வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் “அசுரன்”. இப்படத்தில் வில்லனாக நடிக்க தேசிய விருது பெற்ற பிரபல திரைப்பட இயக்குனர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் உருவாக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு நெல்லை, கோவில்பட்டி பகுதிகளில் நடைபெறுகிறது. இதற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இப்படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார்.

பூமணியின் “வெக்கை” என்ற நாவலை மையமாகக் கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டு வருகிறது. இதில் முன்னணி மலையாள நடிகை மஞ்சு வாரியர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதில் மற்றொரு கதாபாத்திரத்தில் நடிகரும், சட்டமன்ற உறுப்பினருமான கருணாசின் மகன் கென் கருணாஸ் நடிக்கிறார்.

மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, காதல், வழக்கு எண் 18/9 உள்ளிட்ட படங்களை இயக்கிய பாலாஜி சக்திவேல் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் பாலாஜி சக்திவேல் வில்லனாக நடிப்பதாக கூறப்படுகிறது.