4ஜி ஸ்பெட்ரம் அலை ஓதுக்கீட்டை ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு  அள்ளி தத்த மோடியின் பாஜக அரசின் முடிவால் அரசின் பிஎஸ்என்எல் BSNL நிறுவனம் விற்பனை சரிந்தது நம் அனைவருக்கும் தெரிந்ததே..
 
பிஎஸ்என்எல் 4ஜி பெறாத நிலையில்  அதீதமாக ஆர்ப்பாட்டமான அறிவிப்புகள் மற்றும் அதிரடி சலுகைகளுடன், இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் செல்போன் சேவை துறையில் களமிறங்கியது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் ஓர் அங்கமான ரிலையன்ஸ் ஜியோ.
 
மேலும் சட்ட்த்தை மீறி மோடியின் படத்தை போட்டு இந்தியா முழுவதும் நூறு கோடிக்கு மேல விளம்பரம் வேறு செய்தது ரிலையன்ஸ் நிறுவனம்
 
மிகக் குறைந்த கட்டணத்தில் அவுட் கோயிங் முற்றிலும் இலவசம், மின்னல் வேக இணையதள இணைப்பு என்ற சேவைகளைப் பார்த்து, அதுவரை பிற செல்போன் நிறுவனங்களின் சேவைகளைப் பயன்படுத்தி வந்தவர்களும் ரிலையன்ஸ் ஜியோவுக்கு மாற, தற்போது செல்போன் சேவை சந்தையில் ஜியோவுக்குப் போட்டியாக வோடஃபோன் ஐடியா, பாரதி ஏர்டெல் ஆகிய 2 பெரிய நிறுவனங்கள் மட்டுமே தாக்குப்பிடித்து நிற்கின்றன. இதர சிறு நிறுவனங்கள் காணாமலே போய்விட்டன.
 
அதே சமயம் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக வழங்கப்படும் குறைந்த கட்டணம் உள்ளிட்ட சலுகைகளால், ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தால் இன்னும் பெரிய அளவில் லாபம் ஈட்ட முடியவில்லை என்ற காரணத்தை காட்டி.,
 
அதன்படி கனடா நாட்டைச் சேர்ந்த புரூக்ஃபீல்டு அசெட் மேனேஜ்மென்ட் என்ற பிரபல சொத்து மேலாண்மை நிறுவனத்திற்கு, சுமார் 15 பில்லியன் டாலர், அதாவது 1.07 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான ரிலையன்ஸ் ஜியோவின் செல்போன் டவர்கள் மற்றும் ஃபைபர் ஆப்டிக் கேபிள்கள் உள்ளிட்ட உட்கட்டமைப்பு சொத்துகளை விற்க உள்ளதாக ரிலையனஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்துக்கு நெருக்கமான வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தற்போதைய கடன் மதிப்பு சுமார் 40 பில்லியன் டாலர், அதாவது 3 லட்சம் கோடி ரூபாய் எனச் சொல்லப்படுகிறது.
 
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்துக்காக அளிக்கப்பட்ட நிதி அளிப்பு காரணமாகத்தான் கடன் சுமை இந்த அளவுக்கு அதிகரித்ததாகச் சொல்லப்படுகிறது.
 
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், தற்போது சுமார் 2.2 லட்சம் செல்போன் டவர்கள் கொண்ட நெட் ஒர்க்கையும், 3 லட்சம் கிலோ மீட்டர் தொலைவிலான ஃபைபர் ஆப்டிக் கேபிள்களையும் கொண்டு, சுமார் 300 மில்லியன் சந்தாதார்களுக்கு விரைவான சேவையை வழங்கி வருகிறது.
 
இந்த நிலையில், இந்திய தொலைத் தொடர்பு சந்தையில் கால் பதிப்பதற்கான வாய்ப்பை நீண்ட காலம் எதிர்நோக்கியிருந்த புரூக்ஃபீல்டு நிறுவனம், சர்வதேச அளவில் 330 பில்லியன் டாலர்களுக்கும் அதிகமான சொத்துகளை நிர்வகித்து வருகிறது.
 
இந்த நிறுவனம், ஏற்கெனவே கடந்த ஆண்டு ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவன அதிபர் முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்பத்துக்குச் சொந்தமான ஈஸ்ட் வெஸ்ட் பைப்லைன் நிறுவனத்தை 2 பில்லியன் டாலருக்கு வாங்கியிருந்தது.
 
ஆந்திரப் பிரதேசத்தின் காக்கி நாடாவையும் குஜராத்தின் பரூச் என்ற பகுதியையும் இணைக்கும் வகையில் சுமார் 1,400 கி.மீ தூரத்திலான இணைக்கும் வகையில் இயங்கிய ஈஸ்ட் வெஸ்ட் பைப்லைன் நிறுவனம், நஷ்டத்தைச் சந்தித்து வந்ததால், அந்த நிறுவனம் புரூக்ஃபீல்டுக்குக் கை மாறியது.
 
இது தொடர்பான ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும், பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்து ஒப்பந்தம் கையெழுத்தானால் அது இந்தியாவின் மிகப் பெரிய தனியார் ‘இணைப்பு மற்றும் கையகப்படுத்துதல்’ (Mergers and acquisitions- M&As) ஒப்பந்தங்களில் ஒன்றாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.
 
அண்மையில்தான் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், தனது செல்போன் டவர்கள் மற்றும் ஃபைபர் ஆப்டிக் கேபிள் சேவை அளிப்பதை இரண்டு தனித்தனி நிறுவனங்களாகப் பிரிக்க உள்ளதாகத் தெரிவித்திருந்தது.
 
இந்த நிலையில், இவ்விரு நிறுவனங்களுக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகிவிட்டால், ஜியோ நிறுவனத்தின் உட்கட்டமைப்பு சொத்துகளைக் கைப்பற்றுவதன் மூலம், இந்தியாவின் மிகப் பெரிய உட்கட்டமைப்புச் சேவை நிறுவனமாக புரூக்ஃபீல்டு நிறுவனமாக உருவாகிவிடும். இதன் மூலம் குறைந்த விலைக்கு 4ஜி ஸ்பெட்ரம் அலை ஓதுக்கீட்டை ரிலையன்ஸ் நிறுவனம் வாங்கி அதை இப்போது அதிக விலைக்கு புரூக்ஃபீல்டு பனனாட்டு நிறுவனத்துக்கு விற்க்கும் விஞ்ஞானபூர்வ ரிலையன்ஸ் ஊழலுக்கு துணை போகிறதா மோடியின் பாஜக அரசு என்ற கேள்வியை சட்ட வல்லுனர்கள் வைத்து உள்ளது குறிப்பிடதக்கது