இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் வெளியான ‘மதராசபட்டினம்’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை ஏமி ஜாக்சன். இந்த படத்தை அடுத்து முன்னணி நடிகர்களின் படங்களாக தேர்வு செய்து அதில் நடித்து வருகிறார்.
ஏமி ஜாக்சன் தாண்டவம், தங்கமகன், கெத்து, தெறி, தேவி உள்ளிட்ட படங்களில் நடித்தார். இவரது நடிப்பில் கடைசியாக 2.0 பிரம்மாண்ட படம் வெளியாகி ஓடிக் கொண்டிருக்கிறது. தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்துள்ளார். ஹாலிவுட்டில் பிரபலமான சூப்பர் கேர்ள் இணைய தொடரிலும் ஏமி நடித்துள்ளார்.
இந்நிலையில் நடிகை எமி ஜாக்சன் இங்கிலாந்தை சேர்ந்த பிரபல தொழிலதிபரின் மகன் ஜார்ஜ் பனயோட்டு என்பவரை காதலித்து வருகிறார். நடிகை எமி ஜாக்சனுக்கும் அவரது காதலருக்கும் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு நிச்சதார்த்தம் நடந்தது. விரைவில் இருவரும் திருமணம் செய்துகொள்ள இருக்கிறார்கள்.
இதற்கிடையே ஏமி திருமணம் செய்யவிருக்கும் ஜார்ஜ் பனயோட்டுவின் சொந்து விவரம் வெளியாகி இருக்கிறது. ஜார்ஜின் தந்தை ஆன்ட்ரஸ். இவர் அபிலிட்டி குரூப் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். அவரின் சொத்து மதிப்பு மட்டும் 400 மில்லியன் பவுண்டுகள். இந்திய ரூபாய் மதிப்பில் இது 3500 கோடி ரூபாய்க்கும் மேல் இருக்கும் என கூறப்படுகிறது.