உலகப்புகழ் பெற்ற ‘விக்கி லீக்ஸ்’ இணையதள நிறுவனர் ஜூலியன்  அசாஞ்சேவை லண்டனில் போலீசார் கைது செய்துள்ளனர்.
 
ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாகாணத்தில் பிறந்த ஊடகவியலாளர் ஜூலியன் அசாஞ்சே. 2006 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட விக்கிலீக்ஸ் இணையத்தளத்தின் நிறுவனர்களில் ஒருவராவார். 
 
அமெரிக்கா நிகழ்த்திய ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக் போர்கள் குறித்த ஏராளமான ரகசிய ஆவணங்களைத் தனது இணையத்தளத்தில் அவர் வெளியிட்டார்.
 
இதன்காரணமாக உலகம் முழுவதும் பலத்த அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தினார். இதன் காரணமாக அமெரிக்க உட்பட்ட பல்வேறு நாட்டு அரசுகளின் கண்டனங்களைச் சம்பாதித்தார். அவர் மீது பல்வேறு வழக்குகள்  தொடரப்பட்டன.
 
அதேசமயம் மனித உரிமை ஆர்வலர்கள் பலரும் அசாஞ்சேவிற்கு ஆதரவு தெரிவித்தனர்.  நவம்பர் 2010 ஆம் ஆண்டு ஸ்வீடன் நீதிமன்றம், இவரை பாலியல் வழக்கொன்றில்  குற்றவாளியாக அறிவித்தது. ஆனால் தான் வெளியிட்ட ஆவணங்களால் பாதிக்கப்பட்டவர்கள் சதி செய்து தன மீது பொய் குற்றம் சுமத்துவதாக, அசாஞ்சே அதனை மறுத்தார்.
கடந்த ஏழு ஆண்டுகளாக அவர் லண்டனில் உள்ள ஈக்வடார் நாட்டு தூதரகத்தில் அரசியல் அடைக்கலம் கோரி தங்கி இருந்து வந்தார்.அந்த சூழ்நிலையில் அவரைக் கைது செய்ய  முடியாதவாறு தூதராகப் பாதுகாப்பு கிடைத்து வந்தது.
 
இந்நிலையில் ஜூலியன்  அசாஞ்சேவை லண்டனில் போலீசார் கைது செய்துள்ளனர். ஏ.எப்.பி. செய்தி நிறுவனம் இந்த தகவலை தெரிவித்துள்ளது.
 
அசாஞ்சேவிற்கு வழங்கி வந்த அடைகலத்தை ஈக்வடார் நாட்டு தூதரகம் திடீரென விலக்கிக்  கொண்டது.  இதற்க்கான காரணம் தெரிவிக்க படவில்லை
 
எனவே அவருக்கான பாதுகாப்பும் உடனடியாக ரத்து செய்யப்பட்டது. அத்துடன் தூதரக தரப்பிலிருந்து போலீசுக்கு தகவல் வழங்கப்பட்டு அவர்கள் வந்து சேர்ந்தனர். 
 
பின்னர் அவரை பிரிட்டன் போலீசார் கைது செய்துள்ளனர். முன்னதாக ஆனால் கடந்த 2018 ஜூலையிலும் அவர் கைது செய்யப்பட்டு மீண்டும் விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.