தென்மேற்கு வங்கக் கடலில் நிலவிவரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு என சென்னை வானிலை மையம் தகவல் அளித்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த 48 மணி நேரத்திற்குத் தென் தமிழகத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

மேலும் கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, விருதுநகர், தேனி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என அறிவித்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்திற்கு வட தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் வறண்ட வானிலையும் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசான மழையும் பெய்யும்.

தமிழகத்தில் உள்ள கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யும் எனத் தெரிவித்துள்ளது.

சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

UPSC- (Union Public Service Commission)-ல் வேலைவாய்ப்பு