இலங்கையின் புதிய பிரதமராக, ராஜபக்சே நேற்று பொறுப்பேற்றார். ராஜபக்சே தனது பெரும்பான்மையை நிரூபிக்க வசதியாக, வரும் 16ம் தேதி வரை நாடாளுமன்றத்தை முடக்கி வைக்கப்படுவதாக அதிபர் சிறிசேனா அறிவித்தார்.
இதற்கிடையே, ரணில் விக்ரமசிங்கே பதவி பறிப்புக்கும், நாடாளுமன்ற முடக்கத்திற்கும் சபாநாயகர் ஜெயசூர்யா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அதேபோல, பிரதமர் பதவியிலிருந்து தன்னை நீக்க அதிபருக்கு அதிகாரம் இல்லை எனவும், பெரும்பான்மை பலம் தனக்கு இருப்பதாகவும் ரணில் விக்ரமசிங்கே கூறி வருகிறார். இதன் காரணமாக இலங்கையில் உச்சக்கட்ட அரசியல் குழப்பம் நீடித்து வருகிறது.
இலங்கையில் நாடாளுமன்றத்தை கூட்ட வலியுறுத்தி பெரும் அளவில் போராட்டம் நேற்று நடைபெற்றது. இந்நிலையில் பிரதமராக பொறுப்பேற்ற ராஜபக்சேவுக்கு எதிராக இன்று ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கண்டன பேரணி நடத்தினர்.
தில் ஐக்கிய தேசிய கட்சியினர் லட்ச்கணக்கில் கலந்து கொண்டனர். இப்பேரணிக்கு , ரணில் விக்கிரமசிங்கேவுக்கு ஆதரவாக அமெரிக்க தூதரகம் நேற்று பிற்பகலில் மூடப்பட்டது.
அமெரிக்க தூதரகம் மூடப்பட்டதை அறிந்த அதிபர் சிறிசேனவுக்கும், ராஜபக்சேவுக்கும் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது.