தன்னிடம் லட்சம் கேட்டதாக மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி உள்ளிட்ட மூன்று பேர் மீது சர்வதேச துப்பாக்கி சுடுதல் வீராங்கனை வர்த்திகா சிங் புகார் அளித்துள்ள சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சர்வதேச துப்பாக்கி சுடுதல் வீராங்கனை வர்த்திகா சிங், தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராக நியமிப்பதற்காக தன்னிடம் லட்சம் கேட்டதாக மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி உள்ளிட்ட மூன்று பேர் மீது நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து உள்ளார்.

இதுதொடர்பாக வர்த்திகா சிங் அளித்துள்ள புகாரில், மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியின் நெருங்கிய ஆதரவாளர்களான விஜய் குப்தா மற்றும் ரஞ்சித் சிங் ஆகியோர், தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராக நியமிப்பதற்காக தன்னிடம் 1 கோடி லட்சம் கேட்டதாகவும், பின்னர் அந்த தொகையை குறைத்து 25 லட்சம் கேட்டதாவும் குற்றம் சாட்டியுள்ளார்‌.

அதுமட்டுமல்லாது, அமைச்சரின் ஆதரவாளராக இருக்கும் ஆண் ஒருவர் தன்னிடம் ஆபாசமாகப் பேசுவதாகவும் புகார் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், வர்த்திகா சிங் நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கு வரும் ஜனவரி 2 ஆம் தேதி சட்டமன்ற உறுப்பினர்கள்‌ மற்றும்‌ நாடாளுமன்ற உறுப்பினர்களை விசாரிக்கும்‌ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளதாக வர்த்திகா சிங்கின் வழக்கறிஞர் கூறியுள்ளார்.

இதற்கிடையே கடந்த நவம்பர்‌ 23 ஆம்‌ தேதி அமேதி மாவட்டத்தில் உள்ள முசாபிர்கானா காவல் நிலையத்தில் வர்த்திகா சிங் மீது அமைச்சரின் ஆதரவாளர்கள் அளித்துள்ள புகாரில், விஜய்‌ குப்தா மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்தியதாகவும்‌, அவரது பெயரை கெடுக்க முயன்றதாகவும்‌ குற்றம்‌ சாட்டியுள்ளனர்.

துப்பாக்கி சுடுதல் வீராங்கனையான வர்த்திகா சிங், நிர்பயா குற்றவாளிகளை தூக்கிலிடும் பணிக்கு தன்னை அனுமதிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு ரத்தத்தில் கடிதம் எழுதி பரபரப்பை ஏற்படுத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் இளம் மேயர்; திருவனந்தபுரத்தில் 21 வயது மாணவி சாதனை