அரசியல் இயற்கை சுற்றுச்சூழல் தேசியம்

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு 2020க்கு எதிரான வழக்கு; மத்திய அரசுக்கு நோட்டீஸ்

மத்திய அரசு கொண்டுவந்துள்ள சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு 2020 சட்ட திருத்தத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் பதிலளிக்குமாறு தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம் சுற்றுச்சூழல் தாக்க அறிக்கை 2006ல் மத்திய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகம் திருத்தம் ஒன்றை கொண்டு வந்தது. நிலம் மற்றும் கடற்பகுதியில் உள்ள எண்ணெய் மற்றும் எரிவாயு எடுப்பதற்கான ஆய்வுக் கிணறுகள் அமைப்பதற்கு இனிமேல் மத்திய அரசிடம் சுற்றுச்சூழல் அனுமதி பெற அவசியமில்லை என்று மேலும் வாசிக்க …..

அரசியல் இயற்கை உச்ச நீதிமன்றம் சட்டம் சுற்றுச்சூழல் தமிழ்நாடு விவசாயம்

8 வழிச்சாலையை புதிய திட்டம் தயாரித்து செயல்படுத்தலாம்- உச்சநீதிமன்றம்

சேலம்- சென்னை 8 வழிச்சாலை தீர்ப்பில், தமிழக அரசின் அரசாணைக்கு மட்டுமே தடை தொடரும், ஆனால் 8 வழிச்சாலை குறித்து புதிய திட்டம் தயாரித்து, அரசாணை வெளியிட்டு செயல்படுத்தலாம் என்று உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சேலம்- சென்னை 8 வழிச்சாலை அமைக்க நிலம் கையகப்படுத்த தமிழக அரசு அரசாணை விடுத்திருந்த நிலையில், அதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசின் அரசாணையை தடை செய்து கடந்த 2019 ஏப்ரல் 8 ஆம் தேதி தீர்ப்பு மேலும் வாசிக்க …..

இயற்கை காலவரிசை சுற்றுச்சூழல் தமிழ்நாடு

புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி; தமிழகத்தில் நவம்பர் 23 முதல் கனமழைக்கு வாய்ப்பு

வங்கக்கடலில் உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியால் நவம்பர் 23ஆம் தேதி முதல் தமிழகத்தில் பல மாவட்டங்களில் மீண்டும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மத்திய வங்கக் கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும். இதன் காரணமாக நவம்பர் 23 ஆம் தேதி முதல் தமிழகத்தில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. வானிலை மேலும் வாசிக்க …..

இயற்கை சுற்றுச்சூழல் வாழ்வியல்

கனமழை: பழைய கட்டடங்களில் வசிப்போருக்கு எச்சரிக்கை!

தமிழகத்தில் தொடர்ந்து பரவலாக கனமழை பெய்து வருவதால் பழைய கட்டிடங்களில் தங்குவதோ, அருகில் செல்லவோ வேண்டாம் என்று தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. தமிழகம், புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் அடுத்த 24 மணிநேரத்தில் கடலூர், மயிலாடுதுறை ,நாகை, தூத்துக்குடி மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், அதேபோல் விழுப்புரம், கள்ளக்குறிச்சி ,நெல்லை, மதுரை, மேலும் வாசிக்க …..

இயற்கை சுற்றுச்சூழல் தேசியம் வர்த்தகம் வாழ்வியல்

இன்று நள்ளிரவு முதல் பட்டாசு விற்க, வெடிக்க தடை வழக்கில் தேசிய பசுமை தீர்ப்பாயம் அதிரடி தீர்ப்பு

காற்று மாசு அதிகம் உள்ள நகரங்களில் இன்று (நவம்பர் 9) நள்ளிரவு முதல் நவம்பர் 30 ஆம் தேதி நள்ளிரவு வரை பட்டாசு விற்பனை செய்யவும், வெடிக்கவும் தடை என்று தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் வரும் 13ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. கொரோனா தொற்று, காற்று மாசுபாடு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு பல்வேறு மாநில அரசுகள் பட்டாசு வெடிக்க தடை விதித்துள்ளன. இதற்கிடையில் காற்று மாசுபாடு அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு மேலும் வாசிக்க …..

இயற்கை சுற்றுச்சூழல்

தமிழக கடலோர மாவட்டங்களில் நவம்பர் 11 ஆம் தேதி முதல் கனமழை- வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் சென்னை முதல் நாகை வரை உள்ள கடலோர மாவட்டங்களில் நவம்பர் 11 ஆம் தேதி முதல் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்ட அறிவிப்பில், தமிழகக் கடலோரப் பகுதியில் நிலவும் கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகக் கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வறண்ட மேலும் வாசிக்க …..

