தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் ஹன்சிகா. விஜய், தனுஷ், சூர்யா, விஷால் ஆகியோடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார். பிறகு சினிமா வாய்ப்பு குறைய தற்போது, துப்பாக்கி முனை, 100 மற்றும் மஹா ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
அறிமுக இயக்குனர் யு.ஆர்.ஜமீல் இயக்கத்தில் ஹன்சிகா நடித்து வரும் படம் மஹா. ஜமீல் இதற்கு முன்னதாக ரோமியோ ஜூலியட் மற்றும் போகன் ஆகிய படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார். கிப்ரான் இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார். எட்செட்ரா எண்டர்டயின்மெண்ட் நிறுவனத்தின் மூலம் மதியழகன் இப்படத்தை தயாரித்து வருகிறார்.
இந்நிலையில், மஹா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது. மஹா ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வித்தியாசமாக உள்ளன. அதில் ஒரு போஸ்டரில் ஹன்சிகா காவி உடை அணிந்து சுருட்டு குடிப்பது போன்ற புகைப்படமும், மற்றொரு போஸ்டரில், ஹன்சிகா பல முகங்களை கொண்டு இருப்பது போன்றும் காணப்படுகிறது. மஹாவின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரைப் பார்த்த பலரும் நிச்சயம் எதிர்ப்பு கிளம்பி இலவச விளம்பரம் கிடைக்கும் என்பதில் சந்தேகமே இல்லை என்று கூறிவருகின்றனர்.
இதற்கு முன் சர்கார் போஸ்டரில் விஜய் தம்மடிப்பது போன்று போஸ் கொடுத்ததற்கு எதிர்ப்பு கிளம்பி அந்த போஸ்டரையே சமூக வலைதளங்களில் இருந்து நீக்க வைத்தனர். இந்நிலையில் ஹன்சிகா இப்படி போஸ் கொடுத்துள்ளார் என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன.