தமிழ் திரைப்படங்களில் பலர் நடித்து விளம்பரங்களில் வாய்ப்பு பெறுவது வழக்கம். ஆனால் தனது சொந்த கடைக்காக தானே விளம்பரங்களில் நடித்து பெயர் பெற்றவர் லெஜண்ட் சரவணன்.

சரவணா ஸ்டோர் ஜவுளி சாம்ராஜ்யத்தை தொடர்ந்து பல்வேறு பொருட்களை விற்கும் ஸ்டோர் வைத்து பெரிய செல்வந்தராக உயர்ந்தவர் லெஜண்ட் சரவணன். முன்னர் பெரிய, பெரிய நடிகர்களை வைத்து விளம்பரம் செய்துவந்த இவர், பின்னர் தானே களத்தில் இறங்கி, பல்வேறு முன்னனி கதாநாயகிகளுடன் விளம்பரங்களில் நடித்து வருகின்றார்.

முதலில் அவர் சரவணா ஸ்டோர் விளம்பரங்களில் நடிக்கும் போது பல்வேறு விமர்சனங்கள், மீம்ஸ்கள் என வெறுக்கப்பட்டாலும், பின்னர் மக்கள் அதனை ஏற்றுக் கொண்டனர்.

தமிழ் சினிமாவில் எந்த ஒரு சினிமா பின்புலமும் இன்றி பல நடிகர்கள் சாதித்துள்ள நிலையில், வியாபார உலகில் பெரிய நாயகனாக ஜொலிக்கும் இவர் தற்போது திரைப்படங்களில் ஹீரோவாக ஜொலிக்க முடிவு செய்துள்ளார்.

இதற்கான பணிகள் தொடங்கப்பட்டு, கதை கேட்கும் வேலையில் இறங்கி உள்ளார். அவருக்கு பிடிக்கும் கதையில் 2020ம் ஆண்டு நடிக்க உள்ளதாக் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான சூப்பர் கலர்ஃபுல் விளம்பர படமும் அவரது, தமிழ் சினிமா எண்ட்ரிக்கான முன்னோட்டமாகவே பார்க்கப்படுகிறது.