ஐரோப்பா கல்வி சமூகம்

சூரியசக்தியால் இயங்கும் இஸ்திரி பெட்டி; ஸ்வீடன் நாட்டின் விருது பெற்ற தமிழக மாணவி

தமிழகத்தை சேர்ந்த 9ம் வகுப்பு மாணவிக்கு ஸ்வீடன் நாட்டின் குழந்தைகளுக்கான சூழலியல் அறக்கட்டளை சாா்பில் இளம் வயது கண்டுபிடிப்பாளா்களுக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலையைச் சோ்ந்த 9-ஆம் வகுப்பு மாணவி வினிஷா உமாசங்கா், சூரியசக்தி மூலம் இயங்கும் இஸ்திரி பெட்டியைக் கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளாா். இதுகுறித்து மாணவி வினிஷா பேசுகையில், எனக்கு 5 வயது இருக்கும் போது எனது தந்தை அறிவியல் களஞ்சிய புத்தகத்தை பரிசளித்தாா். அந்தப் புத்தக வாசிப்பின் மூலம் அறிவியல் மீதான ஆா்வம் எனக்கு நாள்தோறும் மேலும் வாசிக்க …..

அமெரிக்கா ஐரோப்பா மருத்துவம் வாழ்வியல்

ஹெபடைடிஸ் சி வைரசை கண்டுபிடித்த 3 விஞ்ஞானிகளுக்கு 2020 ஆண்டின் நோபல் பரிசு

ஒவ்வொரு ஆண்டும் மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் உள்ளிட்ட 6 துறைகளில் பயன் விளைவிக்கும் தொழில்நுட்பங்கள் அல்லது கருவிகளை கண்டுபிடித்து, மகத்தான சாதனை படைத்தவர்களுக்கு உலகின் மிக உயரிய விருதான நோபல் பரிசு வழங்கி கவுரவிக்கப்படுகிறது.  பரிசு பெறும் ஒவ்வொருவருக்கும், தங்கப்பதக்கம், பட்டயம் மற்றும் பரிசுப் பணம் வழங்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுகளை ஸ்வீடன் தலைநகர் ஸ்டோக்ஹோமில் கமிட்டியின் தலைவர் தாமஸ் பெர்ல்மன் நேற்று முதல் அறிவித்து வருகிறார்.  இதில் மருத்துவத் துறைக்கான மேலும் வாசிக்க …..

ஐரோப்பா தேசியம் தொழில்கள் வடமாநிலம் வணிகம்

இந்தியாவில் இனி சந்தையில் துப்பாக்கிகளா – மாஸ் தயாரிப்பில் ‘வெப்லி அண்ட் ஸ்காட்’

இதுவரை இந்தியாவில் பொதுத்துறை நிறுவனமான ஆயுத உற்பத்தி தொழிற்சாலை மட்டுமே கைத்துப்பாக்கிகளை தயாரித்து வந்தது.   1790ம் ஆண்டு தொடங்கப்பட்ட ‘வெப்லி அண்ட் ஸ்காட்’ இங்கிலாந்தின் பழம்பெரும் ஆயுத தயாரிப்பு நிறுவனமான, இதன் தயாரிப்பு ஆயுதங்கள் இரண்டு உலகப் போர்களிலும் பயன்படுத்தப்பட்டுள்ளன.   தற்போது இந்த வெப்லி அண்ட் ஸ்காட் இந்தியாவின் வருகை காரணமாக கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.   இந்திய மக்களுக்கு உலகத்தரம் வாய்ந்த தயாரிப்பை தாங்கள் வழங்கப் போவதாகவும் வெப்லி அண்ட் மேலும் வாசிக்க …..

அமெரிக்கா அரசியல் உலகம் ஐரோப்பா சீனா

சர்வதேச விசாரணை அதிகாரிகளை எங்கள் நாட்டிற்குள் அனுமதிக்க மாட்டோம்- சீனா பிடிவாதம்

கொரோனா குறித்த விசாரிக்க சர்வதேச விசாரணை அதிகாரிகளை நாங்கள் எங்கள் நாட்டிற்குள் அனுமதிக்க மாட்டோம் என்று சீனா மிகவும் கண்டிப்புடன் கூறியுள்ளது ஐரோப்பிய நாடுகளுக்கிடையில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் எப்படி, எங்கே முதலில் தோன்றியது என்பது குறித்த சந்தேகங்கள் இன்று வரை நிலவி வருகிறது. இந்த வைரஸ் சீனாவில் இருக்கும் வுஹன் வைராலஜி சோதனை மையத்தில் இருந்து வைரஸ் கசிந்து இருக்கலாம் என்று அமெரிக்கா உறுதியாக நம்புகிறது. அதாவது வைரலாஜி சோதனை மையத்தில் உள்ள பி4 மேலும் வாசிக்க …..

ஐரோப்பா கிரிக்கெட் விளையாட்டு

ஒவர் த்ரோ தவறான முடிவால் ஒரு ரன்னில் உலக கோப்பையை இழந்த நியுஸிலாந்து அணி

புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்ற போது அது தனது நீண்ட கால கனவை நனவாக்கி கொண்டது.   மோர்கன் இங்கிலாந்து அணிக்கு உலகக்கோப்பை பெற்றுத்தந்துவிட்டார். டாஸ் வென்றது முதல் தனது திட்டத்தைச் சரியாக செயல்படுத்தி வந்தது வில்லியம்சன்தான்.   தனது பேட்டிங் யூனிட்டை நன்கு அறிந்த நியுசி அணி தலைவர் வில்லியம்ஸன் ஃபைனலில் சேஸிங் செய்வது ரிஸ்க் என்பதை உணர்ந்திருந்தார்.   அதனால் டாஸ் வென்றதும் பேட்டிங்கை தேர்வு செய்தார். 50 ஓவர்களில் மேலும் வாசிக்க …..

