382வது சென்னை தினம் இன்று கொண்டாடப்படுவதையொட்டி சென்னை மாநகராட்சி அலுவலகம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
பழமையான வரலாற்று அடையாளங்களையும், புதுமையான தொழில்நுட்பத்தின் ஆச்சரியங்களையும் ஒருசேர கலவையாக தாங்கி நிற்கும் நகரம் தான் சென்னை. தமிழ்நாட்டின் தலைநகரம், இந்தியாவின் 4வது பெரிய நகரம், உலகின் 31வது பெரிய நகரம் என்ற சிறப்பை பெற்ற இந்த சென்னை மாநகரம்.
1639 ஆம் ஆண்டு வணிக நோக்கத்திற்காக இங்கு வந்த கிழக்கிந்திய கம்பெனி, இதே நாளில், தற்போது செயின்ட் ஜார்ஜ் கோட்டை (தலைமைச்செயலகம்) அமைந்திருக்கும் பகுதியை, தாமஸ் வெங்கடப்பா நாயக்கர் என்பவரிடம் இருந்து விலைக்கு வாங்கியது. அவரது தந்தையான சென்னப்ப நாயக்கர் பெயரில் தான், பிற்காலத்தில் சென்னப்பட்டினம் என்றும் அழைக்கப்பட்டது.
17 ஆம் நூற்றாண்டின் இறுதியில் இங்கு வந்த ஆங்கிலேயர்கள், அந்த இடத்தில் செயின்ட் ஜார்ஜ் கோட்டையை கட்டினர். அதில், அதிகாரிகள் தங்கினார்கள். கோட்டையை சுற்றி ஊழியர்கள் குடியமர்த்தப்பட்டனர். அதன்பிறகு, அப்பகுதி வளர்ச்சி அடைய தொடங்கியது.
அதன்பின்னர் தொழில், வீடு, வியாபாரம், பொழுதுபோக்கு, போக்குவரத்துக்கு தேவைகளை பூர்த்தி செய்ததால் சென்னை மாநகரம் விரிவடைந்தது. இன்று சென்னை 2.0 என மாபெரும் வளர்ச்சியடைந்து இருக்கிறது.
[su_image_carousel source=”media: 25815,25814″ crop=”none” captions=”yes” autoplay=”2″ image_size=”full”]
ஆண்டாண்டு காலமாக வாழ்வு தேடி வருபவர்களுக்கு எல்லாம் சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்பு கொடுத்து வாழ்வளித்து வருகிறது. அந்த வகையில், சென்னை தோற்றுவிக்கப்பட்ட தினமான 1639 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 22 ஆம் தேதியை நினைவூட்டும் விதமாக, கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் சென்னை தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
அதன்படி 382வது சென்னை தினம் இன்று (ஆகஸ்ட் 22) கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி, சென்னை மாநகராட்சி நிர்வாகம் முதியவர்களின் வீடுகளுக்கே சென்று கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம், மரக்கன்றுகள் நடுதல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு ஏற்பாடு செய்துள்ளது.
மேலும், இந்த நாளை போற்றும் விதமாக சென்னை மாநகராட்சி அலுவலகம், கடற்கரை சாலை, நேப்பியார் பாலம் போன்றவை வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. கொரோனா பாதிப்பு குறையாத நிலையில், இந்த ஆண்டும், மிக எளிமையாகவே சென்னை தினம் கொண்டாடப்படுகிறது.
மக்கள் நலன் கருதி மதுக்கடைகளை மூட வேண்டும்- உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன்