இந்தியாவில் கடந்த 11 நாட்களாக பெட்ரோல், டீசல் விலை தினசரி புது புது உச்சத்தை அடைந்து வருவது பொதுமக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் மாற்றியமைத்து வருகின்றன.

பெட்ரோல் டீசல் விலை குறைவாக இருந்த சமயங்களில் மத்திய பாஜக அரசு கலால் வரியை அதிகரித்தது. இதனால் பெட்ரோல், டீசல் விலை பெரிய அளவில் குறையவில்லை. தற்போது கச்சா எண்ணெய் உயர்வால் எரிபொருளின் விலை உயர்ந்ததாக மத்திய அரசு கூறி வருகிறது.

நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலை பன்மடங்கு உயரத் தொடங்கியுள்ளது. இதனால் பெட்ரோல், டீசல் விலையை குறைக்கும்படி பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவும் திட்டமிட்டுள்ளனர்.

பெட்ரோல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், பிரதமர் மோடிக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், கடந்த 11 நாட்களாக பெட்ரோல், டீசல் விலை தினசரி புது புது உச்சத்தை அடைந்து வருகிறது. அதற்கு மத்திய அரசு விதித்துள்ள கலால் வரியே காரணம் என குற்றஞ்சாட்டப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தமிழகத்தில் 11வது நாளாக பெட்ரோல், டீசல் விலை அதிகரித்துள்ளது. அதன்படி, சென்னையில் பெட்ரோல் விலை நேற்றைய நிலவரப்படி 91.92 ரூபாய் என விற்பனை ஆன நிலையில், 28 காசுகள் அதிகரித்து இன்று 92.20 ரூபாய் என விற்பனை ஆகிறது.

அதேபோல, டீசல் விலையும் உயர்ந்துள்ளது. நேற்று 85.26 ரூபாய் விற்பனை ஆன ஒரு லிட்டர் டீசல் இன்று 32 காசுகள் அதிகரித்து 85.58 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இந்த நடைமுறை இன்று காலை முதல் அமலுக்கு வந்தது.

முன்னதாக அசாம், மேகாலயா போன்ற மாநிலங்களில் மாநில வரியை குறைத்து அதன்மூலம் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் மத்திய பிரதேசத்தின் அனுப்பூர் மாவட்டம் மற்றும் ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீகங்காநகர், ஹனுமான்கர் ஆகிய பகுதிகளில் பெட்ரோல் விலை லிட்டர் 100 ரூபாயை ஹனுமான்கர் குறிப்பிடத்தக்கது.

வாகனங்களுக்கு பாஸ்டேக் இல்லாவிட்டால் 2 மடங்கு கட்டணம்- மத்திய அரசு