அதிமுக சமூகம் தமிழ்நாடு

CMDA பணி நியமன முறைகேடு- வெளிவரும் கடந்த அதிமுக ஆட்சியின் அவலம்

அதிமுக ஆட்சியின் போது சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தில் (CMDA) தகுதியில்லாத 18 பேரை பணியமர்த்தியது தொடர்பாக 2 அதிகாரிகளுக்கு நோட்டிஸ் விடுத்து 15 நாட்களுக்குள் விளக்கமளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு சட்டப்பேரவைக்கான தேர்தல் தேதி கடந்த பிப்ரவரி 25 ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. அதற்கு முந்தைய நாள் தான் எடப்பாடி பழனிசாமி அரசால் சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத்திற்கான பணிநியமனம் செய்யப்பட்டுள்ளது. சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத்தில் ஜூனியர் அசிஸ்டன்ட், ஸ்டெனோ டைப்பிஸ்ட், ஃபீல்ட் மேலும் வாசிக்க …..

அதிமுக அரசியல் சட்டம் தமிழ்நாடு

1991- 1996 அதிமுக ஆட்சி காலத்தில் ஊழல் முறைகேடு; முன்னாள் அமைச்சர் கைது

ஊழல் வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி, அவரது கணவர் பாபு, ஐ.ஏ.எஸ் அதிகாரி சண்முகம் ஆகியோரை குற்றவாளி எனக் கூறி, தலா 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஜெயலலிதா முதல் முறையாக ஆட்சி அமைத்த போது 1991 முதல் 1996 வரை அதிமுக அமைச்சரவையில் சமூக நலத்துறை அமைச்சராக இருந்தவர் இந்திரகுமாரி. அந்த ஆட்சிக் காலம் முடிந்த பிறகு, அதில் அமைச்சர்களாக இருந்த பலர் மீது வழக்குகள் தொடரப்பட்டன. மேலும் வாசிக்க …..

அதிமுக அரசியல் தமிழ்நாடு

வருமானத்திற்கு அதிகமாக 654% சொத்து சேர்ப்பு; ரெய்டில் சிக்கிய முன்னாள் அதிமுக அமைச்சர்

வருமானத்திற்கு அதிகமாக 654% சொத்துக்களை சேர்த்துள்ளதாக அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை நடத்தி உள்ளது. அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் மீது எழுந்துள்ள ஊழல் புகாரின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறது. முன்னாள் அமைச்சர்கள் எம்ஆர் விஜயபாஸ்கர், எஸ்.பி.வேலுமணி ஆகியோரின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தப்பட்டு வழக்கு பதியப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது அதிமுக முன்னாள் வணிகவரி மேலும் வாசிக்க …..

அதிமுக அரசியல் தமிழ்நாடு திமுக

கல்வெட்டுக்களின் வரலாறு!

ஊழல் காரணமாக தண்டிக்கப்பட்டு முதல்வர் பதவியை 2001 ஆண்டில் இழந்த ஜெயலலிதா அப்போது சோழிகளை உருட்டிய நம்பூதிரிகள் பேச்சை கேட்டு மெரினாவில் இருந்த கண்ணகி சிலையை இரவோடு இரவாக தூக்கி தூர எரிந்தார். 2011 ஆம் ஆண்டில் சவால் விட்டு மீண்டும் அதே இடத்தில் 2006 ஆம் ஆண்டில் நிறுவியதும் திமுக தான்.. கலைஞர் கட்டிய வள்ளுவர் கோட்டத்தை கலைஞரின் பெயரை தூக்கி எறிந்துவிட்டு எம்ஜிஆர் நடத்திய ஆட்சியில்.. மீண்டும் முதல்வரானால் வள்ளுவர் கோட்டத்தில் தான் பதவி மேலும் வாசிக்க …..

அதிமுக அரசியல் தமிழ்நாடு திமுக

மாநிலங்களவைக்கு போட்டியின்றி தேர்வானார் திமுக வேட்பாளர் மு.மு.அப்துல்லா

திமுகவின் மு.மு.அப்துல்லா, மாநிலங்களவை உறுப்பினராக போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதனால் மாநிலங்களவையில் திமுகவின் பலம் 8 ஆக உயர்ந்துள்ளது. மாநிலங்களவை உறுப்பினராக இருந்த அதிமுகவை சேர்ந்த ராணிப்பேட்டை முகமது ஜான் கடந்த மார்ச் மாதம் 23 ஆம் தேதி மரணம் அடைந்தார். அவரது பதவிக்காலம் 2025 ஜூலை 24 வரை இருந்ததால் அந்த இடத்துக்கு தமிழகத்தில் இருந்து வேறு ஒருவரை தேர்ந்தெடுக்க இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது. அதன்படி செப்டம்பர் 13 ஆம் தேதி தேர்தல் நடத்தப்படும் மேலும் வாசிக்க …..

