சேலம்- சென்னை 8 வழிச்சாலை தீர்ப்பில், தமிழக அரசின் அரசாணைக்கு மட்டுமே தடை தொடரும், ஆனால் 8 வழிச்சாலை குறித்து புதிய திட்டம் தயாரித்து, அரசாணை வெளியிட்டு செயல்படுத்தலாம் என்று உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சேலம்- சென்னை 8 வழிச்சாலை அமைக்க நிலம் கையகப்படுத்த தமிழக அரசு அரசாணை விடுத்திருந்த நிலையில், அதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசின் அரசாணையை தடை செய்து கடந்த 2019 ஏப்ரல் 8 ஆம் தேதி தீர்ப்பு அளித்தது உயர்நீதிமன்றம்.
இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு வழக்கு தொடரப்பட்டது. இதனையடுத்து விவசாயிகள், பாதிக்கப்பட்ட நில உரிமையாளர்கள் உள்ளிட்டோர் சார்பில் கேவியட் மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த வழக்கு விசாரணையின்போது, இந்த திட்டத்துக்கு ரூ.10 ஆயிரம் கோடி அளவுக்கு செலவிடப்படுகிறது. 8 வழிச்சாலை திட்டம் செயல்படுத்தப்பட்டால், சென்னை- சேலம், சென்னை- மதுரை இடையே செல்லும் போக்குவரத்துத் தொலைவு குறையும், இதனால் எரிபொருள் மிச்சப்படும் என்று திட்ட இயக்குநர் தரப்பில் வாதங்கள் முன் வைக்கப்பட்டன.
[su_image_carousel source=”media: 19822,19823″ crop=”none” columns=”2″ captions=”yes” autoplay=”3″]
இந்நிலையில், இந்த வழக்கில் இன்று (டிசம்பர் 08) தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம், “நிலத்தின் உரிமையாளர்களான பொதுமக்களின் கருத்தும், சுற்றுச்சூழல் துறையின் அனுமதியும் முக்கியம்.
8 வழிச்சாலைத் திட்டம் தொடர்பாக நிலம் கையகப்படுத்த தமிழக அரசு பிறப்பித்த அறிவிப்பாணையை ரத்து செய்து, உயர்நீதிமன்றம் விதித்த தடை செல்லும். மேலும், இந்த திட்டத்துக்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களை 8 வார காலத்துக்குள் திரும்ப ஒப்படைக்கவும் உத்தரவிட்டது.
ஆனால், சேலம்- சென்னை 8 வழிச்சாலை திட்டத்தை செயல்படுத்த அனுமதி அளிக்கப்படுகிறது. உரிய துறைகளில் அனுமதி பெற்று வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி புதிய அறிவிக்கைகளை வெளியிட்டு 8 வழிச்சாலை திட்டத்தை புதிதாக தொடங்கலாம்.
புதிய சாலைகள் அமைக்க மத்திய அரசுக்கும், தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்துக்கும் அதிகாரம் உள்ளது. மீண்டும் நிலம் கையகப்படுத்த புதிய அரசாணையை வெளியிட வேண்டும். புதிய அறிவிக்கை வெளியிட்டு நிலங்களை கையகப்படுத்தலாம்” எனத் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
நீதிமன்ற உத்தரவை மதிக்க மாட்டீர்களா.. பீலா ராஜேஷுக்கு உயர்நீதிமன்றம் கண்டனம்