ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளுக்கான தரநிலைப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
 
இந்தப் பட்டியலில் இந்திய அணி வீரர்கள் ஆதிக்கம் செலுத்தியுள்ளனர்.
 
அதன்படி பேட்டிங்கில் 887 தர மதிப்பீட்டு புள்ளிகளுடன் விராட் கோலி முதலிடத்திலும், 854 புள்ளிகளுடன் ரோகித் ஷர்மா இரண்டாவது இடத்திலும் உள்ளனர்.
 
மூன்றாவது இடத்தில் நியுசிலாந்தின் டைலர் இங்கிலாத்தின் ஜோ ரூட்டு நான்காவது இடத்திலும் உள்ளனர். இந்திய வீரர் ஷிகர் தவான் 744 தர மதிப்பீட்டு புள்ளிகளுடன் 10 இடத்திலும், முன்னாள் கேப்டன் தோனி 688 தர மதிப்பீட்டு புள்ளிகளுடன் 17 இடத்திலும் உள்ளனர்.
 
பந்துவீச்சாளர்களில் 808 புள்ளிகளுடன் பும்ரா முதலிடத்திலும், 788 புள்ளிகளுடன் ஆப்கானிஸ்தான் வீரர் ரஷீத் கான் இரண்டாவது இடத்திலும் உள்ளனர்.
 
குல்தீப் யாதவ், சாஹல் ஆகியோர் பந்துவீச்சாளர்களுக்கான தரநிலையில் நான்காவது, ஐந்தாவது இடத்தில் இருக்கிறார்கள்.
 
ஆனால் ஆல் ரவுண்டர்களில் இந்திய வீரர்கள் யாரும் இடம்பிடிக்கவில்லை. முதலிடத்தில் ஆப்கானிஸ்தானின் ரஷித்கானும், இரண்டாவது இடத்தில் வங்கதேச அணியின் ஷாகிப் அல் ஹாசனும், மூன்றாவது இடத்தில் ஆப்கானிஸ்தானின் முகமது நபியும் இடம்பிடித்துள்ளனர்.
மேலும் ஒருநாள்‌ கிரிக்கெட் தர வரிசையில் இந்திய அணி இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
 
நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான தொடர்களைப் கைப்பற்றி‌யதை அடுத்து 122 புள்ளி‌களோடு இந்திய அணி இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இங்கிலாந்து அணி 126 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது என்பது குறிப்பிடதக்கது .