அரசியல் இயற்கை தேசியம் விவசாயம்

மத்திய அரசின் ஒன்றரை ஆண்டு வேளாண் சட்டம் நிறுத்திவைப்பு சலுகையை நிராகரித்த விவசாயிகள்

மத்திய அரசின் எந்தவொரு பரிந்துரையையும் ஏற்கமாட்டோம், வேளாண் சட்டங்களை நிபந்தனை இன்றி முழுமையாக திரும்பப்பெற வேண்டும் என்பது தான் ஒரே கோரிக்கை என விவசாயிகள் உறுதியாக தெரிவித்துள்ளனர். மத்திய பாஜக அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் 58 நாட்களாக தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசு விவசாயிகளுடன் பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வேண்டும் என்பதில் விவசாயிகள் உறுதியாக உள்ளனர். விவசாயிகளை போராட்டத்தை தீவிரப்படுத்தும் விதமாக, ஜனவரி மேலும் வாசிக்க …..

அரசியல் இயற்கை தேசியம் விவசாயம்

விவசாயிகள் போராட்டம்: தோல்வியில் முடிந்த 10வது கட்ட பேச்சுவார்த்தை

வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவது தொடர்பான விவசாய சங்கங்கள்- மத்திய அரசு இடையே நடந்த 10வது கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்ததால், அடுத்த கட்ட பேச்சுவார்த்தை 22 ஆம் தேதி நடைபெற உள்ளது. மத்திய பாஜக அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக தலைநகர் டெல்லியில் 57வது நாளாக பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான் உள்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டத்தை கைவிடக் கோரி, மத்திய அரசு மேலும் வாசிக்க …..

அரசியல் இயற்கை தேசியம் விவசாயம்

வேளாண் சட்டங்களை ஒன்றரை வருடம் வரை நிறுத்தி வைக்க தயார்: மத்திய வேளாண் அமைச்சர்

வேளாண் சட்டங்களை ஒன்று முதல் ஒன்றரை ஆண்டுகள் வரை நிறுத்தி வைக்க தயார் என விவசாய சங்க பிரதிநிதிகளுடனான பேச்சுவார்த்தையில் மத்திய வேளாண் மந்திரி நரேந்திரசிங் தோமர் தெரிவித்துள்ளார். மத்திய பாஜக அரசு நிறைவேற்றி உள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, டெல்லியில் விவசாயிகள் 57 நாட்களாக கடும் பனியையும், குளிரையும் பொருட்படுத்தாமல் தீவிர போராட்டம் நடத்தி வருகின்றனர். வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி நடைபெற்று வரும் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு, மேலும் வாசிக்க …..

அரசியல் இயற்கை உச்ச நீதிமன்றம் சட்டம் தேசியம் விவசாயம்

குடியரசுத் தினத்தன்று டிராக்டர் பேரணி; டெல்லி காவல்துறை தான் தீர்மானிக்கும்: உச்சநீதிமன்றம்

டெல்லியில் குடியரசுத் தினத்தன்று விவசாயிகள் டிராக்டர் பேரணியை அனுமதிக்கலாமா.. வேண்டாமா.. என்பதை காவல்துறை தான் முடிவு செய்ய வேண்டும் எனக் கூறி, விசாரணையை 20ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது உச்சநீதிமன்றம். மத்திய பாஜக அரசின் புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் 55 நாட்களாக தீவிரமடைந்து வருகிறது. வேளாண்சட்டங்கள் மற்றும் விவசாயிகள் போராட்டம் தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், வேளாண் சட்டங்களுக்கு இடைக்கால தடைவிதித்து, 4 பேர் குழுவை அமைத்தது. உச்சநீதிமன்றம் மேலும் வாசிக்க …..

அரசியல் இயற்கை தேசியம் விவசாயம்

போராட்டத்திற்கு ஆதரவு கொடுப்பவர்களுக்கு NIA சம்மன்- பழிவாங்குகிறதா மோடி அரசு

விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவளித்த பஞ்சாபி நடிகர் சித்து உள்ளிட்ட பலருக்கு எதிராக தேசிய புலானாய்வு முகமை (NIA) வழக்குப்பதிவு செய்துள்ளதற்கு விவசாயிகள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர். மத்திய பாஜக அரசு வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வேண்டும் என வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். 9 கட்ட பேச்சுவார்த்தையிலும் உடன்பாடு எட்டாததால், டெல்லியில் விவசாயிகள் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும்வரை போராட்டம் தொடரும் என விவசாயிகள் உறுதியாக உள்ளனர். மேலும் வாசிக்க …..