ஆன்மிகம் ஐரோப்பா

பயங்கர தீயால் 850 ஆண்டுகள் பழமையான பிரான்ஸ் தேவாலயம் கருகி நாசம்

பிரான்ஸ் தலைநகர் பாரீசின் மையப்பகுதியில் அமைந்துள்ளது நோட்ரே டேம் கதீட்ரல் தேவாலயம். சுமார் 200 ஆண்டுகளாக கட்டுமானப் பணி நடந்த இந்த தேவாலயம் 12ம் நூற்றாண்டில் கட்டி முடிக்கப்பட்டது.   உலக அதிசயங்களில் ஒன்றான ஈபிள் டவர் பாரீசில் அமைந்திருந்தாலும், நோட்ரே டேம் தேவாலயமே நினைவுச் சின்னமாக போற்றப்பட்டது. பிரான்ஸ் செல்லும் சுற்றுலா பயணிகள் தவறாமல் செல்லும் இடமாகவும் இந்த தேவாலயம் அமைந்துள்ளது.   18ம் நூற்றாண்டில் பிரெஞ்ச் புரட்சி, 1944ல் இரண்டாம் உலகப் போர் என மேலும் வாசிக்க …..

அரசியல் ஆசியா ஐரோப்பா தொழில்கள்

அனில் அம்பானிக்கு மோடியால் 1123 கோடி வரி தள்ளுபடியா

ரபேல் ஒப்பந்தத்துக்குப் பின், பிரான்சில் செயல்படும் அனில் அம்பானியின் ‘ரிலையன்ஸ் பிளாக் அட்லாண்டிக் பிரான்ஸ்’ நிறுவனத்துக்கு பிரான்ஸ் அரசு ரூ.1123 கோடி வரி தள்ளுபடி அளித்ததாக பிரான்ஸ் பத்திரிக்கை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.  தொழிலதிபர் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனம், பிரான்ஸ் நாட்டில் ‘ரிலையன்ஸ் பிளாக் அட்லாண்டிக் பிரான்ஸ்’ என்ற பெயரில் செயல்படுகிறது.  இந்நிறுவனத்துக்கு சொந்தமான கேபிள் நெட்வொர்க் மற்றும் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் பிரான்சில் உள்ளன. இந்நிறுவனம் கடந்த 2007 முதல் 2010ம் மேலும் வாசிக்க …..

ஐரோப்பா பயணம் பெண்கள்

லண்டனில் பேருந்தில் சென்ற பெண் எம்.பி-யிடம் சில்மிஷம்

லண்டனில் பேருந்தில் சென்ற நாடாளுமன்ற பெண் உறுப்பினரை பார்த்து ரசித்தபடி ஆபாச செயல் செய்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.  பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த பிரிட்டன் எம்பியும், தொழிலாளர் கட்சித் தலைவருமான நாஸ் ஷா ஏப்ரல் 1-ம் தேதி பேருந்தில் சென்றுள்ளார்.  அப்போது அவரைப் பார்த்து ரசித்தபடி மர்மநபர் ஒருவன் தனது ஆண்குறியை எடுத்து வெளியே காட்டி ஆபாச செயல் செய்துள்ளான்  இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த நாஸ் ஷா எம்.பி. உடனடியாக ஓட்டுநரிடம் கூறியுள்ளார். ஆனால் மேலும் வாசிக்க …..

அமெரிக்கா உலகம் ஐரோப்பா

ஈக்வடார் அரசு கைவிப்பு .. ஊடகவியலாளர் ஜூலியன் அசாஞ்சே கைது

உலகப்புகழ் பெற்ற ‘விக்கி லீக்ஸ்’ இணையதள நிறுவனர் ஜூலியன்  அசாஞ்சேவை லண்டனில் போலீசார் கைது செய்துள்ளனர்.   ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாகாணத்தில் பிறந்த ஊடகவியலாளர் ஜூலியன் அசாஞ்சே. 2006 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட விக்கிலீக்ஸ் இணையத்தளத்தின் நிறுவனர்களில் ஒருவராவார்.    அமெரிக்கா நிகழ்த்திய ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக் போர்கள் குறித்த ஏராளமான ரகசிய ஆவணங்களைத் தனது இணையத்தளத்தில் அவர் வெளியிட்டார்.   இதன்காரணமாக உலகம் முழுவதும் பலத்த அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தினார். இதன் காரணமாக அமெரிக்க உட்பட்ட மேலும் வாசிக்க …..

ஆசியா ஐரோப்பா சட்டம் தொழில்கள்

வைர ஊழல் மோசடி பேர்வழி மோடியை சிறையில் அடைத்தது லண்டன் நீதிமன்றம்

வங்கிக் கடன் மோசடியில் கைது செய்யப்பட்ட நீரவ் மோடிக்கு ஜாமீன் வழங்க லண்டன் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.   வங்கிக் கடன் மோசடி வழக்கில் தேடப்பட்டு வரும் வைர வியாபாரி நீரவ் மோடி லண்டனில் கைது செய்யப்பட்டுள்ளார். மும்பை வைர வியாபாரி நீரவ் மோடி, அவரது உறவினர் மெகுல் சோக்‌ஷி ஆகியோர் பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.14 ஆயிரம் கோடி கடன் பெற்று திருப்பி செலுத்தாமல் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் லண்டனுக்கு தப்பிச் சென்றார்.   மேலும் வாசிக்க …..