இயக்குனர் ஷங்கர், கமல்ஹாசன் கூட்டணியில் வெளியான படம் ‘இந்தியன்’. இந்தப் படம் வெளியாகி தற்போது 22 வருடங்களுக்கு மேலாகிவிட்டது. இப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.

இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் “இந்தியன் 2” திரைப்படத்தில் ஷங்கருடன் மீண்டும் இணைவதை கமல்ஹாசன் உறுதிப்படுத்தினார். ரஜினியுடன் இணைந்து 2.0 படத்தை முடித்த ஷங்கர் இந்தியன் 2 படத்துக்கான பணிகளை தொடங்கி உள்ளார். கடந்த 14 ஆம் தேதி பூஜை உடன் செட் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இப்படத்தில் கமல் ஜோடியாக காஜல் அகர்வால் கதாநாயகியாக நடிக்கிறார்.

தற்போது இப்படத்தின் இசையமைப்பாளராக அனிருத் ஒப்பந்தமாகியுள்ளார். ரஜினியின் ‘பேட்ட’ படத்துக்குப் பின் கமலுடன் இணைந்து “இந்தியன் 2” படத்திற்கும் இசையமைக்கவுள்ளார்.

முன்னதாக மக்களவைத் தோ்தல் வரவுள்ள நிலையில் எனது நடிப்பில் வெளியாகும் கடைசி படமாக இந்தியன் 2 இருக்கும். இதற்கு பின்னா் நான் படங்களில் நடிக்க மாட்டேன் எனக் கமல்ஹாசன் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.