அரசியல் இயற்கை தேசியம் விவசாயம்

குடியரசு தினத்தன்று 1 லட்சம் டிராக்டர் பேரணி; டெல்லி நோக்கி படையெடுக்கும் விவசாயிகள்

டெல்லியில் குடியரசு தினத்தன்று ஒரு லட்சம் டிராக்டர் பேரணி நடத்துவதற்காக பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலத்தில் இருந்து விவசாயிகள் டிராக்டர்களில் புறப்பட்டனர். மத்திய பாஜக அரசு கொண்டு வந்த புதிய வேளாண் திட்டங்களை எதிர்த்து டெல்லி எல்லைகளை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி கடும் பனியிலும், குளிரிலும் 54வது நாளாக விவசாயிகள் போராட்டம் தொடர்கிறது. இந்த போராட்டத்தில் இதுவரை 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர். விவசாயிகளுக்கும், மத்திய அரசுக்கும் இடையே மேலும் வாசிக்க …..

இயற்கை உலகம்

இந்தோனேசியாவை உலுக்கிய பயங்கர நிலநடுக்கம்.. இதுவரை 42 பேர் பலி

இந்தோனேசியாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் இதுவரை 42 பேர் உயிரிழந்துள்ளனர், நூற்றுக்கணக்கானோர் படுகாயமடைந்து உள்ளனர். பூகம்பம் உள்ளிட்ட பேரழிவுப் பிரதேசங்களில் இந்தோனேசியா முதன்மையான இடமாகும். பசிபிக் நெருப்பு வளையம் என்று அழைக்கப்படும் பகுதியில் இந்தோனேசியா உள்ளது. இப்பகுதியில் பூமியைத் தாங்கும் பெரும்பாறைகள் ஒன்றையொன்று உரசிக்கொள்ளும், மோதிக்கொள்ளும். இங்கு எரிமலை சீற்றங்கள் அதிகம். இந்தோனேசியாவின் சுலவேசி தீவில் நேற்று (ஜனவரி 15) பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவாகியிருந்த இந்த நிலநடுக்கம் காரணமாக, அப்பகுதியில் மேலும் வாசிக்க …..

அரசியல் இயற்கை தேசியம் விவசாயம்

விவசாய சங்கங்கள்- மத்திய அரசு இடையே 9 ஆம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வி

டெல்லியில் போராடும் விவசாயிகள் மற்றும் மத்திய அரசு இடையே நடந்த 9 ஆம் கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்து உள்ளது. மத்திய பாஜக அரசின் 3 புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் 52 நாட்களாக விவசாயிகள் போராடி வருகின்றனர். இதுவரை 8 கட்ட பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் விவசாயிகள், மத்திய அரசு இடையே உடன்பாடு எதுவும் எட்டப்படவில்லை. வேளாண் சட்டங்களை நடைமுறைப்படுத்த உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து, 4 பேர் கொண்ட பரிந்துரைக் குழுவை மேலும் வாசிக்க …..

அரசியல் இயற்கை உச்ச நீதிமன்றம் சட்டம் தேசியம் விவசாயம்

விவசாயிகள் போராட்டம்: உச்சநீதிமன்றம் அமைத்த குழுவில் இருந்து ஒருவர் விலகல்

தாம் எப்போதும் விவசாயிகள் பக்கம் நிற்கப்போவதாக அறிவித்து, வேளாண் சட்டங்கள் தொடர்பாக உச்சநீதிமன்றம் அமைத்த குழுவில் இருந்து பாரதிய கிசான் யூனியன் தலைவர் பூபிந்தர் சிங் மான் விலகி உள்ளார். மத்திய பாஜக அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி, டெல்லியில் தொடர்ந்து 51 நாட்களாக விவசாயிகள் தொடர்ந்து போராடி வருகின்றனர். விவசாயிகளுடன் மத்திய அரசு பல கட்ட பேச்சு வார்த்தைகள் நடத்தியும் தோல்வியில் முடிந்தது. இந்த போராட்டம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றுவந்த வழக்கில் மேலும் வாசிக்க …..

இயற்கை சமூகம் தமிழ்நாடு விவசாயம்

திமுக ஆட்சி அமைந்ததும் கல்விக் கடன், விவசாயக் கடன், நகைக்கடன் தள்ளுபடி உறுதி- மு.க.ஸ்டாலின்

திமுக ஆட்சி அமைந்ததும், அனைத்து விவசாயிகளின் விவசாயக் கடன்கள், நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார். திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “தமிழர் திருநாளில் அனைவருக்கும் பொங்கல், தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள். உலகின் அச்சாணியான உழவுத் தொழிலைப் போற்றும் தமிழர்களின் பண்பாட்டுத் திருவிழாவான பொங்கல் நன்னாளும், திருவள்ளுவர் ஆண்டுக் கணக்கின் தொடக்கமுமான தமிழ்ப் புத்தாண்டும் இணைந்து வரும் தை-1 தமிழர் திருநாளில் தமிழக மக்கள் அனைவருக்கும் மேலும் வாசிக்க …..