சீனாவின் புதிய தேசிய பாதுகாப்பு சட்டத்துக்கு எதிராக ஹாங்காங்கில் மீண்டும் கிளர்ச்சி வெடித்துள்ளது. இச்சட்டத்தை அமல்படுத்தினால் சீனா பொருளாதார தடைகளை எதிர்கொள்ள நேரிடும் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது.
சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ளது ஹாங்காங். பிரிட்டனிடம் இருந்து 99 ஆண்டுகாலத்துக்கு ஹாங்காங்கை சீனா பெற்றிருந்தது. தற்போது இந்த குத்தகை காலம் முடிவடைய உள்ளது. இது தொடர்பாக இருநாடுகளும் பேச்சுவார்த்தை நடத்துகின்றன.
முன்னதாக ஹாங்காங்கில் கைது செய்யப்பட்டவா்களை சீனாவுக்கு நாடுகடத்த வகை செய்யும் சட்ட மசோதாவுக்கு எதிா்ப்பு தெரிவித்து அந்த நகரில் கடந்த ஆண்டு ஜூன் மாத வாக்கில் தொடங்கிய போராட்டங்கள், அந்த மசோதா காலாவதியான பிறகும் தொடா்ந்து தீவிரமடைந்து வந்தன. கொரோனா மற்றும் ஊரடங்கால், போராட்டங்கள் நிறுத்தப்பட்டன.
[su_carousel source=”media: 14099,14098″ limit=”100″ width=”700″ height=”400″ items=”1″ scroll=”2″ speed=”0″]
இந்நிலையில் ஹாங்காங் மக்களின் சுதந்திரத்தை நசுக்கும் வகையில், மிகவும் கடுமையான, தேசிய பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்தப் போவதாக சீனா கூறியுள்ளது. அடிப்படை ஜனநாயக உரிமையை நிராகரிக்க வகை செய்கிறது சீனாவின் புதிய தேசிய பாதுகாப்பு சட்டம். சீனாவுக்கு எதிரான ஜனநாயகப் போராட்டத்தில் ஈடுபடுவோரை குறி வைத்து, இந்த சட்டம் கொண்டு வரப்பட உள்ளதாக தெரிகிறது.இதற்கு, ஹாங்காங்கில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
சீனாவின் முயற்சிக்கு, ஹாங்காங்கின் தலைமை செயலர்கேரி லேம் ஆதரவு தெரிவித்துள்ளார். இது, மக்களை மேலும் கோபமடையச் செய்துள்ளது. ஹாங்காங்கை முழுமையாக தன்கட்டுப்பாட்டில் கொண்டுவரும் சீனாவின் முயற்சியை எதிர்த்து, பல்வேறுஇடங்களில் போராட்டங்கள் நடந்தன.
ஆயிரக்கணக்கானோர் குவிந்ததால், போராட்டத்தைக் கலைக்க, ஹாங்காங் போலீசார்,கண்ணீர் புகைகுண்டுகள் மற்றும் மிளகு தூளை தூவி போராட்டக்காரா்களை கலைத்தனா் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
[su_carousel source=”media: 14096,14097″ limit=”100″ width=”700″ height=”400″ items=”1″ scroll=”2″ speed=”0″]
மேலும் வாசிக்க: சிக்கிம் தனிநாடு என விளம்பரம் செய்த டெல்லி அரசு- வெடித்தது சர்ச்சை
இச்சட்டத்துக்கு எதிரான போராட்டங்களை ஒடுக்குவதில் சீனா முனைப்புடன் இருக்கிறது. அதேநேரத்தில் ஹாங்காங் கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவாக சர்வதேச சமூகம் திரண்டு நிற்கிறது. உலகின் முதுபெரும் அரசியலாளர்கள் 200 பேர் இச்சட்டத்துக்கு எதிராக கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில் இது அப்பட்டமான மீறல் நடவடிக்கை என விமர்சித்துள்ளனர். அமெரிக்காவின் வெளியுறவுத் துறை அமைச்சர் பாம்பியோ, ஹாங்காங் சுதந்திரத்துக்கான சாவுமணி என சாடியுள்ளார்.
ஹாங்காங் கிளர்ச்சியாளர்களுக்கு அடைக்கலம் நீட்ட ஆதரவுக் கரம் கொடுத்திருக்கிறது தைவான். ஹாங்காங் மக்களுக்கு என்ன உதவிகளையும் செய்ய தைவான் தயாராக இருப்பதாக அதன் அதிபர் டிசாய் இங் வென் கூறியுள்ளார்.
இதனிடையே அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ராபர்ட் ஓ ப்ரெய்ன், இப்போக்கு நீடித்தால் சீனா, ஹாங்காங் ஆகியவை அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளை எதிர்கொள்ள நேரிடும் என எச்சரித்திருக்கிறார்.