அதிமுக அரசியல் தமிழ்நாடு திமுக

லெட்டர்பேட் ஜெ.பல்கலைக்கழகம் அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைப்பு!

பழைய தாலுக்கா அலுவலம் புனரமைக்கப்பட்டு, ‘டாக்டர். ஜெ.ஜெயலலிதா பல்கலைக்கழகம்’ எனப் பெயர் சூட்டப்பட்ட பல்கலைக்கழகத்தை அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைக்கும் சட்ட மசோதாவிற்கு ஓபிஎஸ் உள்ளிட்ட அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். வேலூரைத் தலைமையகமாகக் கொண்டு செயல்படும் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தை இரண்டாகப் பிரித்து, விழுப்புரம் மாவட்டத்தை தலைமையகமாகக் கொண்டு டாக்டர் ஜெ. ஜெயலலிதா பல்கலைக்கழகம் உருவாக்கப்படுவதற்கான சட்டம் கடந்த பிப்ரவரி 5 ஆம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. இதற்குப் பிறகு வெளியிடப்பட்ட அரசாணையின்படி 2021-22 மேலும் வாசிக்க …..

அதிமுக அரசியல் உயர் நீதிமன்றம் சட்டம் தமிழ்நாடு

கொடநாடு வழக்கு: மேல் விசாரணைக்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு

கொடநாடு வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தாலும் உண்மையான குற்றவாளியை கண்டுபிடிக்க மேல் விசாரணைக்கு தடை இல்லை என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மறைந்த ஜெயலலிதாவிற்கு சொந்தமாக நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே 904 ஏக்கரில் கொடநாடு பங்களா மற்றும் எஸ்டேட் உள்ளது. கடந்த எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சியில் 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23 ஆம் தேதி சிலர், இந்த கொடநாடு எஸ்டேட்டில் இருந்த காவலாளியை கொலை செய்துவிட்டு அங்கிருந்து பல பொருட்களை கொள்ளையடித்துச் மேலும் வாசிக்க …..

அதிமுக அரசியல் சட்டம் தமிழ்நாடு

கொடநாடு வழக்கில் தொடரும் மர்மம்: சசிகலா, எடப்பாடி பழனிசாமியை விசாரிக்க மனு தாக்கல்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சசிகலா உள்ளிட்டோரை விசாரிக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டிருப்பது அதிமுகவினரிடையே கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த கொடநாடு பங்களாவில் கடந்த 2017 ஆம் ஆண்டு, ஏப்ரல் 23 ஆம் தேதி நள்ளிரவில், ஓம் பஹதூர் என்ற பாதுகாவலரைக் கொலை செய்து, ஆவணங்கள் கொள்ளையடிக்கப்பட்டதாக, ஷோலூர் மட்டம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு மேலும் வாசிக்க …..

அதிமுக உச்ச நீதிமன்றம் உயர் நீதிமன்றம் சட்டம் தமிழ்நாடு

சொத்துக் குவிப்பு வழக்கு: முன்னாள் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு நீதிமன்றம் கடும் கண்டனம்

சொத்துக் குவிப்பு வழக்கில் தொடர்ந்து வாய்தா கேட்ட முன்னாள் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு சென்னை உயர் நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கடந்த 2011 முதல் 2013 வரை வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தது தொடர்பாக நடவடிக்கை எடுக்கக் கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தல்லாகுளத்தைச் சேர்ந்த மகேந்திரன் என்பவர் 2013ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவில், ராஜபாளையம் அருகே தேவதானத்தில் 74 லட்சம் ரூபாய் மேலும் வாசிக்க …..

அதிமுக தமிழ்நாடு

ஊழல் வழக்கு: எஸ்.பி.வேலுமணியின் வங்கி கணக்கு, பாஸ்போர்ட் முடக்கம்

லஞ்ச ஒழிப்புத் துறையின் சோதனையை தொடர்ந்து அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் வங்கிக் கணக்கு, லாக்கர்கள் மற்றும் பாஸ்போர்ட்டையும் அதிகாரிகள் முடக்கியுள்ளனர். சென்னை மற்றும் கோவை மாநகராட்சிகளில் ரூ.811 கோடிக்கு டெண்டர் ஒதுக்கீட்டில் முறைகேடு நடைபெற்றதாக அளித்த புகாரின் பேரில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி உள்பட 7 பேர் மீதும், 10 நிறுவனங்கள் மீதும் ஊழல், மோசடி உள்ளிட்ட 7 பிரிவுகளில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இதனையடுத்து, கடந்த 10 ஆம் தேதி மேலும் வாசிக்க …..