அரசியல் உலகம் தேசியம்

ஸ்பைவேர் மூலம் செல்போன்களை ஒட்டு கேட்ட ஒன்றிய பாஜக அரசு; ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

பெகாஸஸ் ஸ்பைவேர் மூலம் இந்தியாவைச் சேர்ந்த அரசியல் கட்சித் தலைவர்கள், முன்னணி ஊடகவியாளர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்டோரின் செல்போன் உரையாடல்கள் கண்காணிக்கப்பட்டதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. இஸ்ரேலின் என்.எஸ்.ஓ நிறுவன பெகாஸஸ் சாப்ட்வேர் மூலம் செல்போன் உரையாடல்கள் கண்காணிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக பார்பிட்டன் என்ற ஊடக நிறுவனத்துடன் இணைந்து தி வயர், வாஷிங்டன் போஸ், கார்டியன் உள்ளிட்ட 17 ஊடக நிறுவனங்கள் இணைந்து ஆய்வு மேற்கொண்டன. பிரபல ஊடக நிறுவனங்கள் மேற்கொண்ட மேலும் வாசிக்க …..

உலகம் தேசியம்

ஸ்டேன் சுவாமி மரணம் இந்திய மனித உரிமைகள் வரலாற்றில் பெரும் கறை: ஐநா சபை

மனித உரிமைகளுக்காகவும் சமூக நீதிக்காகவும் 40 ஆண்டுகளுக்கும் மேலாக போராடிய ஸ்டேன் சுவாமியின் இறப்பு இந்திய மனித உரிமைகள் வரலாற்றில் ஏற்பட்ட கறை என்று ஐநா சபை கண்டனம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 84 வயதான சமூக செயற்பாட்டாளர் ஸ்டேன் சுவாமியை என்ஐஏ அதிகாரிகள் எல்கர் பரிஷத் வழக்கில் உபா சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைத்தனர். 9 மாதங்களாக சிறையில் இருந்த மனித உரிமைகள் ஆர்வலரான ஸ்டேன் சுவாமி ஜூலை 5 ஆம் மேலும் வாசிக்க …..

உலகம்

பிலிப்பைன்ஸ் ராணுவ விமான விபத்து; பலி எண்ணிக்கை 52 ஆக உயர்வு

பிலிப்பைன்ஸ் ராணுவ விமான விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 52 ஆக உயர்ந்துள்ள நிலையில், விபத்துக்கு பயங்கரவாத தாக்குதல் காரணம் இல்லை என அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள சுலு மாகாணத்தின் ஜோலோ தீவுப்பகுதியில் கடந்த 4-7-2021 அன்று 92 பேருடன் சென்ற சி-130 ரக ராணுவ விமானம் தரையிறங்க முயற்சிக்கும் போது விபத்துக்குள்ளானது. விமானத்தில் பயணித்தவர்கள் பிலிப்பைன்ஸ் இராணுவத்தின் 11வது காலாட்படை பட்டாலியனின் கூட்டு பணிக்குழுவினர் ஆவர். பணிகளுக்காக சுலுவுக்கு ராணுவ விமானத்தில் சென்றிருக்கிறார்கள் மேலும் வாசிக்க …..

அரசியல் உலகம் தேசியம் பாஜக

ரஃபேல் போர் விமான ஊழல் விசாரணை தொடங்கிய பிரான்ஸ்; கலக்கத்தில் மோடி அரசு

பிரான்ஸுடன் இந்தியா மேற்கொண்ட ரஃபேல் விமான ஒப்பந்தத்தில் நடைபெற்ற ஊழல் வழக்கை விசாரிக்க நீதிபதி ஜீன் பிரான்கோயிஸ் போநெர்ட் (Jean François Ponert) நியமிக்கப்பட்டுள்ளது பாஜக மோடி அரசிற்கு கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. கடந்த காங்கிரஸ் ஆட்சியில் ஒரு விமானத்தின் விலை ரூ.526 கோடி என்ற வீதத்தில் 126 ரஃபேல் விமானங்களை பிரான்ஸிடம் இருந்து கொள்முதல் செய்ய பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதனையடுத்து மோடி தலைமையிலான பாஜக அரசு ஆட்சிக்கு வந்த பின் 2015 ஆம் ஆண்டு மார்ச் மேலும் வாசிக்க …..

உலகம் கொரானா தேசியம்

ஊழல் குற்றச்சாட்டால் இந்தியாவிடமிருந்து கோவாக்சின் வாங்கும் ஒப்பந்தத்தை ரத்து செய்த பிரேசில் அரசு

இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனத்திடமிருந்து கோவாக்சின் தடுப்பூசி வாங்குவதற்கு போடப்பட்ட ஒப்பந்ததை தற்காலிகமாக ரத்து செய்வதாக பிரேசில் அரசு அறிவித்துள்ளது. இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசிக்கு கடந்த பிப்ரவரி மாதம் பிரேசில் அரசு அனுமதி வழங்கியது. அதன்படி,பாரத் பயோடெக் நிறுவனத்திடமிருந்து முதற்கட்டமாக 4 லட்சம் கோவாக்சின் தடுப்பூசிகள் இறக்குமதி செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்டது. மொத்தம் 2 கோடி அளவிற்கு தடுப்பூசிகளை வாங்கவும் பிரேசில் அரசு முடிவு செய்தது. ஆனால்,பிரேசிலில் கொரோனா இறப்பு எண்ணிக்கை 500,000ஐ மேலும் வாசிக்க …..

