அதிமுக அரசியல் கட்சிகள் கல்வி சமூகம் தமிழ்நாடு திமுக

தனியார் மருத்துவக் கல்லூரியில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு அதிரடி அறிவிப்பு வெளியிட்ட மு.க.ஸ்டாலின்

இட ஒதுக்கீட்டில் தனியார் மருத்துவக் கல்லூரியில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை திமுக ஏற்கும் என மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேரும் மாணவர்களுக்கு கல்விக் கட்டணம் மிகக் குறைவு. ஆனால் தனியார் மருத்துவக் கல்லூரியில் லட்சக்கணக்கான ரூபாய் கல்விக் கட்டணம் என்ற நிலையில், அரசு பள்ளிகளில் படித்து, இட ஒதுக்கீட்டில் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைத்துள்ள பெரும்பாலான மாணவர்கள் ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்தவர்களாக இருப்பதால் அவ்வளவுத் தொகையைக் கட்ட முடியாத மேலும் வாசிக்க …..

அதிமுக அரசியல் கட்சிகள் தமிழ்நாடு தேசியம் பாஜக வாக்கு & தேர்தல்

அமித்ஷாவின் தமிழகம் வருகைக்கு எதிராக டாப் டிரெண்டிங்கில் #GoBackAmitShah

அமித்ஷா தமிழகம் வருவதற்கு எதிராக ட்விட்டரில் #GoBackAmitShah ஹாஷ்டேக் டாப் டிரெண்டிங் ஆனது. மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக முன்னாள் தேசியத் தலைவருமான அமித்ஷா நவம்பர் 21 சென்னை வருகிறார். தமிழகத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள நிலையில் தமிழகத்திற்கு அமித்ஷா வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அமித்ஷா நவம்பர் 21 திருவள்ளூர் மாவட்டம், தேர்வாய்கண்டிகையில் ரூ.380 கோடி மதிப்பீட்டில் புதிய நீர்த்தேக்கத் திட்டத்தை தொடக்கி வைக்கிறார். மேலும் ரூ.61,843 கோடி மதிப்பீட்டில் சென்னை மெட்ரோ ரயில் மேலும் வாசிக்க …..

அதிமுக அரசியல் கட்சிகள் தமிழ்நாடு

அமைச்சர் துரைக்கண்ணு கொரோனாவால் பலி; அதிமுகவுக்குள் தொடங்கிய சர்ச்சை

தமிழக வேளாண்மைத்துறை அமைச்சர் துரைக்கண்ணு (வயது 72) கொரோனாவால் சென்னையில் காலமானார். அவரது மறைவிற்கு அரசியில் கட்சித் தலைவர்கள் பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். கடந்த 13-ம் தேதியன்று சென்னையில் இருந்து சேலத்திற்கு காரில் சென்று கொண்டிருந்த அமைச்சர் துரைக்கண்ணுவுக்கு விழுப்புரம் அருகே சென்றுகொண்டிருந்த போது நெஞ்சு வலி ஏற்பட்டது. இதையடுத்து முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். பின்னர் உயர் சிகிச்சைக்காக அக்டோபர் 14-ம் தேதியன்று சென்னை அழைத்துவரப்பட்டு ஆழ்வார்பேட்டையில் உள்ள மேலும் வாசிக்க …..