கலாச்சாரம் கல்வி சுற்றுச்சூழல் தமிழ்நாடு வேலைவாய்ப்புகள்

தமிழர்கள் எதிர்ப்பால் பணிந்து திருத்தம் செய்தது மத்திய பாஜக அரசு

பா.ஜ.க அரசு ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்தே இந்தி, சமஸ்கிருதம் ஆகிய மொழிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதும், தமிழ் உள்ளிட்ட தொன்மைவாய்ந்த மொழிகளைப் புறக்கணிப்பதுமான போக்கு தொடர்ந்து வருகிறது. சமீபத்தில் இந்திய கலாசாரம் பற்றி ஆய்வு செய்தவதற்கான குழுவை அமைத்தது பா.ஜ.க அரசு. 16 பேர் கொண்ட அக்குழுவில் ஒருவர் கூட தென்னிந்தியர் – சிறுபான்மையினர் – பட்டியலினத்தவர் இடம்பெறவில்லை என்பது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், மத்திய தொல்லியல் துறை வெளியிட்டுள்ள ஒரு அறிவிக்கையில் தமிழ் மொழி மேலும் வாசிக்க …..

அரசியல் சுற்றுச்சூழல் தேசியம்

இயற்கை வளங்களை சூறையாடுகிறதா மோடி அரசின் புதிய EIA 2020…

இந்தியா முழுவதும் மத்திய மோடி அரசின் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு அறிக்கை 2020 (Environmental Impact Assessment-EIA 2020) மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக ஒரு குறிப்பிட்ட இடத்தில் தனியார் நிறுவனம் அல்லது அரசு நிறுவனம் ஒரு திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்றால், மத்திய அரசிடம் அனுமதி வாங்க வேண்டும். இதற்காக மத்திய அரசிடம், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையை அந்த நிறுவனங்கள் அளிக்க வேண்டும். சுற்றுசூழல் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் 1996ல் கொண்டு வரப்பட்ட இந்த மேலும் வாசிக்க …..

இயற்கை சுற்றுச்சூழல்

11 நாட்களில் 4 யானைகள் மர்ம மரணம்; உயிருக்கு போராடி, உடல் அழுகிய பரிதாபம்…

11 நாட்களில் அடுத்தடுத்து 4 யானைகள் பலியானதும், அதிலும் 3 யானைகள் 2 நாட்களில் பலியானாதும் கோயம்புத்தூரில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கேரளாவில் மன்னார்காடு காட்டுப்பகுதியில் கடந்த மார்ச் மாதம் 27ம் தேதி கர்ப்பிணி யானை ஒன்று வெடி வைத்து கொலை செய்யப்பட்டது. இந்நிகழ்வு இந்தியா முழுவதும் சர்ச்சையை  ஏற்படுத்தியது. இந்நிலையில் தற்போது கோவை மேட்டுப்பாளையம் சிறுமுகை காட்டுப் பகுதியில் அடுத்தடுத்து 4 யானைகள் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சத்தியமங்கலம் காடு தொடங்கி பவானிசாகர் மேலும் வாசிக்க …..

இயற்கை சுற்றுச்சூழல்

வெட்டுக்கிளிகள் படையெடுப்பால் அவசர ஆலோசனையில் டெல்லி அரசு..

வட மாநிலங்களில் வெட்டுக்கிளிகளின் பாதிப்பு குறைந்து வந்த நிலையில், ஹரியானா மாநிலம் குருகிராமில் வெட்டுக்கிளிகள் சூழ்ந்து காணப்பட்டதால் டெல்லி அரசு அவசர கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளது. ஹரியானா மாநிலம் குருகிராமில் பெரும் திரளாக வெட்டுக்கிளிகள் படையெடுத்துள்ளன. குருகிராம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் வான்வெளியிலும், தெருக்களிலும், சாலைகளிலும் ஏராளமான வெட்டுக்கிளிகள் கூட்டம் கூட்டமாக காணப்பட்டுள்ளன. கூட்டம் கூட்டமாக படையெடுத்த வெட்டுக்கிளிகளால் மக்கள் வீடுகளுக்கு உள்ளேயே முடங்கியுள்ளனர். குருகிராமில் உள்ள உயரமான அடுக்குமாடிக் குடியிருப்புகளை சுற்றியும் வெட்டுக்கிளிகள் அராஜகம் செய்து மேலும் வாசிக்க …..