசியல் தமிழ்நாடு பாமக

சிறிய கட்சி பாமக.. அதிமுக அதிரடி தாக்குதல்

ஒவ்வொரு முறையும் கூட்டணி சேர்வதும் தேர்தல் தோல்விக்கு பின்னர் கூட்டணி கட்சியினரை விமர்சனம் செய்வதும் பாமகவின் வாடிக்கையாக உள்ளது என அதிமுகவின் செய்தி தொடர்பாளர் புகழேந்தி விமர்சித்துள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமக 23 தொகுதிகளில் போட்டியிட்டு 5 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இந்நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம் குறித்து அன்புமணி ராமதாஸ் விமர்சனம் செய்ததற்கு அதிமுக செய்தித் தொடர்பாளர் புகழேந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது மேலும் வாசிக்க …..

அதிமுக அரசியல் உணவு தமிழ்நாடு திமுக

கிறிஸ்டி நிறுவனம் முறைகேடு; 20,000 டன் துவரம் பருப்பு டெண்டரை ரத்து செய்து தமிழக அரசு அதிரடி

நாமக்கல் கிறிஸ்டி நிறுவனம் மீதான முறைகேடு புகார் உறுதியானதால், 20,000 டன் துவரம் பருப்பு கொள்முதல் டெண்டரை ரத்து செய்து, புதிய டெண்டர் கோரி அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது தமிழக அரசு. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் 20,000 டன் துவரம் பருப்பு கொள்முதல் செய்ய முந்தைய அதிமுக ஆட்சியில் டெண்டர் கோரப்பட்டது. இதனையடுத்து நாமக்கல்லைச் சேர்ந்த கிறிஸ்டி நிறுவனத்திற்கு டெண்டர் ஒதுக்கப்பட்டது. இந்த டெண்டரில் வெளிச்சந்தையில் ஒரு கிலோ துவரம் பருப்பு ரூ.100க்கும் குறைவாக விற்கப்படும் மேலும் வாசிக்க …..

அதிமுக அரசியல் கட்சிகள் தமிழ்நாடு திமுக வாக்கு & தேர்தல்

அதிமுகவின் தவறால் ராஜ்யசபாவில் மெஜராட்டி பலம் பெறும் திமுக

தமிழக சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றதால், ராஜ்யசபா எம்பி பதவியை கேபி முனுசாமி மற்றும் வைத்திலிங்கம் இருவரும் ராஜினாமா செய்துள்ளது, மாநிலங்களவையில் அதிமுக தனது பலத்தை இழக்கும் என்று கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2020ஆம் ஆண்டு தமிழகத்தில் 6 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகள் காலியாகின. இதில் திமுக மற்றும் அதிமுக தலா 3 இடங்களுக்கு உறுப்பினர்களை தேர்வு செய்யலாம். அந்த வகையில் அதிமுக சார்பில் கேபி முனுசாமி, வைத்திலிங்கம், கூட்டணி கட்சியான தமாகாவின் ஜிகே மேலும் வாசிக்க …..

அதிமுக அரசியல் கட்சிகள் தமிழ்நாடு திமுக

பழனிசாமியும், பன்னீரும் காரசார நேரடி மோதலால் அதிமுகவில் சலசலப்பு

தமிழக சட்டசபையின் எதிர்கட்சித் தலைவர் யார் என்பதை தேர்வு செய்ய அதிமுக அலுவலகத்தில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமியும், பன்னீர் செல்வமும் காரசார நேரடி மோதலில் ஈடுபட்டதால், எதிர்கட்சித் தலைவரை தேர்வு செய்யாமல் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் திமுக பெரும்பான்மை இடங்களைப் பெற்று ஆட்சி அமைத்துள்ளது. 133 எம்எல்ஏக்கள் ஆதரவுடன் தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் இன்று (மே 07) பொறுப்பேற்றுக் கொண்டார். சட்டசபைத் தேர்தலில் அதிமுக 66 இடங்களில் வெற்றி மேலும் வாசிக்க …..