போலி பத்திரப்பதிவை ரத்து செய்யும் அதிகாரம் வழங்கும் மசோதா, இன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.

1908 ஆம் ஆண்டு பத்திரப்பதிவு சட்டத்தின்படி பதிவு செய்யும் அலுவலர் அல்லது பிற அதிகார அமைப்பால் ஒருமுறை பதிவு செய்யப்பட்ட ஆவணம் ஒன்றை மோசடி, ஆள்மாறாட்டம் போன்ற காரணத்திற்காக கூட ரத்து செய்வதற்கு அதிகாரம் இல்லாமல் இருந்தது.

ஆள் மாறாட்டம், போலியான ஆவணங்கள் மூலம் போலி பத்திரப்பதிவுகள் நடைபெறும் பட்சத்தில் அவை கண்டறியப்பட்டால், சார்பதிவாளரோ, பத்திரப் பதிவுத்துறை ஐஜியோ அதனை ரத்து செய்யக் கோரி நீதிமன்றங்களிடம் கோரலாம். இதனால், நீதிமன்றம் மட்டுமே போலி பத்திரப்பதிவை ரத்து செய்ய முடியும் என்ற நிலை இருந்தது.

தற்போது அந்த நிலையை மாற்றி இனி பத்திரப்பதிவுத் தலைவரே, போலி பத்திரப்பதிவை ரத்து செய்யும் வகையில் அதிகாரம் வழங்கும் பத்திரப்பதிவு திருத்தச் சட்ட மசோதாவை இன்று (செப்டம்பர் 02) தமிழ்நாடு சட்டப்பேரவையில் வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி அறிமுகம் செய்தார். இந்த மசோதா உறுப்பினர்களின் ஆதரவுடன் ஒருமனதாக மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.

போராட்டத்தில் உயிர்நீத்த 21 சமூகநீதி போராளிகளுக்கு மணிமண்டபம்- மு.க.ஸ்டாலின்