அதிமுக அரசியல் இலங்கை கருத்துக்கள் காங்கிரஸ் தமிழ்நாடு திமுக பாஜக

கொல்லம் வேலுப்பிள்ளை மகனின் ஆறாத ஆறு தவறுகள்

நேற்று அந்த நாம் தமிழர் கட்சியின் ஆதரவாளர் மிகவும் கொதி நிலையில் இருந்தார் காரணம் வேலுப்பிள்ளை பிரபாகரன் வேர் என்பது தமிழ்நாட்டில் அல்ல ஆனால் மலையாள மண்ணின் டிஎன்ஏ என அடியேன் சொன்னதால்.. கோபம் தலைக்கேறி மயிலாப்பூருக்கு வந்து பிரித்து விடுவேன் என்றார்..ஓகே பிரித்து கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டு ஸ்மைலி இமோஜி இட்டேன்.. அவர் தன் நிலை மறந்து ஒருமையில் மோசமாக போட்ட பின்னூட்டத்தை எல்லாம் நீக்கிவிட்டேன்.. காரணம் இதுவரை அவர் மிகவும் கண்ணியமாக பேசி வருபவர் மேலும் வாசிக்க …..

அமெரிக்கா உலகம்

டிரம்பின் பேஸ்புக் பக்கம் 2 ஆண்டுகளுக்கு முடக்கப்படுகிறது- பேஸ்புக் திடீர் அறிவிப்பு

டிரம்பின் பேஸ்புக் பக்கம் 2023 ஜனவரி மாதம் வரை 2 ஆண்டுகளுக்கு முடக்கப்படுவதாக பேஸ்புக் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அமெரிக்காவில் கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்றார். ஜோ பைடன் வெற்றி பெற்றதை அங்கீகரிப்பதற்கான நடைமுறைகள் கடந்த ஜனவரி 7 ஆம் தேதி அமெரிக்கா பாராளுமன்ற கட்டிடமான கேப்பிட்டல் கட்டிட வளாகத்தில் நடைபெற்றது. தேர்தலில் தோல்வி அடைந்ததை ஏற்றுக்கொள்ளாத டொனால்டு டிரம்ப், தனது ஆதரவாளர்களிடம் வன்முறையை தூண்டும் வகையில் பேசி, மேலும் வாசிக்க …..

உலகம் கொரானா சமூகம் சீனா

சீனாவின் 2வது கொரோனா தடுப்பூசி ‘சினோவாக்’- WHO அனுமதி

சீனாவின் சீனோபார்ம் என்ற கொரோனா தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு ஒப்புதல் வழங்கிய நிலையில், தற்போது சினோவாக் பயோடெக் நிறுவனம் தயாரித்த தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்துள்ளது. உலகளவில் பைசர்-பயோஎன்டெக், மாடர்னா, ஜான்சன் & ஜான்சன், அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசிகளுக்கு உலக சுகாதார அமைப்பு ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும் கடந்த மாதம் சீனாவின் சீனோபார்ம் தடுப்பூசிக்கு ஒப்புதல் வழங்கியிருந்தது. இந்நிலையில், இன்று சீனாவில் 2வது கொரோனா தடுப்பூசியான சீனோவேக்- கொரோனாவேக் என்ற தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டிற்கு பயன்படுத்திக் கொள்ள உலக மேலும் வாசிக்க …..

உலகம் கொரானா

கொரோனா பாதிப்பு: பிரேசில் அதிபர் பதவி விலகக் கோரி மக்கள் போராட்டம்

கொரோனா தடுப்பு பணியை முறையாக மேற்கொள்ள தவறியதாக பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோவுக்கு எதிராக 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் போராட்டம் நடத்தினர். உலக அளவில் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக பிரேசில் நாட்டில் தான் அதிகளவிலான மக்கள் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். தற்போது வரை 4.61 லட்சம் பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், பிரேசில் நாட்டில் கொரோனா தடுப்பு பணியை முறையாக மேற்கொள்ள தவறியதாகச் சொல்லி அந்த நாட்டு அதிபர் ஜெய்ர் போல்சனாரோவுக்கு எதிராக ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு மேலும் வாசிக்க …..

அறிவியல் உலகம் கொரானா மருத்துவம்

கொரோனாவால் இதுவரை 1.15 லட்சம் சுகாதார பணியாளர்கள் பலி: WHO அதிர்ச்சி ரிப்போர்ட்

உலகம் முழுவதும் கொரோனா தொற்று பாதித்து இதுவரை 1.15 லட்சம் சுகாதார பணியாளர்கள் பலியாகி இருப்பதாகவும், உலகில் உள்ள தடுப்பூசிகளில் 75% மருந்துகளை 10 நாடுகள் மட்டுமே கொள்முதல் செய்து தம்வசப்படுத்தியுள்ளன எனவும் உலக சுகாதார அமைப்பு (WHO) தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு சீனாவின் வூஹான் நகரில் பரவத் துவங்கிய கொரோனா வைரஸ் தொற்று, உலககின் அனைத்து நாடுகளிலும் பரவி பெரும் அழிவை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா தொற்றில் இருந்து மக்களைப் பாதுகாப்பதற்காக இந்தியா, அமெரிக்கா, ரஷ்யா, மேலும் வாசிக்க …..