கடந்த 8 மாதங்களாக ஊதியம் கொடுக்காததால் கர்நாடகா மாநிலம் கோலார் மாவட்டத்தில் செயல்பட்டு வந்த ஆப்பிள் ஐபோன் தொழிற்சாலையை ஊழியர்கள் சூறையாடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

முன்னணி மொபைல் போன் நிறுவனமான ஆப்பிள் ஐ போன்கள் தயாரிக்கும் தைவான் நாட்டைச் சேர்ந்த விஸ்ட்ரான் தொழிற்சாலை கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தில் செயல்பட்டு வருகிறது.

அங்கு பணிபுரியும் நூற்றுக்கணக்கான தொழிலாளர்களுக்கு கடந்த 8 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. தொழிற்சங்கங்கள் மூலம் ஊதியம் வழங்கக்கோரி பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும், ஊதியம் வழங்க முன்வரவில்லை என கூறப்படுகிறது.

இதனால், ஆத்திரமடைந்த ஊழியர்கள், தொழிற்சாலையில் புகுந்து தாக்குதலில் ஈடுபட்டனர். நிறுவனத்தில் நிறுத்திவைக்கப்பட்டு இருந்த இரு சக்கர வாகனங்கள், கார்களை அடித்து நொறுக்கி சூறையாடினர். சில வாகனங்களை தீயிட்டு கொளுத்தியதால் பரபரப்பு நிலவியது.

[su_image_carousel source=”media: 19994,19995″ crop=”none” columns=”2″ captions=”yes” autoplay=”3″]

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் வன்முறையில் ஈடுபட்ட தொழிலாளர்கள் மீதும் தடியடி நடத்தி நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். ஆனால் ஐபோன் நிறுவனத்திற்கு எதிராக கோலார் மாவட்டத்தில் தொழிலாளர்கள் ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பான சூழல் நீடிக்கிறது.

ஜிஎஸ்டி மோசடியில் ஈடுபட்ட 1.63 லட்சம் நிறுவனங்களின் பதிவுகள் ரத்து- மத்திய அரசு