தெறி மற்றும் மெர்சல் படங்களை தொடர்ந்து, அட்லி இயக்கத்தில் விஜய்யின் 63 படத்தில் கதிர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் இப்படத்தில் கதாநாயகியாக நயன்தாரா மற்றும் விவேக், யோகி பாபுவும் நடிக்க இருப்பது உறுதியாகி இருக்கிறது.

இப்படத்தில் பெண்கள் கால்பந்தாட்ட அணியின் பயிற்சியாளராக விஜய் நடிக்கிறார். விளையாட்டு துறையில் நடக்கும் ஊழல்கள், சாதி ரீதியிலான பாரபட்சம் போன்றவைகளை மையப்படுத்தி மையப்படுத்தி உருவாகும் இந்த படத்தில், பரியேறும் பெருமாள் படம் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த கதிர் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பது உறுதியாகியுள்ளது.

மேலும், மேயாத மான் பட புகழ் இந்துஜா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் தல அஜித்தின் விஸ்வாசம் படத்தில் நடித்த நடிகர் ரோபோ ஷங்கரின் மகள் தளபதி 63 படத்தில் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. படிப்பு காரணமாக மகளை தேடி வந்த பட வாய்ப்புகளை தவிர்த்து வந்த ரோபோ ஷங்கர், விஜய் படம் என்றதும் ஒப்புக் கொண்டதாக கூறியுள்ளார்.

ஏஜிஎஸ். என்டர்டெயின்மெண்ட் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவுள்ளார். ஜி.கே. விஷ்ணு ஒளிப்பதிவு செய்யும் நிலையில், படத்திற்கு முத்துராஜ் கலைப் பணிகளை மேற்கொள்கிறார். படப்பிடிப்பு வருகிற 20-ந் தேதி தொடங்கவிருக்கிறது. இந்நிலையில் படத்தை 2019 தீபாவளிக்கு வெளியிட இருப்பதாக படக்குழு தகவல் தெரிவிக்கிறது.