இந்திய கிரிக்கெட் அணியின் ஹிட்மேன் என்று புகழப்படும் துவக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மாவின் பிறந்தநாளை அவரின் ரசிகர்கள் ட்விட்டரில் இன்று உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

கடந்த 2007 ஜூன் 23ம் தேதி தனது முதல் போட்டியை துவங்கினர் ரோஹித் சர்மா. இந்திய கிரிக்கெட் அணியின் துவக்க வீரராக பல்வேறு தருணங்களில், அணியின் வெற்றிக்கு பல விதங்களில் உதவிபுரிந்தவர் ரோஹித் சர்மா. ஒருநாள் கிரிக்கெட்டில் பல்வேறு சாதனை அடித்து நொறுக்கியுள்ளார் ரோஹித்.

ஒருநாள் கிரிக்கெட்டில் மட்டுமில்லாமல், டி-20 கிரிக்கெட்டான ஐபிஎல் அரங்கிலும் ரோஹித்தின் சாதனை பயணம் தொடர்ந்துள்ளது. 4 முறை கோப்பை வென்றுள்ள மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ரோஹித் இருந்துள்ளார். சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் ஒருமுறை கூட சாத்தியமில்லை என கருதப்பட்ட இரட்டை சதத்தை மிகவும் சுலபமாக மூன்று முறை கடந்த ஒரே வீரர் என்ற வரலாறு படைத்தவர்.

மேலும் வாசிக்க: கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடிக்கும் வரை ஒலிம்பிக் நடத்துவது சாத்தியமல்ல

இந்நிலையில் கொரோனாவால் வீட்டிற்குள் முடங்கியுள்ள ரோஹித் சர்மா தன்னுடைய 33வது பிறந்தநாளை வீட்டில் கொண்டாடினார் . அவருக்கு அவரது ஐபிஎல் அணி மும்பை இந்தியன்ஸ், அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் முதல் 45 டிவீட்களை தன்னுடைய தளத்தில் பதிவிடுவதாக கூறி வாழ்த்து தெரிவித்துள்ளது. மேலும் இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தனது வாழ்த்துக்களை டிவிட்டர் மூலம் பகிர்ந்துள்ளார்.

இதையடுத்து ரோஹித்தின் ரசிகர்கள் அவரின் பிறந்தநாள் கொண்டாட்டத்தை நேற்று இரவு முதலே கொண்டாட துவங்கிவிட்டனர்.ரோஹித்தின் அதிரடி ஆட்டத்தின் நினைவுகளை அவர்கள் பகிர்ந்து வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.