இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் எதிர்காலம் குறித்து ஊகங்கள் தவறானது, தோனி டி20 உலகக்கோப்பை அணியில் ஆடினால் தங்களுக்கு எளிதாக இருக்கும் என இந்திய அணியின் இளம் சுழற்பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் கூறி உள்ளார்.
இதுகுறித்து குல்தீப் யாதவ் கூறுகையில், “நான் தோனியை நிஜமாகவே மிஸ் பண்ணுகிறேன். எப்போது சீனியர் வீரருடன் விளையாடினாலும் அவர்களை உங்களுக்கு பிடித்துவிடும். ஓய்வு என்பது தோனியின் தனிப்பட்ட முடிவு. அதை அவரிடமே விட்டுவிட வேண்டும். அதைப் பற்றி விவாதம் செய்வது சரியில்லை.
தோனி முழு உடற்தகுதியுடன் உள்ளார். தனிப்பட்ட முறையில் அவர் மீண்டும் இந்திய அணிக்காக விளையாட வேண்டுமென ஒரு ரசிகராக விரும்புகிறேன். அவர் அணியில் இருந்தால் எங்களுக்கு எளிதாக இருக்கும்” என்று குல்தீப் யாதவ் கூறியுள்ளார்.
தோனி இருந்த வரை குல்தீப் யாதவ் விக்கெட் வேட்டை ஆடினார். அணியின் முன்னணி சுழற் ந்துவீச்சாளராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் வாசிக்க: இந்திய அணிக்கு நிரந்தர மனவள பயிற்சியாளர் அவசியம்- கேப்டன்
கடைசியாக தோனி கடந்த 2019 இல் நடந்த 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்றார். மேலும் எவ்வித கிரிக்கெட் போட்டிகளிலும் தோனி பங்கேற்கவில்லை. இதனால் அவரை மீண்டும் கிரிக்கெட் களத்தில் பார்க்க அவரின் ரசிகர்கள் அதிக ஆர்வமாக உள்ளனர்.
கடந்த 10 மாதங்களாக இந்திய கிரிக்கெட் அணிக்காக தோனி விளையாடவில்லை. இந்நிலையில் இவரால் மீண்டும் இந்திய கிரிக்கெட் அணிக்காக களமிறங்க முடியாது என பல முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவிக்க துவங்கியுள்ளனர்.