மத்தியப் பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் ஆளும் பாஜகவை எதிர்த்து சமாஜ்வாதி உள்ளிட்ட 6 கட்சிகள் காங்கிரஸுடன் கைகோர்த்துள்ளது.இந்த அணி சேர்ப்பு பாஜக வை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
லோக்தன்ரிக் ஜனதா தளம் (எல்ஜேடி),
சமாஜ்வாதி கட்சி (எஸ்பி),
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ),
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஎம்),
பகுஜன் சங்கார்ஷ் தளம் (பிஎஸ்டி),
கோந்த்வானா கந்தாத்ர கட்சி (ஜிபிபி),
ராஷ்ட்ரிய சமந்த தளம் (ஆர்எஸ்டி) மற்றும்
பிரஜதன்த்ரிக் சமாதன் கட்சி (பிஎஸ்பி) ஆகிய 8 கட்சிகள் சார்ந்த பிரதிநிதகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வர இருக்கும் சட்டப்பேரவை குறித்து ஆலோசனை நடத்த சந்தித்தனர்.
இந்த சந்திப்பில், பாஜக கூட்டணியை எதிர்த்து அனைவரும் காங்கிரஸ் கட்சியுடன் கைகோர்க்க முடிவு செய்தன. இந்த சந்திப்புக்குப் பிறகு பிடிஐ நிறுவனத்திடம் பேசிய எல்ஜேடி தலைவர் கோவிந்த் யாதவ் இந்த தகவலை வெளியிட்டார். மேலும், இந்த சந்திப்பின் போது இடம்பெற்றிருந்த 8 கட்சிகளும் கூட்டணியை முன்நோக்கி கொண்டு செல்ல வரும் அக்டோபர் 7-ஆம் தேதி மீண்டும் சந்திக்கவுள்ளது என்று எல்ஜேடி தலைவர் கோவிந்த் யாதவ் தெரிவித்தார்.
ஆனால், மத்தியப் பிரதேசத்தின் 230 சட்டப்பேரவை தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவதாக பின்னர் அறிவித்தது. சிபிஐ மற்றும் சிபிஎம் காங்கிரஸ் கூட்டணியில் இடம்பெறாவிட்டாலும், பாஜக எதிர்த்து நிற்பதால், அதில் பாஜகவுக்கு அது கூட்டணி விஷயத்தில் உதவாது.
அதனால், சமாஜ்வாதி உள்ளிட்ட 6 கட்சிகள் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிக்கு சம்மதம் தெரிவித்துள்ளதால், காங்கிரஸ் கட்சி அங்கு பலம் பெற்றுள்ளதால் இது பாஜகவின் வெற்றியை முற்றிலும் பாதிக்கும் என்பதால் மத்தியப்பிரதேசத்தில் தனித்து விடப்பட்ட பாஜக என்ன செய்யும் என்பது கேள்விகுறியாக உள்ளது.