இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உச்சத்தை தொட்டு விட்ட நிலையில், அவற்றின் மீது கூடுதல் செஸ் வரி விதிக்கப்படுவதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரையில் தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களாகவே சென்னை உட்பட நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து விட்டது. சென்னையில் இன்று (ஜனவரி 01) ஒரு லிட்டர் பெட்ரோல் 88.82 ரூபாய்க்கும், ஒரு லிட்டர் டீசல் விலை 81.71 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல் நாட்டின் வணிக தலைநகர் மும்பையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 93 ரூபாய் என்ற அளவுக்கு உயர்ந்துள்ளது. முன்பு கடலூர் மாவட்டத்தில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை முதல் முறையாக லிட்டர் 90 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்பட்டு அதிர்ச்சியளித்தது.

இந்நிலையில் பெட்ரோல், விலை லிட்டருக்கு 2 ரூபாய் 50 காசுகள் மற்றும் டீசல் மீது 4 ரூபாய் கூடுதல் செஸ் வரி விதிக்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தனது பட்ஜெட் உரையில் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் பெட்ரோல் மற்றும் டீசல் விலை இனிவரும் காலத்தில் மிகப்பெரிய ஏற்றத்தை சந்திக்கும். இதன் மூலம் அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரிக்கும் வாய்ப்பு இருக்கிறது. இதனால் இந்த கூடுதல் செஸ் வரி விதிப்பிற்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

திருப்பூரில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த பாஜக பிரமுகர் கைது